India,  Politics

இந்தியாவில் புரட்சி?!

என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கு இன்னுமொரு சுதந்திரம் தேவையில்லை.

சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்/ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு தேவை புரட்சி.
எதாவது ஒரு நற் சிந்தனையோடு ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அவரின் வழிகாட்டலில் நாட்டின் கட்டமைப்பை புரட்டிப் போட வேண்டும். கட்டுக்கோப்பான செயல்முறையால் பல புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சற்று கடினமான செயற்பாடுகளால் தான் நிறுவ
முடியும்.

ஃபிரஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதைப் போல்.

ஆனால், புரட்சி வெடிக்க நாட்டின் நிலமை மிக மோசமாக (அ) பலரின் வெறுப்பிற்கு பின் தான் நடக்கும்.

இன்றய இந்திய நிலமை மிக நல்ல நாடாகவும் இல்லை, கெட்ட நாடாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலமை. ஆகவே இப்போதைக்கு புரட்சி இல்லை.

சரி புரட்சி அமைப்பு ஒன்று இல்லை என்று சொன்னால் சரியாகுமா? புரட்சி அமைப்பு என்பது ஒரு சட்ட பூர்வமாக உருவாவது இல்லை.

புரட்சி அமைப்பை வெளியில் இருப்பவர்கள் உருவாக்க இயலாது. அது உள்ளிருந்து [இந்தியாவில்] தான் உருவாக வேண்டும்.

புரட்சி எப்போதும் சட்டத்திற்கு எதிராகத் தான் செய்யப்பட்டது. ஆகவே எந்த ஒரு அரசியல் கட்சியாலும் இதை செய்ய இயலாது. வாக்கு கேட்டு தேர்தலில் நிற்கும் கட்சி உதவி செய்யலாம், ஆனால் அது அந்த அரசியல் நோக்கத்திற்காகவே இருக்கும். ஆகவே, அரசியலில் இல்லாத அமைப்பு தான் புரட்சியை செய்து முடிக்கலாம்.

கஷ்டம் வந்த பின் தானே ஐயா புரட்சி செய்வார்கள். கஷ்டம் இல்லாத போது ஏன் புரட்சி செய்ய வேண்டும்?

இந்தியாவில் புரட்சி

புரட்சிக்கு முதலாவது மக்கள் பலம். தற்போதைய கட்டமைப்பில் வெறுப்படைந்து பெரும்பாலானோர் புரட்சியை ஆதிரிக்க. இது இந்தியாவில் சற்று இருக்கென்று தான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருக்கும் வெறுப்பு தான் இந்தியாவில்.

புரட்சியை முன்னெடுக்க கூடிய திறன், திடம் மிக்க மனிதர்கள். இந்தியாவில் யாராக இருக்க முடியும்?

வேலையில்லாப் பட்டதாரிகள்!

நாட்டின் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு கொதிப்படைந்து இருந்தாலும், நல்ல கல்வி கற்றவர்கள். நற்சிந்தனை உதிக்கக்கூடியவர்கள்.

இவர்களுக்கு ஆலோசனை சொல்ல நல்ல முதியவர்கள் [சத்தியமாக அரசியல்வாதியாக இருக்கக் கூடாது].

அப்போ ஏன் இந்தியாவில் புரட்சி ஆரம்பிக்கவில்லை?

பலர் இன்றும் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பது. அன்றாட அடிப்படைத் தேவைக்கே யோசிக்க வேண்டி இருக்கும்போது நாட்டைப் பற்றி யோசிக்க முடியுமா? ஆகவே புரட்சியை நகரத்தில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும்.

தீவிரவாதம் இன்னும் நாட்டில் இருப்பதால், யாராவது புரட்சிகரமான சிந்தனையோடு வெளிக்கிட்டால், சந்தேகக் கண் கொண்டு பார்க்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு. புரட்சி செய்ய முற்படுபவன் கடைசியில் நாட்டைப் பிரிக்கிறான், மக்களைக் குழப்புகிறான் என்று தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுவான் என்ற பயம் மக்களுக்கு.

புரட்சி ஒரு இரவில் வெடிப்பதில்லை. சுதந்திரம் போல் சிறுகச் சிறுக கட்டியமைத்து கடைசியில் பேரெழுச்சி பெறுவது.

இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்க இயலாது. முன் சொன்ன காரணிகள் இந்தியா முழுவதும் வராது. ஏதாவது ஒரு மாநிலம் தொடங்கினால் மற்றவை இதைப் பார்த்து தொடங்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு சட்டமோ (அ) வசதியோ கொண்டுவந்து விட்டார்கள் என்றால் மற்றய மாநிலங்களும் செய்ய எத்தணிக்கிறார்களே அப்படி.

 

பாகம்  – 02 >>

 

_____
CAPital

4 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image