Sprituality

  • Sprituality

    நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? [02]

    ஆமாம் முன்னேற வேண்டும். நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். முன்னேறி என்ன பயன்? பணம் இருந்தால் உலகத்தில் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கலாமே. பணம் இருந்தால் எல்லோரும் என்னை மதிப்பார்கள். இதை சம்பாதிக்கத் தானே சிறுவயதிலிருந்து பாடுபடுகிறேன். படி படி, உழை உழை எல்லாம் இதற்காகத் தானே. வாழ்வதற்கு பணம் தேவை என்றால் நான் படிக்காமலே வேலை செய்யத் தொடங்கியிருக்கலாமே? ஏன் இவ்வளவு துன்பப் பட்டு கற்றிருக்க வேண்டும்? எவன் எவன் கண்டுபிடித்ததோ எல்லாம் எனக்கெதற்கு. அவன் அறிவாளியாக இருக்கட்டும். அது அவன் திறமை. என்னை ஏன் அவனைப் போல் ஆக்க முற்படுகிறீர்கள். நான் என்ன கேட்டேனா? என்ன இது, நான் எது செய்ய ஆசைப்படுகிறேனோ அதைத் தவிர வேறு எல்லாவற்றையும் எனக்குள் திணிக்குகிறீர்கள். ஏன் கற்க வேண்டும்? நான் அப்போதிருந்தே திருடி இருக்கலாமே. வேறு ஏதாவது குறுக்கு வழியில் பணம் பண்ணியிருக்கலாமே. பள்ளிக்குப் போகும் நேரத்தில், நான் குறுக்கு வழியில் சம்பாதித்திருந்தால் எவ்வளவோ செல்வம் சேர்த்திருக்கலாமே. அப்போதிருந்தே பணம் பண்ணியிருந்தால், அதிக பணம் கிடைத்திருக்குமா? சம்பாதிக்க…

  • Sprituality

    நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? [01]

    நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? நானாக விரும்பிக் கேட்கவில்லை. நான் பிறக்கிறேன் என்று அறிந்திருக்கவில்லை. முன் பிறப்பில் என்னவாகப் பிறந்தேன் என்றும் அறிந்திருக்கவில்லை. அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்றும் அறியேன். பிறப்பு இருக்கா என்று கூட அறியேன். இப் பிறவியில் என் செயற்பாடு, என் பிறப்பின் முக்கியத்துவம் ஏதும் அறியேன். ஏதோ என்னை ஓர் நதியிலே யாரோ தள்ளிவிட்டது போல், எனக்கே தெரியாமல் பிறந்து, நீரின் ஓட்டத்திலே அடிபடுவதுபோல், வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் நல்லவனாக இரு, நல்லவனாக இரு என்று சொல்கிறார்களே, ஏன் நான் நல்லவனாக இருக்க வேண்டும்? மற்றவர்களுக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்? வாழ்க்கையில் கெட்டவனாக இருந்தாலும் வாழலாம் தானே. கெட்டவர்கள் வாழாமலா போய்விட்டார்கள்? மிகவும் நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்தா போய்விட்டார்கள்? கெட்டது செய்தால் என்ன, நல்லது செய்தால் என்ன; நான் தானே வாழ்கிறேன். ஏன் பயப்பட வேண்டும்? நானே படித்தேன். நானே பாடுபட்டேன். நானே என் திறமையால் முன்னுக்கு வருகிறேன். கொள்ளையடிப்பதென்றாலும், மற்றவர்களை ஏமாற்றுவது என்றாலும் அதுவும் என் திறமை…

© 2023 - All Right Reserved. | Adadaa logo