எது வேண்டும்?

கடவுள் வந்து என்னைக் கேட்டார் கவிதையா? கை பிடித்தவளா? கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன் கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்

கோபம்

உன் காதலில் தோற்றுப் போனது பாவமாய் இருக்கிறது கொஞ்சமாவது அனுமதியேன் 2007/12/28

பிள்ளை

நான் பாவம் ஒரு இராட்சசியின் பிடியில் சிக்கித் தவித்தேன் புதியதொரு குட்டிச் சாத்தானைக் கொண்டுவர 2007/12/27  கெட்ட வார்த்தையில் திட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அன்போடு கூப்பிடுகிறேன்.

ஒரு கவிதை

உருவமில்லா கடவுளுக்கும் நேர்மையில்லா காதலிக்கும் அன்பில்லா காதலிக்கும் ஏமாற்றுக் காதலிக்கும் விருப்பமில்லா காதலிக்கும் விளையாட்டுக் காதலிக்கும் காதலிக்கும் தோழமைக்கும் வாழ்க்கையின் வளிகாட்டிக்கும் காமனவன் விளையாட்டுக்கும் சோகத்தின் வெளிப்பாட்டுக்கும் […]