Tamils

  • Canada,  Government,  Politics,  Tamils

    Is conservative government making Canada a racist state?

    I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995.  The whole class is full of immigrants.  I was really in shock.  I used to wonder, how could this be?  The country I’m from does not even handle another set of people – Tamils, while Canada accepts and most importantly welcomes people from all over the world.  We had to write journals everyday in our ESL class.  I remember, I always write about how Canada is a racism free country and how I truly feel the freedom and all. …

  • Government of Tamil Eelam,  LTTE,  Tamils

    The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு

    த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம். இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம். ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார் ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத்…

  • Tamils

    மீண்டும் ஒரு பெய‌ர் please

    நான் முன்பு இந்த‌ த‌ள‌த்தை ஆர‌ம்பிக்க‌ உங்க‌ளிட‌ம் உத‌வி கோரியிருந்தேன். என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம் என்று ஒரு ப‌திவு போட்டிருந்தேன். அதில் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ பெய‌ரில் தான் இந்த‌ அட‌டா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அதே போல் மீண்டும் உங்க‌ள் உத‌வியை நாடுகிறேன். நான் ஒரு த‌மிழ் வ‌ணிக‌ர் ப‌ட்டிய‌ல் ஒன்றைத் த‌யாரிக்க‌லாம் என்று இருக்கிறேன். இந்த‌ ப‌ட்டிய‌ல் இணைய‌த்தில் இல‌குவாக‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ளைத் தேடி அறிய‌ உத‌வியாயிருக்கும். உல‌கில் உள்ள‌ அனைத்து த‌மிழ் நிறுவ‌ன‌ங்க‌ளையும் சேர்க்க‌வுள்ளேன். உல‌க‌ம் என்ற‌வுட‌னே இது மிக‌ப்பெரிய‌ வேலை என்று யோசிப்ப‌து விள‌ங்குகிற‌து. ஆமாம், அந்த‌ மிக‌ப்பெரிய‌ வேலையைத் தொட‌ங்க‌லாம் என்று ஒரு மிக‌ச் சிறிய‌ த‌மிழ்ப்பெய‌ர் ஒன்றைச் சொல்லுங்க‌ளேன் என்று தான் வேண்டி நிற்கின்றேன். இது வெறும‌னே உல‌க‌த் த‌மிழ் நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் என்ற‌ல்லாம‌ல், ஒவ்வொரு த‌மிழ் நிறுவ‌ன‌த்திற்கும் என்றே த‌னித் த‌னியான‌ இணைய‌ம‌னைக‌ள் அட‌ங்கிய‌தாய் இருக்கும். Hosting individual websites for each Tamil businesses, hence constructing a Tamil business directory. இதுவ‌ரை நான்…

  • LTTE,  Tamil Eelam,  Tamils

    தமிழீழ அரசு நோக்கிய பயணம்

    சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள். இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும். தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும்.  இதைத் தான் இல‌ங்கை/  இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது.  நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்க‌ள் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்; அல்ல‌து அவ‌ர் உண்மையில் இற‌ந்துவிட்டார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம். உங்க‌ள் ந‌ம்பிக்கை எதுவாயினும் த‌ற்போது த‌மிழீழ‌ம்…

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு!

    இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து. எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து. த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து. முன்பு இந்திய‌ “அமைதிப் ப‌டை” யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து. டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா. 17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும்…

  • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  Tamils

    தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

    கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று. சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?] எப்படி ஐயா இதெல்லாம் முடியுது? உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • India,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

    த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா. முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும். எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து. வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.…

  • LTTE,  Tamil Eelam,  Tamils

    மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

    மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம். நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை. வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார். இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள்…

  • Tamil Nadu,  Tamils

    த‌ல‌ [அஜித்] இனி down தான்

    என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே. நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன். நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து. ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும்…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamils

    இந்தியாவின் உத‌வி

    ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன். த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌. த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும். என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும். இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை. ச‌மாதான‌…

© 2023 - All Right Reserved. | Adadaa logo