War of Tamil Eelam
-
கரும்புலித் தாக்குதல் தப்பா?
ஐயா… போர் என்று வந்தால், நியாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா? போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும். புலிகள் மறைந்திருந்து தான் தாக்குகிறார்கள். இலங்கை இராணுவம் மட்டும் அந்தக் காலத்தில் போர் புரிவது போல் ஒர் அறிக்கை விட்டு, இந்த இடத்தில் தான் போர் நடக்கும் என்று தெரிவித்து, அந்த நேரத்திற்கு அங்கு சென்று, ஒழுங்கு வரிசையாக நின்று தலைவனின் கட்டளையின் பின் ஒவ்வொரு படையாக எதிரி நோக்கி சுட்டு, பின் அந்த படை நிற்க எதிரி படை சுட ஒரு நேரம் கொடுத்து, அவர்கள் சுடவும் ஓடி ஒழியாமல் அந்த இடத்திலேயே இருந்து சூடு வாங்கி இறக்க, எஞ்சி உள்ள படை திரும்பவும் தங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று மீண்டும் எதிரி மீது தலைவனின் கட்டளையின் பின் சுட்டு… இப்படி மாறி மாறி நடக்குமானால் போரில் நியாயம், அனியாயம் பற்றிக் கதைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் எந்த இராணுவமும் இப்படி செய்வது இல்லை. தற்கொலைத் தாக்குதல் நியாயமில்லை என்று…
-
இந்தியாவின் புலி – 2
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அமெரிக்காவின் அயல்நாட்டு உறவுகள் போல் இல்லாமல் இந்தியாவிற்கு அயல்நாடுகள் அத்தனையும் பகைமை நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுடன் போர் நடந்து இப்போது தான் சற்று தொடர்புகள் தொடங்கியிருக்கின்றன, சீனாவுடனும் போர் நடந்தது. மூன்று நாடுகளுக்குமிடையேயான தரைமார்க்க வழிகள், அண்மைக்காலம் வரை மூடிக்கிடந்தன. பூட்டான், நேபால் நாடுகளுடன் கூட சுமூகமான தொடர்பில்லை. இந்தியாவின் வடக்கில் அப்படி என்றால் தெற்கில் தமிழீழத்துடன் போர். இந்தியாவின் அயலவர்களில் பலம் மிக்க நாடுகளுடன் பகைமை, தமிழீழத்தைத் தவிர்த்து. அப்படிப் பார்த்தால் தமிழீழமும் ஏதோ ஒரு விதத்தில் பலம் மிக்க நாடு என்று கொள்ளலாம். இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகள் மிகவும் தவறானதாகவே காணக்கிடக்கிறது. அயலவர்களைக் கெடுத்து தாம் முன்னேற வேண்டும் என்பது போல் தான் இந்திய அரசியலாளர்களின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். வரலாறு சொல்கிறது இந்தியா ஒரு அகண்ட பாரதமாக முன்பொருகாலத்தில் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் வளம் மிக்க, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக இருக்கவே கொலம்பஸ் இந்தியாவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவில், இந்தியா என்று…
-
புலி பற்றிய தமிழ் நாட்டுத் தமிழர் நிலைப்பாடு
இது ஒரு மிகவும் சிக்கலான விடயம். இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது. ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும், பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது] எல்லா செய்தி ஊடகங்களும் செய்துவிட்டன. இதனால், ஈழத்தமிழர்கள் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சொன்னால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாங்கள் ஏதோ வேண்டுமென்று இந்தியா மீது பழி போடுவதாக எண்ணுகிறார்கள். எங்களுக்கு ஈழத்தின் மேல் உள்ள பாசம் போல் அவர்களுக்கு இந்தியா மேல். தமிழ் நாட்டு தமிழனையையும் கோபிக்கக் கூடாது இந்தியாவையும் நண்பனாக நம்பக் கூடாது. இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது. இதற்காக தமிழ் நாட்டு தமிழனுடன் தர்க்கம் செய்து அவர்கள் மனதை புண்படுத்தினால், அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும். இந்தியா அயலவரான தமிழீழத்தைப் பகைத்துக்கொண்டது போல் தமிழீழம் அயலவரான தமிழ் நாட்டை எக்காலத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தலைவர் சிங்களவர்களையே எதிரியாக நினைக்காமல் சிங்கள அரசை…
-
இந்தியாவின் புலி – 1
அன்று தமிழன் துன்பப்படுகிறான்; குண்டர்களால் அகிம்சைப் போராட்டங்கள் குலைக்கப்படுகிறது; இன வெறியர்களால் இலங்கை முழுவதும் சிங்கள அரசாங்கத்தின் உதவியுடன் கொல்லப்படுகிறான்; என்று மிகவும் இரக்கப்பட்டு உதவியது இந்தியா. சிங்கள காடையர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக தேடி வந்து கொன்று குவித்த இனக் கலவரங்கள். தமிழனைக் கொன்று தீயிலே தீக்கிரையிட கண்டும் காணாததும் போல் இருந்தது சிங்கள அரச காவல்துறை. இதைக் கண்டு பொறுக்காத தமிழனின் தாய்நாடான இந்தியா; அகிம்சையை உலகுக்கு போதித்த இந்தியா அயல்நாட்டு தமிழனுக்கு பயங்கரவாதத்தைப் பழக்கியது. அவை தான் தமிழீழ விடுதலை இயக்கங்கள். பண உதவி தொடக்கம் ஆயுதப் பயிற்சி வரை சகலதையும் தமிழீழ இளைஞர்களுக்கு கொடுத்தது; ஆயுதங்கள் இலவசமாக கையளிக்கப்பட்டன. ஆல விதையில் தோன்றிய ஆலமரமாய் இன்று இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கூட இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்டவர் தான். உலகில் வேறெங்கும் நடைபெறாத முறையில் வளர்த்த தந்தையின் மார்பில் பாய்ந்து இரத்தம் குடித்தது இந்தியா வளர்த்த புலி. அத்தோடு இந்தியத் தமிழனுக்கும் தமிழீழத் தமிழனுக்கும் இருந்த பெருந்…
-
To Win LTTE
When British left Sri Lanka (SL), Sinhalese must have got a written document stating that Tamils do not have rights to any governmental issues. When India divided its country into provinces and gave regional rights, Government of Sri Lanka (GoSL) should have done that. If GoSL did like that, then as the founder of Singapore envied, GoSL would have been a much better state. Please note that India have only one language as the national language, while every region has its own state official language. It would have been much the same way and Sinhalese would have had the Sri Lanka as one state. Moreover, since the majority of the…
-
ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?
ஐயா அகிம்சை வழி பேசும் இந்தியனே, காந்தியைக் கொன்றபின்னே காந்தியின் அகிம்சை வழியையும் கொன்றுவிட்டீர்கள். பாகிஸ்தானுடன் போர், பங்களாதேஷுக்கு படை அனுப்பு உதவி, பஞ்சாப்பில் படுகொலைகள் இலங்கையில் படை அனுப்பி அட்டூழியம் எல்லாம் செய்துவிட்டு, நாங்கள் அகிம்சாவாதிகள் எங்களைப் போல் பின்பற்றுங்கள் என்று பேதை போல் பிதற்றாதீர்கள். ஏன் இப்போது கூட பாகிஸ்தான் படையை பின்வாங்கினால் தான் நாங்களும் படையைப் பின் வங்குமோம் என்று அடம் பிடிக்கிறீர்கள். கார்கிலில் பல உயிர்கள் இழப்பை அகிம்சைவழியிலா இழந்தீர்கள்? அகிம்சை வழியில் போகவேணும் என்று நினைத்திருந்தால் ஏன் இந்தியா அணுகுண்டு தயாரித்தது? ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தும் அணு குண்டை செய்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செய்தவர்கள் தானா அகிம்சாவாதிகள்? நாங்கள் தமிழன் என்பதால் எங்களுக்கு வேறு நீதியோ? இருக்கலாம் தமிழன் பாவப்பட்ட ஜென்மம் தானே. நான் புலிகள் செய்வது முற்றுமுழுதக சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியா ஒன்றுமே செய்யவில்லை, புலிகள் தான் முதுகில் குற்றிவிட்டார்கள் என்று சொல்வதைத் தான் பிழை என்கிறேன்.…
-
ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?
Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander says this after his retirement: How did the IPKF, sent to enforce peace, get involved in a bloody fight with the LTTE? Do you personally believe that it could have been prevented? One afternoon I was in my operations room when then vice chief of army staff (S F) Rodrigues came. Later he became [army] chief. He talked of hard options. I advised him against it. I told him, If you adopt hard options you would be fighting for the next 10 to 20 years. And this will lead to insurgency and there is no stopping it. You are…
-
ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ? [02]
இந்தியா உணவுப் பொட்டலம் போட்டதாம் தமிழருக்கு. நானும் யாழ்ப்பாணத்தில் தான் வசித்தேன் அக்கால கட்டத்தில். அங்கு எவருக்கும் அப்படி ஒரு உணவுப் பொட்டலம் கிட்டியதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகையில் போட்டிருந்தார்கள், இந்தியா காட்டுப் பகுதிகளாய்ப் பார்த்து போடுகிறதாம் என்று. ஏதோ போட்டார்களே, அதில் சந்தோசப்பட்டுத் தான் ஐயா, நாங்களும் நம்பினோம். இந்தியா தமிழருக்கு உதவத் தான் வந்தது என்று. ஆயுதங்களைக் ஒப்படைக்க வைத்து, நிராயுதபணியாக சென்றவர்களைப் காப்பாற்றாமல், இந்தியாவின் பிச்சையை [அரசியல் பரிந்துரை, இந்தியா தன் மாகாணங்களுக்கும் குறைவான கட்டமைப்பையே பரிந்துரைத்தது] ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எத்தனை எத்தனை புலி வீரர்களை கொன்றார்கள். எவ்வளவு சித்திரவதைகள் எமக்கு. கிழவி என்று கூட பார்க்காமல் கற்பழித்த நாசகார கும்பல். இலங்கை இராணுவம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொண்டதில்லை முன்பு. உணவுப் பொட்டலத்தை பார்த்தேனோ இல்லையோ, செய்ன் ப்லொக்ஸைப் முதன் முதலில் பார்த்தது இந்திய இராணுவத்தால். இலங்கையில் “கன்டோஸ்” என்று ஒரு சாக்லட் வாங்கினால் அதனுடன் ஒரு ஸ்ரிக்கர் [sticker] வரும். அதில் வந்த செய்ன் ப்லொக்ஸைப் [chain blocks]…
-
ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? … [01]
“Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and Indias stand. If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.” – Major General Harkirat Singh, the Indian Peace Keeping Forces first commander http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm பல இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல், புலிகள் இந்திய-இலங்கை ஒப்பந்ததில் கையொப்பமிடவில்லை. தலைவரை விடுதிக் காவலில் [Hotel Arrest] வைத்திருந்தே ராஜீவ் காந்தியும், J.R. ஜெயவர்த்தனாவும் கையொப்பமிட்டார்கள். தமிழருக்கு உண்மையிலேயே உதவத் தான் இந்தியா வருகிறதென்றால், ஏன் இவ்வாறு ஒரு கபட நாடகம் ஆடவேண்டி இருந்தது? தலைவர்…
-
நாதியற்ற தமிழர் நாம் – 4
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள். இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது. இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும். தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள்…