மணந்தால் நீ
இல்லையேல் மரணம் – என்று
கூறமாட்டேன் – அது
இயலாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மனதில் நீ – என்று
கூறமாட்டேன் – அது
நம்பிக்கை இல்லாதவன் கூற்று
மணந்தால் நீ
இல்லையேல் மற்றொருத்தி – என்று
கூறமாட்டேன் – அது
மோசடிக்காரன் கூற்று
இக் கவிதைக்கு முடிவை இன்னும் எழுதவில்லை. உங்களுக்கு சுவாரசியமான / திருப்புமுனையான / வித்தியாசமான முடிவு தோன்றினால், பின்னூட்டமாக இடவும்.
ஒரு நண்பி எழுதி அனுப்பிய முடிவு:
மணந்தால் நீ இல்லையெல் – மலரே
நீ எந்நாளும் மணம் வீச
போராடுவேன் – ஏனெனில்
நான் உன் காதலன்
ஆனாலும்
மணந்தாலும் நீ மணக்காவிட்டாலும்
காதலித்துகொண்டே இருப்பேன்
உன்னையல்ல, என்னை – என்னில் உள்ள உன்னை
ஏனெனில் நான் ஒரு புரட்சிக் காதலன்.
இன்னொரு நண்பி எழுதி அனுப்பிய முடிவு:
மணந்தால் நீ
இல்லையேல் போராடுவேன் – என்று
கூறமாட்டேன – அதை
செயலில் காட்டுவேன்
நீங்கள் எழுதியவைதான் மோசம் என்றால் இவர்கள் அதை விட மோசம்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//
முந்தைய பதிவு ஏன் உங்கள் கவிதையினை மோசம் என்பது மட்டும் விளங்கவில்லை!!
//
எனினும்…எனது எண்ணங்கள்!!
இக்காதலனை சில கதாபாத்திரங்களில் கற்பனை செய்த போது தோன்றியவை…
காதலனாய்..
மணந்தால் நீ – இல்லவிட்டாலும்;
காதலின் முடிவுரை – திருமணம்
மட்டுமல்ல என்பதை மட்டும்
மனதில் கொள்!!
கவிஞனாய்..
மணந்தால் நீ – எனை
மணந்தால் நாம் – எனை
மறுத்தால் நீயாக
நான் நானாக!!
யதார்த்தமாய்..
மணந்தால் நீ
மறுத்தால் நீ
காலத்துடன் நான்
காதலுடன் நான்
ஐயா, முதலில் உங்கள் வ்ருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.
உங்கள் ஒவ்வொரு கோணத்தின் பார்வைகளும் அற்புதமாய் இருக்கின்றது. கவிஞனாய் வடித்துள்ளது என்னைக் கவன்றுள்ளது.
_______
CAPital
மணந்தால் நீ, இல்லையேல் காதலி_ என்று, கூறமாட்டேன்_ அது, ஆற்றாதவன் கூற்று, மணந்தால் நீ, இல்லையேல் மதிப்பில்லை_என்று, கூறமாட்டேன்_அது,கோளையின் கூற்று, பிடித்தால் நீ, இல்லையேல் போதை_என்று, கூறமாட்டேன்_அது, பயித்தியத்தின் கூற்று, மணந்தால் நீ, இல்லையேல் செருப்பாவேன் _என்று, கூறமாட்டேன்_அது,மோசடிக் கூற்று, மணந்தால் நீ, இல்லையேல் அவமானம்_என்று, கூறமாட்டேன்_அது, இயலாதவன் கூற்று, மணந்தால் நீ, இல்லையேல் வாழ்விலை_என்று, கூற்மாட்டேன்_அது, ஆண்மைய(அ)ற்றவ்ன் கூற்று,மணந்தால் நீ, இல்லையேல் சுவாசத்தில்நீ_என்று, கூறமாட்டேன்_அது,வியாபித்திருப்பதால், மணந்தால் நீ, இல்லையேல் வாசனைபோகு(ம்)_என்று, கூறமாட்டேன்_அது,வாசனைகள்பல உண்டுஎன்பதேஎன்கூற்று, மணந்தால் நீ,இல்லையேல் வேறுமல(இ)ரில்லை_என்று,கூறமாட்டேன்_அது,இயற்கையின் கூற்று.மணந்தால் நீ,இல்லையேல் இயற்கைவாசனை,இல்லை_என்று,கூறமாட்டேன்,இதனால் லெ(எ)ம் வாசனைகள்,இல்லைதான் _என்று,யாருங் கூறமாட்டா, மணந்தால்மணம் உன்போல,இல்லை_ யெ(எ)ன்று, யார்கூற_அது, நியமாகும் நீயேசொல்வாய். ” நீயே சொல்வாய்” +கா.சிவா+(பிறாண்ஸ்)