கவிஞன் சொன்னான்
காதல் என்று
கடவுள் சொன்னான்
அன்பு என்று
நண்பன் சொன்னான்
ஆசை என்று
மற்றவன் சொன்னான்
மோசம் என்று
தோற்றவன் சொன்னான்
கசக்கும் என்று
வென்றவன் சொன்னான்
இனிக்கும் என்று
கண்டவன் சொன்னான்
காமம் என்று
நாம் சொல்லிறோம்
இல்லை இல்லை – அது
அவஸ்தை என்று
பாடசாலையில் பயிலும்போது, “ஈழ மாலை ’98” (மார்கழி 04) என்னும் நிகழ்ச்சிக்காக எழுதியது. அந் நிகழ்ச்சியில் வந்த நாடகத்தின் தலைப்புக் கவிதையாக எனது நண்பன் வாசித்தான். எனது கவிதை பலர் முன் வாசிக்கப் பெற்றதை எண்ணி பெரும் மகிழ்ச்சி.
நானும் கவிஞனானேன்!