India
-
வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு தமிழீழம் எதிரியாக இருப்பது நல்லதா? – 01
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். அவர்கள் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அறிவுடையதாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தான் உண்மை. உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு…
-
பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்
சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை. சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை. பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை. மதம் கேட்கப்பட்டது. மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது] ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்: வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள். குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில். குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை. பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை.…
-
இந்தியாவில் புரட்சி?! – 02
முத்தமிழ் குழுமத்தின் இழையில், ஒப்பாரி வைக்காதீர்கள் கம்யூனிஸ்டுகளே, நடக்கும் கருத்து விவாதத்திற்கு என் கருத்து சரி, எனக்கு கம்யூனிசமோ சோசலிசமோ சனநாயகமோ இந்தியாவிற்கு நல்லது என்று தெரியாது. ஆனால், இன்று இந்தியா மிக மிக ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது. இதை சரிக்கட்ட ஏதாவது தடாலடியாக செய்தாக வேண்டும். அது தான் என் விருப்பம். அதற்காக கம்யூனிசத்திற்கு மாறினால் ஊழல் நின்று போய் விடும் என்று சொல்ல முடியுமா? ஆகவே, ஊழல் செய்யாமல் இருக்குமுகமாக ஒரு சிறந்த கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் காவல் சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் ஒழிய வேண்டும். இன்றய சூழலில், இந்திய இளைஞர்களுக்கு வேலை தேவை. அது தான் முக்கிய பிரச்சினை. பல்கலைக்கழக பட்டதாரி ஆட்டோ ஓட்டிகொண்டிருக்கிறான். அதை வெளிநாட்டு நிறுவனங்கள் நிவர்த்தி செய்கிறதென்றால் அதை அரசு அனுமதிப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா அப்படி அனுமதிக்காவிட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாட்டுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து…
-
தமிழ் ஒருங்குறி ?! – 17
ஒரு சட்டம், வரையறை, கோட்பாடு இயற்றுவதில் வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் தான். ஏனெனில், அவன் மற்ற இனத்தவர்களை விட இவைகளை இயற்ற முதலில் எத்தணித்தவன். ஆகவே, அவனுக்கு பல முறை முட்டி மோதி, பல முறை மேம்படுத்தி பழக்கப்பட்டவன். இன்றும், கையில் அதிகாரம் இருந்தால் கூட களவு செய்ய முடியாதபடி (அ) செய்தாலும் பிடிபடும்படி நுணுக்கமாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் தான், கடையின் சொந்தக் காரன் வீட்டில் இருக்க வேலைக்காரன் கல்லாவில் அமர்ந்தாலும் கடை நஷ்டத்தில் போவதில்லை. ஆகவே, ஒருங்குறி அமைப்பின் சட்ட திட்டங்கள் சரியானதாகவே இருக்கலாம். ஒருங்குறி ஒரு உலக மொழி ஒருங்கமைப்பு என்ற ரீதியில் நோக்குவோமானால் அவர்களின் சட்ட திட்டங்கள் மிகச் சரியானவையே. அதையே, தமிழை மட்டும் பார்த்தால், தமிழுக்கு விவேகக் குறைவே. இருந்தாலும் தமிழை மட்டும் அவர்களால் பார்க்க இயலாது. ஆகவே அவர்கள் நிலைப்பாடு சரியானதே. இதில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டிய விடயம்? இனிமேலாவது தமிழ் மொழியை யாரும் பார்த்துக்கொள்வார்கள் என்று விடாமல், நாம் தாம் நம் மொழியின் முன்னேற்றத்திற்கு…
-
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்!
இன்று திலீபன் நினைவு நாள். கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் களவாக ஆரேஞ் ஜூஸ் குடிப்பது போல் இல்லாமல், உண்மையிலேயே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உயிரை மாய்த்துக்கொண்ட நெஞ்சழுத்தக் காரன். குளிக்கும் போது கூட வாயிற்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொண்டவன். ஒரு முறை தான் இருந்தான், மறுமுறை இருந்து விடுவானோ என்று பயத்தில், அனுப்பி விட்டார்கள். காந்தி எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது (அ) சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் சந்தித்து வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. அது வெள்ளைக்காரன். ஒரு முறை கூட, இவரை விட்டால் மீண்டும் மீண்டும் இருப்பார் என்று, சாக விடவில்லை. காந்தியை சாக விடக்கூடாது என்று தான் கட்டளையாகவே இருந்ததாம். அகிம்சையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காந்தி பிறந்த தேசம், அகிம்சாவாதிகள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள், அகிம்சையாக இருந்த திலீபனுடன் வந்து கதைக்கக் கூட இல்லை. உயிர் பிரிந்த பின், வருத்தப்படுகிறோம், கவலைப்படுகிறோம்; அறிக்கைகள். என்ன இருந்தாலும், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். ______…
-
தமிழ் ஒருங்குறி ?! – 16
– ஒருங்குறியின் மேன்மை – பிற மொழிகள் இடம்பெற்ற முறை – தமிழ் மொழிக்கு உள்ள இடம் – தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல் – தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு – தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம் – தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள் – போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன். ஒருங்குறியும் தமிழும் மேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும். ______ CAPital பி.கு. :- பவர் பொய்ன்றில் தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் TSCu_Paranar.ttf எழுத்துருவை தரை இறக்கி நிறுவிப் பார்க்கவும். ஒருங்குறிக்கே இந்த நிலமையா! 🙁 TSCu_Paranar தரையிறக்கியவுடன் TSCu_Paranar.txt என்னும் கோப்பின் பெயரை TSCu_Paranar.ttf என்று மாற்றுக. பாகம் – 17 >> << பாகம் – 15
-
இந்தியாவில் புரட்சி?!
என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கு இன்னுமொரு சுதந்திரம் தேவையில்லை. சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்/ விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கு தேவை புரட்சி. எதாவது ஒரு நற் சிந்தனையோடு ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அவரின் வழிகாட்டலில் நாட்டின் கட்டமைப்பை புரட்டிப் போட வேண்டும். கட்டுக்கோப்பான செயல்முறையால் பல புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சற்று கடினமான செயற்பாடுகளால் தான் நிறுவ முடியும். ஃபிரஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதைப் போல். ஆனால், புரட்சி வெடிக்க நாட்டின் நிலமை மிக மோசமாக (அ) பலரின் வெறுப்பிற்கு பின் தான் நடக்கும். இன்றய இந்திய நிலமை மிக நல்ல நாடாகவும் இல்லை, கெட்ட நாடாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலமை. ஆகவே இப்போதைக்கு புரட்சி இல்லை. சரி புரட்சி அமைப்பு ஒன்று இல்லை என்று சொன்னால் சரியாகுமா? புரட்சி அமைப்பு என்பது ஒரு சட்ட பூர்வமாக உருவாவது இல்லை. புரட்சி அமைப்பை வெளியில் இருப்பவர்கள் உருவாக்க இயலாது. அது உள்ளிருந்து [இந்தியாவில்]…
-
புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு
பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் [1]. தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான் கணக்கிலெடுக்கப்படும் [4]. இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் அரசு உதவி வழங்கும். இதற்கு இந்தியா வாக்குறுதி கொடுக்கும். புலிப் படையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்க இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும். இறந்த மாவீரர்களின் கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்காமல், [இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடன் செய்தது போல்], அவற்றை மதிக்கும் என இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்களை காவல்துறையிலும், இராணுவத்திலும் பாரபட்சமின்றி சேர்க்கும். தமிழர்களின் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை புதிதாக நிறுவி, மேலும் சிங்களவர்களை அங்கு அரச உதவியுடன் குடியேற்றமாட்டார்கள் என இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும் [2]. தமிழர்களின்…
-
வரலாறு மீண்டும் வரலாறாகுமா?
இலங்கை அரசாங்கம் சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அடிகோலுகிறார்கள். இலங்கை அரசாங்கம் சிங்கள இராணுவ வீரர்களுக்கு வீரத்தைப் புகட்டுகிறது. புத்த பிக்குகள் கூட போர் தேவை என்கிறார்கள். சகல போர்களிலும் இலங்கை அரசாங்கமே வெற்றி, புலிகளை துரத்தி அடித்துவிட்டோம் என்று அறிக்கைகள். புலிகளுடனான போரில் நம்பமுடியாத அளவிற்கு புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு சாதகமான கருத்துக்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரிக்கின்றன. ஈழத்தமிழர் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத விற்பனையை குறைத்துள்ளது. பாகிஸ்தானுடனான, இலங்கை அரசாங்கத்தின் தொடர்பு அதிகரிக்கிறது. யாழ் குடாநாட்டுக்கான தரமார்க்க பாதை பல நாட்களாக மூடப்படுகிறது. 5,00,000 யாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரலாமென்னும் செய்தி அறிக்கைகள். மீண்டும் இந்திய இராணுவம் தமிழீழம் வருமா? புலிகள் இந்தியாவில் முக்கிய புள்ளியை கொல்வார்களா? அடுத்த ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை புலிகள் அறிவிப்பார்களா? _____ CAPital
-
இந்தியாவின் புலி – 2
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அமெரிக்காவின் அயல்நாட்டு உறவுகள் போல் இல்லாமல் இந்தியாவிற்கு அயல்நாடுகள் அத்தனையும் பகைமை நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுடன் போர் நடந்து இப்போது தான் சற்று தொடர்புகள் தொடங்கியிருக்கின்றன, சீனாவுடனும் போர் நடந்தது. மூன்று நாடுகளுக்குமிடையேயான தரைமார்க்க வழிகள், அண்மைக்காலம் வரை மூடிக்கிடந்தன. பூட்டான், நேபால் நாடுகளுடன் கூட சுமூகமான தொடர்பில்லை. இந்தியாவின் வடக்கில் அப்படி என்றால் தெற்கில் தமிழீழத்துடன் போர். இந்தியாவின் அயலவர்களில் பலம் மிக்க நாடுகளுடன் பகைமை, தமிழீழத்தைத் தவிர்த்து. அப்படிப் பார்த்தால் தமிழீழமும் ஏதோ ஒரு விதத்தில் பலம் மிக்க நாடு என்று கொள்ளலாம். இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகள் மிகவும் தவறானதாகவே காணக்கிடக்கிறது. அயலவர்களைக் கெடுத்து தாம் முன்னேற வேண்டும் என்பது போல் தான் இந்திய அரசியலாளர்களின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். வரலாறு சொல்கிறது இந்தியா ஒரு அகண்ட பாரதமாக முன்பொருகாலத்தில் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் வளம் மிக்க, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக இருக்கவே கொலம்பஸ் இந்தியாவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவில், இந்தியா என்று…