சுயசரிதை

இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது .NET Software Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.

நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகவேண்டும். எல்லா முடிவுகளும் சரியானதாக இல்லாத பட்சத்தில், எது ஓரளவு சரியானதோ அதை முற்றுமுழுதாக தேர்ந்தெடுப்பவன் நான். எனது இந்த வலைப்பூக்களில் இருக்கும் சிந்தனைகள் யாவும், ஏதாவது ஒரு பக்கம் முற்றுமுழுதாக சார்ந்தே இருக்கலாம். இதனால், என் வலைபூவிற்கு வருபவர்களின் மனம் புண்படுமானால் அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்கு என் பெயரை சொல்லி பெருமிதமடைய பிடிக்காது.

ஃகீ ஃகீ… அது ஒரு பகிடிக்காகவே சொன்னேன். கர்வமென தப்பாக எடுக்க வேண்டும்.

வீட்டுப் பெயரை, வெளியில் பாவிக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் எழுதும்போது சொந்தப் பெயரைப் பாவிக்க மாட்டார்கள். பெண்ணின் பெயரில் எழுதிய/ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் இருக்குறார்கள். நானும் ஏதாவது இப்படி வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததே CAPital.  Caps lock என்பது ஆங்கில பெரிய எழுத்தை குறிக்கும் முகமாக கணினியில் இருக்கும். ஆகவே அதை CAP என்று ஆக்கினேன்.

தமிழ் மேல் ஆர்வம் வந்த பின்பும் இந்தப் பெயரை மட்டும் விட விருப்பமில்லாமல் இருக்கிறது. பழகினால் விடுவது கடினம் தானே. இதைப் போல் எனக்குப் பிடித்த மாதிரி தமிழ்ப் பெயர் ஒன்றும் எட்டவில்லை.

______
CAPitalZ

6 Comments

  • chandransblog

    உங்களுக்கும் மலேசிய தொடர்பு இருக்கிறதே! மிக மகிழ்ச்சி.

    சுயசரிதயை தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

    சந்திரன்
    (இது என் சொந்தப் பெயர்.)

  • Mathangi

    தங்கள் தமிழார்வத்திற்கு என் வாழ்த்துக்கள்.
    யார் அந்த அம்மானை, விளங்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள்.
    அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. இதில் ஒருவர் கேள்வி கேட்பார்; மற்றொருவர் விடையளிப்பார். திருவாசகம், சிலப்பதிகாரம் இவற்றில் அம்மானைப் பாடல்கள் வந்துள்ளன.

  • சுதனின்விஜி

    கப்பிட்டல்,,

    தமிழ் பற்றாளர்கள் என்றுசொல்லிக்கொள்பவர்கள் எல்லோருமே இப்படி ஆங்கிலத்தின் பிடியில் இருப்பதுதான் எனக்குப் புரியவில்லை 😉

    பேரைச்சொல்ல பிடிக்கவில்லை ஆனால்..சுயசரிதை மட்டும் சொல்றீங்கள்…

    என்ன செய்யுறது வாழ்வியலே ஒரு முரண்பாட்டின் கூட்ட்டுத்தானே இல்லையோ!!…

    உங்கள் வாதாட்டம் எனக்கு பிடித்திருந்தது..

    இல்லை என்றால் இல்லை ஓம் என்றால் ஓம்…
    இருந்தாலும் இருக்கலாம் என்றெல்லாம் இல்லை
    அது நல்ல கொள்கை

    வாழ்த்துக்கள்…

    கப்பிட்டல்….

  • CAPitalZ

    விஜி,

    உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

    பலர் ஆங்கில பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் தமிழ் பற்றாளராக இருந்திருக்கிறார்கள்/ இருக்கிறார்கள்.

    அக்கரைக்கு போனால் தானே இக்கரையின் முக்கியத்துவம் தெரியும்.

    _______
    CAPital

  • marumalarchi

    வணக்கம் தோழரே…
    நான் க.அருணபாரதி.. இந்தியாவில் புதுச்சேரியை சார்ந்தவன்.. தற்பொழுது சென்னையில் வேலை பார்க்கிறேன்.. தங்கள் இணையம் நன்றாக இருக்கிறது. நான் ஒரு புதிய தமிழ் வலை தளம் ஆரம்பிக்க உள்ளேன்.. அதில் மலேசிய செய்தியாளராக பணிபுரிய தங்களுக்கு விருப்பமுள்ளதா என தெரிவிக்க வேண்டுகிறேன்..
    எனக்கு 21 வயது தான் ஆகிறது. தமிழி; ஏதேனும ; சாதிக்கவே இதனை ஆரம்பிக்கவிருக்கிறேன்.. தாங்கள் எனக்கு மலேசியத் தமிழர்கள்ளைப் பற்றிய செய்திகள் மற்றும் மற்ற தமிழ் செய்திகளை மின்னஞ்சலில் அனுப்பினால் மட்டும் போதும்…வேறொன்றும் செய்யவேண்டியதில்லை.. தங்கள் எழுத்துக்களை நமது வலைதளத்தில் போடும் போது அதனை தங்கள் பெயரைக் குறிப்பிட்டுதான் போடப்படும்……….எனக்கு வேறு மலேசிய நண்பர்களை தெரியாது.. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. MAil to : [email protected]

  • CAPitalZ

    தோழரே,

    உங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள். நான் மலேசியாவில் இல்லை. அவ்வளவு தொடர்புகளும் இல்லை. நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்.

    ஆதலால், எனக்குத் தெரிந்த ஒரு மலேசிய வலைப்பதிவாளர் சந்திரன். அவரை தொடர்பு கொண்டு பாருங்களேன்.

    நன்றி.

    ________
    CAPitalZ

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo