India,  LTTE,  War of Tamil Eelam

இந்தியாவின் புலி – 2

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அமெரிக்காவின் அயல்நாட்டு உறவுகள் போல் இல்லாமல் இந்தியாவிற்கு அயல்நாடுகள் அத்தனையும் பகைமை நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுடன் போர் நடந்து இப்போது தான் சற்று தொடர்புகள் தொடங்கியிருக்கின்றன, சீனாவுடனும் போர் நடந்தது. மூன்று நாடுகளுக்குமிடையேயான தரைமார்க்க வழிகள், அண்மைக்காலம் வரை மூடிக்கிடந்தன. பூட்டான், நேபால் நாடுகளுடன் கூட சுமூகமான தொடர்பில்லை. இந்தியாவின் வடக்கில் அப்படி என்றால் தெற்கில் தமிழீழத்துடன் போர். இந்தியாவின் அயலவர்களில் பலம் மிக்க நாடுகளுடன் பகைமை, தமிழீழத்தைத் தவிர்த்து. அப்படிப் பார்த்தால் தமிழீழமும் ஏதோ ஒரு விதத்தில் பலம் மிக்க நாடு என்று கொள்ளலாம்.

இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகள் மிகவும் தவறானதாகவே காணக்கிடக்கிறது. அயலவர்களைக் கெடுத்து தாம் முன்னேற வேண்டும் என்பது போல் தான் இந்திய அரசியலாளர்களின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். வரலாறு சொல்கிறது இந்தியா ஒரு அகண்ட பாரதமாக முன்பொருகாலத்தில் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் வளம் மிக்க, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக இருக்கவே கொலம்பஸ் இந்தியாவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவில், இந்தியா என்று நினைத்துத் தான், தரையிறங்கினார். இந்தியா தான் இலக்கு என்று இந்தியாவை தேடி ஒரு கடற்பயணம் மேற்கொள்ளுமளவிற்கு இந்தியா பெரிதாக இருந்திருக்க வேண்டும்; இன்றைய காலத்தில் ஈழ அகதிகள் மேற்கத்தேய நாடுகளுக்கு பல சிரமங்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் செல்வதுபோல்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியம் போல் இந்தியாவும் ஒரு “இந்திய ஒன்றியம்” என்று உருவாக்கியிருக்க வேண்டிய தேசம். அன்றைய அகண்ட பாரதம் இன்று மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும். பிராந்திய வல்லரசான இந்தியா இதை முன்னெடுத்துச் சென்றால், மற்றய நாடுகள் தானாக வந்து இணைந்திருக்கும், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதுபோல். ரூபா அகண்ட பாரதத்தின் புழக்கப் பணமாக இருக்குமானால் நாம் எல்லோருக்கும் தானே பெருமையாக இருந்திருக்கும். மாறாக அயல் தேசங்களுடன் வஞ்சம் வளர்த்திருக்கிறது. இது நம் இரத்தத்திலேயே ஊறிப்போன விடயம் தான். அடுத்த வீட்டுக்காரனின் விடயங்களில் மூக்கை நுளைத்து அவனை கெடுத்து அதில் சந்தோசப்படும் பேர்வளிகள் அதிகமாக இருக்கும் இனம் தானே நாம். மேலத்தேய நாட்டவர்களில் இது மட்டும் இல்லை. அவர்கள் தாங்கள் எவ்வாறு முன்னேறலாம் என்று வழி சமைப்பவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

இந்தியா பிராந்திய வல்லரசு என்று பெரிதாக செய்தி ஊடகங்கள் வெளியிட்டாலும், உள்நாட்டிலேயே பல முன்னேற்றமின்மை காணப்படுகிறது. கலாச்சார, சமூக, மனித நேய, வேலைவாய்ப்பு மற்றும் பல பிரிவுகளில் இந்தியா இன்னும் பின் தங்கித் தான் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு காரணம் அயல் நாடுகளின் தொடர்பின்மையே. இன்னும் பல கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இந்தியா ஆயுத வளர்ச்சியில் மற்றய நாடுகளுக்கு சளைத்தது அல்ல என்று நிரூபித்திருக்கிறது.

இந்தியா அணு ஆயுதம் செய்கிறது என்றவுடன் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலம் பொருளாதாரத் தடை விதித்தது. இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தக்கள் மற்றய நாடுகள் செய்ய தடை. எந்தவித வணிக தொடர்புகளும் நிறுத்தப்பட்டன. பண உதவி வழங்க என்று இருந்த உலக நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனாலேயே நடிகர் கமல்காஸனின் படமான “மருதநாயகம்” இற்கு பிரித்தானியாவின் ராணியின் உதவிப் பணம் கிடைப்பதாக இருந்ததும் நிறுத்தப்பட்டது. இவ்வளவு நெருக்கடிகளுக்கும் அசராமல் இந்தியா அணு ஆயுதத்தை செய்து முடித்தது. இந்தியா சொன்னது நாங்கள் ஐந்து (5) அணு குண்டுகளுக்கு மேல் செய்ய மாட்டோம். இங்கே புலிகளுக்கு உலக நாடுகளின் தடையை ஒப்புநோக்கினால், புலிகளும் நாங்கள் சுதந்திரம் பெற்ற பின் வன்முறையைக் கைவிடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

அன்று இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்த அமெரிக்கா இன்று இந்தியாவுடன் அணுவிசை ஆராய்ச்சியில் பங்காளியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இத் திட்டத்திற்காக தேவையான உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்தியா அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் இன்றுவரை கையொப்பமிடவில்லை. அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஐநாவின் 1967 ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பமிடவில்லை.

இவ்வளவு இருந்தும் ஏன் அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்கிறது? அன்று அமெரிக்கா அடக்க முயன்றது, முடியவில்லை என்றவுடன், அணைக்கிறது. பலசாலி எதிரியாக இருப்பதை விட நண்பனாக இருப்பதே மேல் என்ற நோக்கில்.

விடுதலைப் புலிகளுடன் போர் செய்து பின் சிங்கள அரசுக்கு பக்கபலமாக இன்றுவரைக்கும் இருந்துகொண்டிருக்கும் இந்தியாவை மீறி இன்று விடுதலைப் புலிகள் பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். தூர தேசம் என்றாலும் பரவாயில்லை. அயல்நாடாக இருந்து இந்திய கடற்படையையும் மீறி இன்று புலிகள் வளர்ந்திருப்பதென்பது ஒரு பிரமிப்பூட்டும் விடயம்.

இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு வெறும் போராளிகள் மட்டும் காரணமல்ல என்பதை இந்தியா புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. இன்னும் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று சிந்திப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் [1]். ஒற்றையாட்சிக்குக் கீழ் தான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என்று நினைப்பது அபத்தமாகவே படுகிறது. அன்று புலிகளின் பலத்தை சரியாக எடைபோடாமல் விட்ட அனுபவம் ஏற்கனவே தெரிந்திருந்தும் மீண்டும் பிழையை விட எத்தணிக்கிறதா என்று புரியவில்லை [2].

அண்மையில் நோர்வேயில் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒரு தமிழீழ சுயாட்சி அறிக்கைக்கு ஒத்ததானதாகவே இருப்பதை கவனிக்க வேண்டும். வெகு விரைவில் தனித் தமிழீழம் கோரப்படலாம். அப்போது உலக நாடுகளின் நிலை எவ்வாறு அமையும்? வருங்கால தமிழீழத்தின் தொடர்புகள் எவ்வாறு அமையும்? முக்கியமாக இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்குமா (அ) எதிர்க்குமா? போன்ற கேள்விகளுக்கு உங்களைப் போல் எனக்கும் விடை காண ஆவல் தான்.

வல்லரசான அமெரிக்காவிற்கு உள்ள மூளை வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு இருக்கிறதா என்பதை வருங்காலம் தான் காட்டவேண்டும்.

[1]
“People of Tamil Nadu have deep sympathy and solidarity for the Sri Lankan Tamils. But they have clearly understood the LTTE. They will never equate the LTTE with the Tamil people,” says Mr Ram, Editor, The Hindu

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5126230.stm

[2]
“We were aware of the LTTE’s domination over other militant organisations, but we were not aware of their innovative tactics, resourcefulness, tremendous mass support and, most importantly, their excellent intelligence network.”

“We will have Prabhakaran in our custody within 72 hours.”

http://www.rediff.com/news/2000/mar/23lanka.htm

“I had specifically asked [then army chief Krishnaswamy) Sunderji in the presence of Rajiv Gandhi, suppose you face a situation where you have to fight the LTTE, what will you do? He said, no, it will take a fortnight to take care of them.” – [J N Dixit, India’s high commissioner to Sri Lanka]

http://www.rediff.com/news/2000/mar/24lanka.htm

<< பாகம் – 01

_____
CAPital

3 Comments

  • chandransblog

    உங்கள் வாதங்கள் சரிதான். ஆனால் நியாயமானவை இல்லை. ராஜிவ் காந்தியை ஒரு போரில் கொன்றால்கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், தற்கொலை படை மூலம் செய்தது சரியல்ல. அதுவும் ஒரு கூட்டத்தில்! இப்படிப்பட்ட செய்கைகளை யார் செய்தாலும் என்னுடைய கருத்து ஒன்றுதான்.

    இந்தியா மறுபடியும் படை அனுப்பாமல் இருப்பது இந்த பயமுறுத்தலினால் அல்ல என்பது என் கணிப்பு.
    வேறு நாட்டின் உள்நாட்டு பிரச்சனையில் மறுபடியும் தவறு செய்ய வேண்டாமே என்பதால்தான் இருக்கும்.

    இவ்வாறெல்லாம் நான் சொல்வதால் தமிழ் ஈழ மக்களிடம் என்னகு அனுதாபம் இல்லாத்தால் அல்ல. எந்த நாட்டில் தமிழன் துன்பப் பட்டாலும், என்னுடைய ஆதரவு அனுதாபமும் அவனுக்கு நிச்சயம் உண்டு.

  • CAPitalZ

    [இடம்பெயர்ந்தது: Comment by இரா.சுகுமாரன் — September 7, 2006 @ 2:51 am]
    //இன்னும் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று சிந்திப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் //
    அம்பலப்பட்டுவிடுவோமே என்பதற்காக தமிழ்மக்களுக்கு ஆதரவு போல் சிலர் பேசுகிறார்கள்.
    உண்மையில் அவர்கள் தமிழர்களின் விரோதி என்று தான் கருதவேண்டியுள்ளது.

  • CAPitalZ

    [இடம்பெயர்ந்தது:  Comment by CAPitalZ — September 7, 2006 @ 9:26 am]
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

    தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கிறோம், அனுதாபப்படுகிறோம், ஆனால் புலிகளுக்கு இல்லை என்று கபட நாடகம் ஆடி வலுவான தமிழர் கட்டமைப்பை குலைக்க முயலுகிறார்கள்.

    ______
    CAPital

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo