Tamil Nadu

 • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

  இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு!

  இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து. எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து. த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து. முன்பு இந்திய‌ “அமைதிப் ப‌டை” யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து. டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா. 17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும்…

 • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  Tamils

  தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

  கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று. சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?] எப்படி ஐயா இதெல்லாம் முடியுது? உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 • India,  LTTE,  Tamil Nadu

  ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?

  இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா. உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள். தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?

 • India,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

  [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

  த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா. முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும். எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து. வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.…

 • India,  Tamil Nadu

  [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்

  எத‌ற்கும் த‌யாராக‌ த‌மிழ் நாட்டிற்கு கிள‌ம்பிவிட்டேன். சென்னை விமான‌ நில‌ய‌த்தில் இறங்கிய‌து ந‌ம‌து Jet Airways. விமான‌த்திற்கு வெளியில் வ‌ந்து அந்த‌ ந‌டை ஓடையினுள் ந‌ட‌க்கும் போதே சாடையான‌ வெட்கை தொட‌த் தொட‌ங்கிய‌து. அம்மாவிற்கு wheelchair book ப‌ண்ணி இருந்த‌னாங்க‌ள். விமான‌த்தின் க‌த‌விற்கு வெளியே நின்றிருந்தார்க‌ள். wheelchair ஐப் பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருந்த‌து. அட‌ அம்மா அதிலிருந்து த‌வ‌றி விழுந்து விடுவாரோ என்று தான். கை வைப்ப‌த‌ற்கு இரு ம‌ருங்கிலும் ஒரு த‌டைக‌ளும் கிடையாது. ஒரு ப‌க்க‌ம் ச‌ரிஞ்சால், அப்ப‌டியே வ‌ழுக்கி விழ‌ வேண்டிய‌து தான். ஏதோ ஏறிக்கொண்டு போனோம். wheel chair இற்கு என்று த‌னியான‌ custom counter. எந்த‌ பிர‌ச்சினையும் இல்லாம‌ல், மிக‌ குறுகிய‌ நேர‌த்திலேயே bag எடுக்கும் இட‌த்திற்கு வ‌ந்து விட்டோம். ஏதோ போற‌ணைக்குள் இருப்ப‌து போல் ஒரு சாடையான‌ உண‌ர்வு. என‌து ம‌னைவிக்கு விய‌ர்க்க‌த் தொட‌ங்கி விட்ட‌து. என‌க்கு இன்ன‌மும் விய‌ர்க்க‌வில்லை. என் உட‌ம்பு வெட்கையை, குளிரை விட‌ விரும்புவது, என்ப‌தாலோ என‌க்கு விய‌ர்க்க‌வில்லை. ஆனால், என‌க்குள் ஏதோ ஒரு…

 • India,  Tamil Nadu

  [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 2] இந்தியா போகும்போது எடுத்துச்செல்ல‌ வேண்டிய‌வை

  ஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு. இந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் செய்வ‌மே. அவ‌ருக்கு fees $85. அவ‌ர் சொன்ன‌து இவை தான். த‌ண்ணீர் போத்த‌லை வாங்கிக் குடி. ந‌ன்றாக‌க் காய்ச்சாத‌ எதையும் சாப்பிடாதே. அப்ப‌வே யோசித்தேன், அப்ப‌டியாயின் “கையேந்தி ப‌வ‌னில்” சாப்பிட‌லாம். அது ந‌ல்லா ச‌மைச்ச‌து தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க‌, ந‌ண்டு, றால், ம‌ட்டி இப்ப‌டி. என‌க்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட‌ இத‌ல்லாம் சாப்பிட‌க்கூடாதா. ஆ, டாக்ட‌ர் கிட‌ந்தார், ம‌ன‌துக்குள் யோசிச்சுக் கொண்டேன். க‌ன‌டாவில் ந‌ல்ல‌ உண‌வின்றி நா வ‌ற‌ண்டு போய்க் கிட‌க்குது. த‌மிழ் நாடு போய் எங்க‌ள் ஊரில் போல் எல்லாம் இருக்கும்…

 • India,  Tamil Nadu

  [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 1]: க‌ன‌டாவில் இந்திய‌ விசா விண்ண‌ப்பிப்போர்க்காக‌

  இந்திய‌ இராணுவ‌த்துட‌னான‌ என‌து அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் க‌ச‌ப்பான‌வையாக‌ இருந்த‌ன‌. இத‌னாலேயே நான் இந்திய‌ அர‌சாங்க‌த்தை மிக‌வும் எதிர்ப்ப‌வ‌னாக‌ இருக்கிறேன். அத‌ற்காக‌ இந்தியாவே போக‌மாட்டேன் என்று பிடிவாத‌ம் பிடிக்க‌வில்லை. என‌து திரும‌ண‌ம் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவிற்கு நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் அங்கு ஒரு reception வைக்க‌ப்ப‌டும் என்று முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பா, அப்ப‌ம்மா ம‌ற்றும் சித்திமார்க‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கிறார்க‌ள். என‌க்கும் மிக‌வும் குதூக‌ல‌மாக‌ இருந்த‌து. அட‌ என‌க்கும் த‌மிழ் நாடு போற‌துக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று. க‌ன‌டா வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் இந்த‌ நாட்டை விட்டு வெளியில் போக‌வில்லை. அதுவும் “த‌மிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற‌ எண்ண‌ம் என்னை பூரிக்க‌ வைத்த‌து. என் த‌மிழ் உருவான‌ இட‌த்திற்கு, தாய்த் த‌மிழ் நாட்டிற்குப் போக‌ப் போகிறேன் என்ற‌ உண‌ர்வு. ச‌ரி ச‌ரி மேல‌ சொல்லுற‌ன். த‌மிழ் நாட்டுக்குப் போக‌வேண்டும் என்றால் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமே. என்ன‌ க‌ன‌டா சிட்டிச‌ன் என்றாலும் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமா? ஏன்? அது தான் இந்திய‌…

 • Tamil Nadu,  Tamils

  த‌ல‌ [அஜித்] இனி down தான்

  என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே. நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன். நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து. ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும்…

 • India,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

  வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

  த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள். ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை. இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள். என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம். இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌…

 • India,  Politics,  Tamil Nadu,  Tamils

  இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

  அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்! மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன். ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து. என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து. விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து. திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார். ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

© 2023 - All Right Reserved. | Adadaa logo