Computer,  Tamil Nadu,  Thamizh

தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!

இந்த இடுகையானது மயூரன் அவர்களின் சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? என்னும் இடுகைக்கான எனது பதில் இடுகை.

நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம்.

“வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம்.
இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடன் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி.

சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே?

இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த‌” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை” என்று காட்டும்.

ஆங்கிலத்தில் இப்படி எல்லாம் விதிகள் இல்லை. ஆங்கில இலக்கண விதிகளுக்கே பல விதிவிலக்குகள் இருக்கின்றன. பிரஞ்சுக்கு இதைவிட அதிகம். தமிழ் மிகவும் கட்டுக்கோப்பான மொழி. அங்கில மென்பொருள் ஒன்று உள்ளது. நீங்கள் ஒலிவாங்கியில் சாதாரணமாகக் கதைப்பது போல் கதைக்க கணினியில் உங்கள் வசனங்களை அது தானாகவே கண்டுபிடித்து தட்டச்சும். இப்பட்டிப்பட்ட மேம்பட்ட செயற்பாடு ஆங்கிலம் போன்ற மொழிக்கே இருக்கிறதென்றால், தமிழுக்கு நிச்சயமாகச் செய்யலாம். இந்த அங்கில மென்பொருள் எந்தக் காலமோ வந்தாலும் அது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. காரணம் எல்லா நேரமும் சரியாக நீங்கள் சொல்வது வராது. இதற்கு ஆங்கில மொழியின் இலக்கண விதிகளே காரணம். தமிழுக்குச் செய்தால், மிகத் துல்லியமாகச் செய்யலாம். ஏனெனில், தமிழில் ஒரு சொல்லை ஒரு விதமாகத் தான் உச்சரிக்கலாம். ஆங்கிலத்தில் அப்படி அல்ல. உ+ம்: லைவ் = live = நேரடி ஒலிபரப்பு, லிவ் = live = வாழ்; இப்போ இதைச் சொல்லிப்பாருங்கள்: live your life!

இங்கே இந்த ஒளிநாடாவைப் பாருங்கள். வேடிக்கை புரியும். இது மைக்றோசொவ்டின் புதிய இயங்குதளமான விஸ்டா அறிமுகப்படுத்தியபோது அரங்கில் நடந்தது.
[kml_flashembed movie="http://www.youtube.com/v/kX8oYoYy2Gc" width="425" height="350" wmode="transparent" /]
அவர் ஏதோ சொல்ல கணினி தன்னிச்சையாக வேறு ஏதொ அடிக்கிறது.

அப்ப ஏன் இன்னும் தமிழுக்கு இப்படிச் செய்யவில்லை?
இதை ஆராய்ச்சி செய்து உருவாக்குவதற்கு பண உதவி வேண்டும். அது தமிழ் அரசிடமிருந்து கிடைப்பதில்லை. இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் கூட [முரசு, INFITT/ உத்தமம்] தனியார்/ ஆர்வலர்கள்/ குழும‌ நிறுவனங்கள் தங்கள் பணத்தை போட்டுத் தான் செய்கின்றன. தமிழ் அரசு ஒருங்குறி ஒன்றியத்தில் அங்கத்தவராகக் கூட இருக்கவில்லை, தமிழை ஒருங்குறியில் ஏற்றும்போது! இவர்களும் முயற்சிக்கிறார்கள் Developing Intelligent Indic Applications.

அப்படிப் பெருந்த்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்தால் யார் அதை வாங்குவார்கள்?
தமிழுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆங்கிலத்திலத்திலேயே எல்லாம் செய்ய அரசு அனுமதிப்பதால்், ஏன் தமிழுக்கு என்று பணம் செலவு செய்து அதை வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். அரசு தமிழை அமுல்படுத்தினால், நிறுவனங்கள் வாங்க முன்வரும். நிறுவனங்கள் வாங்க முன்வந்தால், ஆராய்ச்சியாளர்கள் போட்டிபோட்டு மிகவும் மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட தமிழ்த் திருத்தியை உருவாக்குவார்கள்.

பெருந்தொகைப் பணத்தைப் போட்டுச் செய்துவிட்டு அதை இலவசமாகக் கொடுக்கவும் முடியாது.

தொல்காப்பிய விளக்கங்கள்:
கடுவெளி
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 2
tamil-ulagam : Message: tholkaappiyamum kuRiyeeRRangkaLum – 3
tamil-ulagam : Message: tholkaappiumum kuRiyeeRRangkaLum – 4

6 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo