Tamil Unicode

தமிழ் ஒருங்குறி ?! -2


தட்டச்சு எந்திரத்தில் செய்வதுபோல
ஒருங்குறியில் வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்

இன்னும் பழங்காலத்திலேயே இருக்கத் தான் விருப்பமோ?
ஒருங்குறி தவிர்ந்த ஏனைய குறியேற்றங்களில் தமிழில் உள்ள எல்லா எழுத்துக்களும் சேர்ப்பதற்கு அங்கு இடமிருக்கவில்லை [7-பிட், 8-பிட்]. இடமில்லாதபடியால், அவர்கள் ஒரு தந்திரமாக அவ்வாறு உபயோகித்தார்கள்.

அதையே பின்பற்றவேண்டும் என்பது அபத்தமாகவே படுகிறது.

சரி, மற்றய எழுத்துக்கள் போடாவிட்டாலும் மெய், உயிர் ஆவது வரிசையாக ஏற்றியிருக்கலாமே. “க்” ஐப் பிரித்து “க” என்றும் “புள்ளி” என்றும் மெய்யில்லாமல் ஏற்றி, அவற்றை ஒழுங்குமாறி வேறு வைத்திருக்கிறார்கள்.

“புள்ளி” யின் பெயர் “அனுஸ்வரா” என்றும், இன்னுமொருமுறை “விரமா” என்றும் “ஃ” விசர்கா என்றும் தான் இருக்கிறது. கீழே உள்ள மின்வலைய முகவரிக்குச் சென்று பார்க்கவும். இது தான் ஒருங்குறி ஒன்றியத்தின் மிகவும் புதிதான தாழ் [Official latest version].
http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf


பழைய பிங்கலந்தைப் பெயர் ஆகிய
விராமத்தை புள்ளிக்கு யுனிகோட் வழங்கியுள்ளது.

ஒருங்குறி ஒன்றியத்தின் மீது பழி சுமத்துவது போல் தெரிகிறது. ஒருங்குறி ஒன்றியம், இது தான் பெயர், இந்த இந்த இடங்களில் தான் எழுத்துக்களை கட்டாயமாக வைக்கவேண்டும் என்று சொன்னது கிடையாது. எங்கள் தமிழை அவர்கள் ஆராய்ச்சி செய்து, இந்தப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு அவர்களுக்கென்ன வேறு வேலை இல்லையோ? மேலும் இவ்வாறு உலகத்திலுள்ள அத்தனை மொழிக்கும் அவர்கள் செய்யப்போனால் என்ன கெதி? இந்திய அரசாங்கம் எதைக் கொடுத்ததோ, அதை அவர்கள் அப்படியே ஏற்றியிருக்கிறார்கள்.


ஆய்தம் என்ற எழுத்தை ஏன் விஸர்க்கம் என்கின்றனர்?
9-ஆம் நூற்றாண்டுத் திருவெஃகா (காஞ்சி) கல்வெட்டிலே
தான் முதலில் ஆய்தம் வருகிறது.

ஐயா உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் விட, மிகவும் பழமைவாய்ந்த இலக்கணம் வகுக்கப்பட்ட நூல் தமிழ் மொழியில் தான் உள்ளது. அது தொல்காப்பியம் என்று அறிஞர்கள் கூறுவர். தொல்காப்பியம் கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது1. அதில் இருக்கிறதையா ஆய்தம், புள்ளி என்னும் சொற்பதங்கள். அந்தக்காலத்தில் எழுத்து வடிவம் வேறாக இருந்தாலும் அச் சொற்பதம் அந்தந்த எழுத்துக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. பிழையை சரிப்படுத்த முயற்சிக்குறீர்கள்.

கீழே உள்ள மின்வலைய முகவரிக்கு சென்று தொல்காப்பியத்தைப் பார்வையிடலாம்:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0100/tolkap.pdf

1. About Tolkaappiyam
http://en.wikipedia.org/wiki/Tolkaappiyam

தமிழ் வெல்லும், வேறு வழிகள் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நேராகத் தொடும் மூக்கிற்கு தலையைச் சுற்றி தொட வந்தது, இந்திய அரசாங்கத்தின் தமிழ் மேல் இருந்த அலட்சியம்.

[ஒருங்குறி] IE இல் தமிழ் தெரியும், ஆனால், IE title bar இல் தமிழ் தெரியாது Mozilla 1.7.12 இல் தமிழ் ஒழுங்காக தெரியாது. இவை யாவும் சரிப்படுத்தப் பட்டுவிடும். ஆனல் இவை யாவும் தமிழுக்கு ஓர் பின்னடைவே. உலக ஓட்டத்தில் நாம் எப்போதும் தடைகள் தாண்டி ஓடுவதால், எங்கள் வேகம் குறைவாகத் தான் இருக்கும்.

 

பாகம் – 03 >>

<< Part – 01

______
CAPital

“என்று தீரும் இந்த அடிமைத்தனம்”

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2022 - All Right Reserved. | Adadaa logo