திருகோணமலையின் நிலை
கனடாவில் தமிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] நடைபெறுகிறது.
நான் நேற்று எங்கள் அண்ணன் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நாள் முழுவதும் மழை. தமிழ் கார்னிவேல் வெட்ட வெளியில் நடப்பதால், மிகக் குறைந்த அளவிலான சனமே [வழமைக்கு மாறாக] வந்திருந்தார்கள். இன்றாவது மழை பெய்யாமல் நடத்துனர்களுக்கு நட்டம் வராமல் இயற்கை அன்னை வழிசமைப்பாளாக.
சரி விசயத்திற்கு வருகிறேன். சாப்பிடலாம் என்று சாப்பாடு வாங்க ஒரு கடை [வெட்டவெளியில் தற்காலிகமாக போடப்பட்ட கடை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவருடன் உரையாடினேன். அவர் அரச வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோகம் இல்லைங்க , அரச பாதுகாப்பு படையுடனனான வேலை [ஆனால் இவர் போராளி அல்ல]. எனக்கு கொஞ்சம் தயக்கம், அரச சார்பான ஆளோ என்று.
கனடா வந்து 2 கிழமைகள் தானாம்.
திருகோணமலையில் பிள்ளையான் குழுவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றார். அவர்கள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வருவார்களாம். உங்களோடு சும்ம வந்து கதைப்பார்களாம். அப்படி கதையோடு கதையாக இன்னொருவர் படம் [photo] எடுப்பாராம். பிறகென்ன, அதை வைத்தே, நீ புலிகளுடன் தொடர்புள்ள ஆள், என்று வெருட்டியே பணம் பறிப்பார்களாம்.
நீங்கள் வாகனம் ஏதாவது வைத்திருந்தால் வீட்டிற்கு வந்து வாகனத்தைத் தரும்படி கேட்பார்களாம். குடுக்க வேண்டும். அப்படி குடுக்கவில்லை என்றால், பிறகு பிரச்சினை ஆரம்பம் தானாம். அடிக்கடி வந்து புலி ஆதரவாளரா, வீட்டில் உள்ளவர்களை அடிப்பார்களாம், பணம் தா என்று தொந்தரவு தானாம். அவர் தன்னுடைய வாகனத்தை பெருசு [அரசு] பாவிக்கவும் தான் கொடுப்பதால் அவரிடம் இன்னும் ஒரு தொந்தரவும் செய்யவில்லையாம்.
நான் கேட்டேன், நீங்கள் அரசு பாதுகாப்புப் படைகளுடன் தான் உங்கள் வேலை, புலி அடித்தால் நீங்களுமல்லவா போய்ச்சேர்ந்து விடுவீர்கள் என்றேன். அதற்கு அவர், ஆமாம் இறந்தால் தன் பெயரும் சிங்களப் படைகளுடன் வரும். தன் வேலை அப்படி என்றார்.
புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் ஒரு படகை இரவோடு இரவாக மூழ்கடித்த செய்தி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது நடந்த சமயம், சிங்களப் படைகள் மிகவும் பயந்து விட்டதாம். சிங்களப் படைகள் நினைத்தார்களாம், புலிகள் விமானத் தாக்குதல் தான் நடத்திவிட்டார்கள் என்று. அந்தப் படகு கவுண்டு விட்டதாம். அதை நிமிர்த்துவதிலும் அதில் உள்ள சாமான்களை எடுப்பதிலும் இன்னும் முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறார்களாம். ஆனால், எந்த சிப்பாயும் இறக்கவில்லை என்றார். அவர்கள் பாய்ந்த்துவிட்டார்களாம்.
ஒரு சமர் பற்றி அவர் சொன்னார். அவரின் பாதுகாப்புக் கருதி அதை இங்கே கூறவில்லை.
அங்கு எல்லோரும் இப்போது புலிகளுக்குத் தானாம் ஆதரவாம். பிள்ளையானின் அட்டகாசங்களால் மிகவும் வெறுத்துப் போய் இருக்கிறார்களாம். ஆனால் எல்லோரும் தாங்கள் பிள்ளையான் ஆதரவாளர்கள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்களாம், பிள்ளையானுக்குப் பயந்து. பிள்ளையான் குழுவில் சேர்ந்த்தவர்கள் பணம் சம்பாதிக்கிறார்களாம். அவர்களுடைய வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் சேர்க்பட்டு இருக்கிறதாம்.
அவர் இன்னும் ஒன்று சொன்னார். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தான் இங்கு [கனடாவில்] தங்கவில்லை; தான் மீண்டும் போகப்போகிறேன் என்றார். அங்கத்தை வாழ்க்கை ஒரு thrilling ஆக இருக்கு என்றார்.
2 Comments
சுந்தரவடிவேல்
பகிர்ந்தமைக்கு நன்றி!
Keli
Ppl like you get all the bransi. I just get to say thanks for he answer.