நீ
பார்க்க வேண்டுமென்றே – நான்
நிலம் பார்க்க நடந்தேன்.

நீ பேசும்போதெல்லாம் – நான்
பேசாமலிருந்தேன் – கோபித்து அல்ல
உன் கோபத்தைக் கண்டு ரசிக்கத்தான்.

நீ
சிரிக்கும் போதெல்லாம் – நான்
கடிந்துகொண்டேன் – கட்டுப்பாடாக அல்ல
உன் சிரிப்பை மற்றவர்கள் கவராதிருக்கத்தான்.

நீ
என் தோழிகளுடன் பேசுவதை – நான்
அனுமத்திதேன் – அனுதாபப்பட்டல்ல
அப்போது நீ கடைக்கண்ணால் பார்ப்பதை – நான்
ஈர்ந்து கொள்ளத்தான்.

நீ
என்மேல் ஆசைப்படுவது தெரியாமலல்ல – ஆனாலும்
பொறுத்திருந்தேன் – எதற்காகத் தெரியுமா?
உன்மேலுள்ள என் காதல் வளரட்டும் என்றுதான்!

 

காதல் சொல்லி வரும் ஆணை, காதலிக்கத் தொடங்கும் பெண் மனது.

One Reply to “சீண்டல்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image