Tamil Nadu,  Tamils

த‌ல‌ [அஜித்] இனி down தான்

என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே.
நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன்.

நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து.

ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும் கேட்கிற‌தே இல்லையா?

நான் எதிர்பார்த்தேன், ர‌ஜினி தான் கொஞ்ச‌ம் எதிர்ப்பா சொல்லுவாரு எண்டு. அட‌ அந்த‌ ஆளே த‌மிழ‌ருக்கு சார்பா பேசேக்க‌, நீ என்ன‌ த‌ல‌ ப‌ண்ணின‌?

“என் உட‌ல் ம‌ண்ணுக்கு, உயிர் த‌மிழுக்கு” என்ன‌ இது? ச‌ரி இப்ப‌டி நீ சொன்ன‌திற்கும், நீ ந‌ட‌ந்துகிட்ட‌துக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு இருக்கா சொல்லு? த‌மிழ‌ருக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்கிறாங்க‌. ச‌ரி சொல்லுவாங்களே‌, இட‌ம‌றிந்து ந‌ட‌ந்துகொள்ளுத‌ல் என்று. அட‌ அப்ப‌டியாச்சும் ந‌ட‌ந்தியா. இல்லையே த‌ல‌. அடுத்த‌ வ‌ச‌ன‌மே நீ என்ன‌ சொன்ன‌ “சினிமாவ‌ சினிமாவா இருக்க‌ விடுங்க‌ please” என்று சொல்லி உரையையே முடிச்சிட்டியே. என்ன‌ ஒரு 20 நொடிக‌ள் பேசியிருப்பியா? எரியில‌ நெருப்பில‌ நெய்ய‌ இல்ல‌ ஊத்தீட்ட‌ த‌ல‌. இதுக்கு நீ வ‌ராம‌, வைத்திய‌சாலையில‌ ப‌டுத்திருக்க‌லாமே, ப‌ட‌ங்க‌ளில‌ காட்டிற‌மாதிரியே.

போ த‌ல‌, உன் ப‌த‌வி விஜ‌யிக்கு போகுது பார் உன் க‌ண்முன்னால‌யே.

இனி த‌ல‌ “குனிஞ்சிட்டுது”.

முக‌த்தில‌ ஒரு ஏதோ வேண்டா வெறுப்பா வ‌ந்த‌ மாதிரியே இருந்திச்சு. என்ன‌ ந‌டிக்கிறியா? உண்மையில‌ நீ த‌மிழீழ‌த்திற்கு எதிர் எண்டா அப்ப‌டி “த‌ல‌” ய‌ நிமிர்த்தி நான் த‌மிழீழ‌த்திற்கு எதிர்ப்பு தான், அத‌னால‌ இந்த‌ உண்ணாவிர‌த்தில‌ உட‌ன்ப‌டிக்கை இல்லை எண்டு சொல்லி இருக்க‌லாமெல்லேடா? இப்ப‌ கூட‌ ஒண்டும் கெட்டுப் போக‌ல‌, ஏதாவ‌து ஒரு ப‌ட‌த்தில‌ த‌மிழீழ‌ம் வேணும் எண்டு சொல்லு. உன் ம‌வுசு எழந்து சும்மா ஜ‌ம்முன்னு நிக்குமே. இல்லாட்டி க‌வ‌லைக்கிட‌மா தான் இருக்க‌ப் போகுது. விஜ‌ய் தான் சூப்ப‌ர் ஸ்டார்.

இதோ அஜித் “பேசிய‌” மேடைப் பேச்சு:

[kml_flashembed movie="http://www.youtube.com/v/80a0Gbbp3FY" width="425" height="350" wmode="transparent" /]

3 Comments

  • கிரி

    அஜித் எனக்கு தெரிந்து உண்மையை பேசி இருப்பதாகவே கருதுகிறேன். மற்றவர்களை போல மேடை பேச்சுக்காக வசனம் பேசாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

    வசனம் பேசுபவர்கள் அனைவரும் தமிழ் மீது பற்று கொண்டவர்கள் அல்ல அதே போல எதுவும் கூறாமல் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரி அல்ல.

    பி கு: நான் அஜித் ரசிகன் அல்ல.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo