-
ஊடக மின்னஞ்சல் தளம்
இது அரசியல் ரீதியாகவோ (அ) கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்தலாம். ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அனேகமாக பிரசுரிக்கப்படுவதில்லை. இதிலும் பத்திரிகை ஆசியரின் மின்னஞ்சல்களை எடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். பல வாசகர்களுக்கு கருத்து/ பிழையைச் சுட்டிக்காட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுதத் தோன்றினாலும், அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாமையால் அப்படியே கைவிட்டுவிட நேரிடலாம். இதற்காக ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படல் வேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும் ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல்கள் பிரசுரிக்கப்படக் கூடாது. அதாவது, ஒரு பயனர், இந்த இணையத்தளத்திற்கு வந்து எந்த ஊடக நிறுவனத்திற்கு, அதில் எந்த ஊடகவியலாளருக்கு [பெயர்] என்று தெரிவு செய்தி நேரடியாக கடிதத்தை எழுதி இணையத்தளத்திலிருந்தே அனுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கு என்று கூட பிரித்து ஆவணப்படுத்தலாம். இந்த சேவையை பலர் உபயோகிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதாவது, அரசியல் ரீதியாக மின்னஞ்சல் எழுத, தமிழர்கள், சோமாலியர்கள், மற்றும் பல அரசியல் குழறுபடிகள் நடைபெறும் பிரதேச மக்கள் இதை உபயோகிப்பார்கள். இதைத் தவிர, ஊடகத்…
-
திரை இல்லாமல் 3D படம்
திரை இல்லாமல் முப்பரிமாணப் [3D] படம் காண்பிக்கலாம். இப்போது எவ்வாறு திரையில் காண்பிக்கப்படுகிறது? ஓவ்வொரு படமும் பல கோடி புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒளிக்கீற்று ஒவ்வொரு புள்ளிக்கென்று முன்பிருக்கும் திரையில் பாய்ச்சப்படுகிறது. அந்த ஒளிக்கீற்று படும் இடத்தில் அந்த புள்ளி உருவாகிறது. இப்படி பல கோடிப் புள்ளிகள் உருவாகும்போது சாதாரண கண்களுக்குப் படமாகத் தெரிகிறது. ஆனால், திரை இல்லாமல் எப்படி செய்வது? ஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால்? அதாவது, ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் பொருத்த வேண்டும். நடுவில் பிம்பம் தெரிய வைக்கலாம். இது ஒரு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும். எங்களுக்கு எங்கே புள்ளி உருவாக வேண்டுமோ [அதாவது on the air – no screen], அதை நோக்கி இந்த ஒளிக்கீற்று பாய்ச்சிகளை பாய்ச்ச வேண்டும். இரண்டு மூன்று ஒளிக்கீற்றுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அதில் ஒரு புள்ளி உருவாகும். பிறகென்ன, ஒரு பிம்பமே இப்படி உருவாக்கலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன…
-
பல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்
ஏற்கனவே பல நிற ஒரு பெயின்ற் பதிவைப் படித்திருந்தால் இந்த ஐடியா கிட்டத்தட்ட அதே மாதிரித் தான். பெயின்றில் மினுங்கும், அதாவது வீட்டிற்கு பெயின்ற் அடித்தால், அதை எந்த திசையில் இருந்து பார்ப்பது என்பதைப் பொறுத்து அதன் நிறம் வேறுபட்டுத் தெரிய வைக்க, பதார்த்தம் சேர்க்க வேண்டும். நான் திசை என்றவுடன் என்ன வடக்கு கிழக்கு என்று சாத்திரம் போல் இருக்கிறது என்று வாஸ்து சாத்திரியாக எண்ண வேண்டாம். பார்ப்பவர் நிற்கும் angle ஐப் பொறுத்து அடித்த பெயின்றின் நிறம் மினுங்கும். இங்கு கனடாவில் சில மோட்டார் வண்டி [car] களிற்கு இப்படி பெயின்ற் அடித்திருக்கிறார்கள். ஓடிக்கொண்டு போகும் போது நிறங்கள் மாறி மாறி மினுங்கும்.. இப்படியான நிற மினுங்கலை நீங்கள் விளம்பர அட்டைகளில் கண்டிருக்கலாம். சில மட்டைகளை கையில் வைத்து அப்படி இப்படி என்று அசைக்கும் போது அதன் நிறம் மாறி மாறி மினுங்கும். அட அதைத் தானுங்க சொல்லுறன்.
-
பல நிற ஒரு பெயின்ற்
வீட்டுக்கு நீங்கள் பெயின்ற் வாங்கும் போது உங்களுக்கு விருப்பமான பெயின்றைக் கஷ்டப்பட்டு தெரிவுசெய்து அடிப்பீர்கள். அந்தக் நிறம் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். சலிப்பாகிவிட்டால் திரும்பவும் ஒரு பெரிய செலவு/ வேலை. ஒரு பெயின்ற் ஆனால் அது நிறம் மாறும். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? இது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களே இதைச் செய்ய முடியும். அதாவது சுற்றுப் புறச் சூழலின் வெட்ப தட்ப நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடிய பதார்த்தங்களை பெயின்றில் கலக்கலாம். நன்கு வெக்கையான நேரங்களில் கறுப்பு நிறமாகவும், நன்கு குளிர்மையான நேரங்களில் வெள்ளை நிறமாகவும் மாறுவது போல் செய்யலாம். இந்த இரண்டு நிறங்கள் மட்டுமல்ல, வேறு பல நிற பெயின்ற் கூட தயாரிக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டிற்கு பெயின்ற் அடிக்கிறீர்கள். காலையில் மங்களகரமாக, மஞ்சள் நிறம் மதியம் ஒரு நீல நிறம் பின்னேரம் ஒரு பச்சை நிறம் இரவு ஒரு வெள்ளை நிறம் அட மழை பெய்தால் அது மண்ணிறம் [நீர் சேர்ந்தால் நிறம் மாறும் பதார்த்தம் சேர்க்க வேண்டும்] அட…