கருங்கூந்தல் காட்டுக்குள்
காணாமல் போன எனக்கு
கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக்
கண்களைப் பின் தொடர்ந்தேன்
நெடுந்தூரப் பயணத்தில்
களைத்துப் போன என் ஏக்கத்திற்கு
நீ விட்ட மூச்சுக் காற்று
புத்துணர்ச்சியாய் இருந்தது
அலைமோதிக் கொண்டிருந்த இதயத்திற்கு
என் உயிர்க் கப்பலை கரை சேர்த்தது
நீ சிந்தாமல் சிந்திய
ஒரு சொட்டுப் புன்னகை
தவறிப் போன கால்களுக்கு
வழி காட்டிய வட்ட நிலாவோடு
கிட்டப் பேச ஆசைப்பட்டு
எட்டி நடந்த என் கால்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்துவிட்டானே – அவளின்
மொட்டை அண்ணன்
பெண்ணைப் பின் தொடரும் ஆண்.