ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு ஆண்டும்
எனை நானே சுழன்று கொண்டு
உன்னையும் சுற்றுகின்றேன்.
ஏனென்று எனக்கே தெரியவில்லை.
உனைக் காண ஓடோடி வந்து
ஓடாய்த் தேய்ந்து உனக்குள் ஐக்கியமாக முற்படுகிறேன்.
ஆனால், பாழாய்ப்போன சோலிகள் பல – எனை
பாழாய்ப்படுத்திப் பிரிக்கிறதே.
தூரப் போய் காணாமல் போகாமல்
அலை அலையாய் இழுக்கப் பார்க்கிறேன்
ஏதோ ஒரு காந்தம்
உனக்கும் எனக்கும்
என்னை பிரிய விடாமல் தடுக்கிறது.
மீண்டும் மீண்டும் இதே இழுபறி.
பரவாயில்லை;
என்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
திரும்ப திரும்ப வருவேன்.
உன்னை சுற்றி சுற்றி வருவேன்
ஒரு நாள் வரும். ஒரு நாள் வரும்
அந்த நாள் – நீ என் சூரிய கிரகணமே.

பிறவித் திருநாள் வாழ்த்துகள் – என்
எல்லாமான‌வ‌ளே

இந்த சுழற்சியில்,
ஓரக் கண்ணிலாவது உன்னை
எப்பொழுதும் வைத்திருக்கிறேன் – என்பதில்
எனக்கோர் மகிழ்ச்சி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image