War of Tamil Eelam

மேதகு வே. பிரபாகரன்: இலங்கை ஜனாதிபதி

மேதகு வே. பிரபாகரன்:  இலங்கை ஜனாதிபதி

சிங்களவர்களின் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை நான் மிகவும் ஆதரிக்கின்றேன். புலி இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தால் அது சாத்தியமாகும். அன்று சீன பேரரசன் சீன தேசம் சகலவற்றையும் ஒன்றிணைக்க பாடுபட்டது போல், நம் இலங்கையும் ஒரு நாடாக இருந்தால் மிக நன்றாகத் தான் இருக்கும்.

அயல் நாடான இந்தியாவில் உள்ளது போல், இலங்கையில் இரண்டு மாகாணங்கள்; இரு வேறு மொழிகள்; இரு வேறு கலாச்சாரம்.  மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதியாக பதவியேறுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு அத்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பது போல், ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு, அதன் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும்.  இலங்கை சிங்கள அரச கட்டமைப்பை விட, புலிகளின் கட்டமைப்பு அதி உயர்ந்ததாகவே காணப்படுகிறது.

பாலஸ்தீன இயக்கத்தைப் பின்பற்றி புலிகள் இயக்கம் தொடக்கப் பட்டாலும் கூட, இன்று உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, பலம் வாய்ந்த, மற்றய நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்ற இயக்கமாக விளங்குகிறது.

இப்போது புலிகளால் ஆளப்படும் இடங்களைப் பொறுத்தவரை:
– சாதி ஒளிக்கப்படுவிட்டது
– இலஞ்சம்: பேச்சுக்கே இடமில்லை
– மக்கள் எவ்வாறு கையாளப் படுகிறார்கள்
– புதிய தொழில் செய்வதற்கு, புலிகளால் மக்களுக்கு பண உதவி வழங்கப் படுகிறது;
– வங்கி, பேரூந்து சேவை, காவல்துறை, நீதி மன்றம், காலநிலை அறிக்கை அலுவலகம், வானொலி சேவை, தொலைக்காட்சி சேவை, மேலும் பல; நன்றே நடைபெறுகிறது
– மற்றய அரசியல்வாதிகள் போல் இல்லாமல், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படுகிறது;

இலங்கையை புலி ஆட்சி செய்தால், சுற்றி இருக்கும் நாடுகளை விட, ஏன் இந்தியாவையே விட, மிகப் பெரிய வலுமிக்க நாடாக வரும் என்பதில் ஐயப்பாடில்லை.  இந்தியாவின் அளுமை மிக்க பிராந்தியத்தில் இன்னொரு நாடு தலை எடுக்க விருப்பம் இல்லாமலே தன் இந்தியா தமிழர் பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்கி விட்டது.  புலி இலங்கை முழுவதையும் ஒரு நாடாக ஆட்சி செய்தால், சிங்களவர்களின் வேண்டுகோளும், தமிழர்களின் பிரச்சனையும் தீரும்!

_____
CAPital

One Comment

  • இளங்குமரன்

    உங்கள் கட்டுரை முழுவதையும் ஒரு எழுத்து கூட விடாமல் ஆமோதிக்கிறேன். ஆதரிக்கிறேள். 1986-களில் மாண்புமிகு இலங்கைக் குடியரசுத் தலைவர் பிரபாகரன் அவர்களால் ஈர்க்கப்பட்டு (என்னால் முடிந்த அளவு) கூட்டங்கள் போடுவது துண்டுப்பிரசுங்கள் அச்சடித்துக் கொடுப்பது என என்னுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தேன். லண்டன் பாலசிங்கம் கைதான போது நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்று ஆதரவு வாசகங்களைச் சுவற்றில் எழுதுவது போன்றவற்றைச் செய்து இறுதியாக மாணவர்களைச் சேர்த்து போராட்டம் நடத்தி 15 நாள் சிறைவாசம்(முதன்முதலாக) சென்றோம். பின்னர் பல்வேறு இடையூறுகளையும் இன்னல்களையும் அனுபவித்து மீண்டு வந்தேன். தங்களது இக்கட்டுரை எனது பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.
    இன்பத் தேன் வந்து பாயும் நாள் எந்நாளோ?

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo