India,  Tamil Eelam

தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?

என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா?

அட பின்ன என்னங்க?

தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது?

என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க].  சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள்.  எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ?

ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது.

மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார்.  தனக்கு புலிகள் அந்தக் காலத்தில் சகோதர யுத்ததை நடத்தியபோதே புலிகளை வெறுத்து விட்டதாம்.  தலைவர் வே. பிரபாகரன், ஒரு சர்வாதிகாரி ஆம்.

இவ்வளவு நாளும் புலிகளை பகைக்க விரும்பாமல் ஏதோ தானோ என்று இருந்திருக்கிறார் போலும்.  இப்போது புலிகள் “ஒழிக்கப்படுகிறார்கள்” என்றவுடன் உண்மையான தன் மனநிலையை வெளியில் விடுகிறார் போலும்.  இதற்கு ஜெயலலிதா எவ்வளோ மேல்.  அவர் கண்ணுக்குத் தெரிந்த எதிரி.  ஆனால், கூடவே இருக்கும் நரிகளை அடையாளங் காணுவது கடினம் தான்.

இப்படியான ஒரு படு மோசமான நெருக்கடியை தமிழீழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், உண்மையாக யார் தமிழீழ மக்கள் பக்கம், யார் தமிழீழ மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது.

தமிழீழப் பற்றாளர்களே, இந்தக் கால கட்டத்தை உண்ணிப்பாகக் கவனியுங்கள்.  புலித்தோல் போற்றிய நரியும், பசுத்தோல் போற்றிய நரியும்ம் தம்மைத் தாமே அடையாளங் காட்டிக்கொள்கின்றன.

உற்று நோக்குங்கள்.

பா – 2

3 Comments

 • நாராய‌ண‌ன்

  திமுக வின‌ரின் த‌மிழின‌ப் ப‌ற்று அண்ணாவோடு போயிற்று. க‌ருணா பெய‌ர் வைச்ச‌வ்னெல்லாம் த‌மிழின‌த் துரோகிக‌ள் போல‌

 • தமிழக தமிழன்

  உங்கள் தலைப்பு எரிச்சலை தருகிறது

  ஈழத்தில் உள்ளவர்களுக்கு கோபங்கள் வரும் பொழுது புலிகளிடம் சென்று சேருகிறார்கள், தற்கொலை படையில் சேருகிறார்கள்.

  தமிழகத்தில் உள்ளவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கோபம், இயலாமை, ஆவேசம் எல்லாம் இப்படியான செயல்களில் வந்து முடிகிறது.

  இவ்வாறு தீக்குளிப்பவர்கள் கோழைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  இந்த செயல்கள் எல்லாம் கடந்த காலங்களில் தமிழகத்தமிழன், ஈழத்தமிழன் போன்ற பிளவுகளை களைந்து தமிழன் ஒருவனே என்ற கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது

  இந்தியத்தமிழன் என்று எவனும் இல்லை.

  ஆனால் இளைஞர்கள் தீக்குளிப்பதை விடுத்து களம் காண வேண்டும். போராட வேண்டும்.

 • எழிலன்

  நண்பரே நீங்கள் சொல்வது சரி. அதே போல் தான் பிரபாகரன் மேல் மூட நம்பிக்கையா பலர் இருக்கின்றனர். பிரபாகரனுக்கு ஆப்பு வைத்த பின் எல்லாம் சரியாகி விடும். அதுவரை பொறுத்திருப்போம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image