LTTE

 • Government of Tamil Eelam,  LTTE,  Tamils

  The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு

  த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம். இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம். ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார் ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத்…

 • LTTE,  Tamil Eelam,  Tamils

  தமிழீழ அரசு நோக்கிய பயணம்

  சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள். இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும். தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும்.  இதைத் தான் இல‌ங்கை/  இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது.  நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்க‌ள் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்; அல்ல‌து அவ‌ர் உண்மையில் இற‌ந்துவிட்டார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம். உங்க‌ள் ந‌ம்பிக்கை எதுவாயினும் த‌ற்போது த‌மிழீழ‌ம்…

 • LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam

  புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?

  புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது. அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது. இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது? புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.

 • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  Tamils

  தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

  கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று. சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?] எப்படி ஐயா இதெல்லாம் முடியுது? உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 • India,  LTTE,  Tamil Nadu

  ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?

  இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா. உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள். தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?

 • LTTE,  Tamil Eelam

  த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

  இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து. என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே]. த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து. என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள். இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம். எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின். த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

 • LTTE,  Tamil Eelam,  Tamils

  மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

  மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம். நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை. வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார். இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள்…

 • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamils

  இந்தியாவின் உத‌வி

  ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன். த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌. த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும். என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும். இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை. ச‌மாதான‌…

 • LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam,  தமிழ் கதைகள்

  வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!

  ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை. ஆண்டவனைப் பிரார்த்திப்போம். எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. ஒருவர் சரியான சாமி பக்தனாம்.  அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம்.  அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம்.  ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம். மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார்.  இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை…

 • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

  தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

   மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள். இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா? http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8 http://www.youtube.com/watch?v=hasE1peFrd4 http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

© 2023 - All Right Reserved. | Adadaa logo