India,  LTTE,  Tamil Nadu,  War of Tamil Eelam

நாதியற்ற தமிழர் நாம் – 4

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். சற்றே சிந்தித்துப் பாருங்கள், எவ்வளவு இக்கட்டான நிலமை. சில நாட்களோ (அ) சில மணி நேரமோ என்று இருக்கையில், இப்படிச் சிந்திக்க முடியுமா? இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும். தலைவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது கூறுவார்கள், அவர் ஒரு தொலை நோக்குப் பார்வை உடையவர் என்று.

இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGற் தான் ஆயுதம் தந்தார் என்பதை.

கிட்டு கூட இந்திய கடற்பரப்பில் பயணம் செய்யும்போது இந்தியா மடக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இந்தியா கிட்டுவை பிடிக்க முற்பட, தமிழீழத்திற்காய் உயிர் துறந்தார். இந்தியா தனது எல்லையையும் மீறியே புலியை எதிர்த்தது.

இந்தியாவின் ஒரு துளி உதவி கூட இல்லாமல் தான் புலி இப்போது மிகப் பெரும் இயக்கமாக, அரசாங்கமாக உருவெடுத்திருக்கிறது [உதவி என்ன எதிரியாவே இருந்தும்]. கடற்படை, விமானம், நீர்மூழ்கிக் கப்பல் [உள்ளூர் தயாரிப்புகள்] எல்லாம் இருக்கு. புலிகளிடம் என்னம் அணு குண்டு தான் இல்லை.

அன்று றாஜீவ் காந்திக்கு குடுத்த அடியால் தான் இன்று இந்திய இராணுவம் இலங்கைக்கு வரப் பயப்படுது.

அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கு. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், தமிழீழத்தில் இந்தியா குடிகொண்டிருந்திருக்கும். அன்று தலைவர் தன் உயிருக்காக கொள்கையை கைவிடவில்லை. இன்று இந்தியாவில், தேர்தல் சீட்டுக்காக கட்சி மாறுகிறார்கள். இது தான்யா இந்திய அரசியல் வாதிக்கும் தமீழத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்.

சும்மா போராளிகளை மட்டும் வளர்க்கவில்லை எமது தலைவர். ஒரு நாட்டுக்கு தேவையான சகலதையும் வளர்த்திருக்கிறார். கலை, பண்பாடு, சுயதொழில் என்று சகலதும். திறமையானவர்கள் போராளியாக சேர விரும்பினாலும், தலைவர் அவர்களின் திறமைக்கேற்ப வேறு துறைகளிலோ [அரசியல், மக்கள் தொடர்பாளர், பேச்சாளர்] (அ) மேற்படிப்போ செய்ய திட்டங்களை அமுல்படித்தியிருக்கிறார். அறிவாளிகளை, புலி தனது செலவில் வெளிநாடு சென்று படிக்க முழுப் பண உதவியும் குடுக்கிறார்கள்.

இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதற்காக, எல்லோரையும் புலி சேர்க்கவில்லை. ஒரே குடும்பத்தில், மூத்த தமையன் புலிக்கு சேர்ந்து, இரண்டாவது தமையனும் சேர்ந்து, பின் இளைய தங்கையும் புலிக்கு சேர, புலி இளைய தங்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது. ஒரே குடும்பத்தில், எல்லோரும் புலிக்கு சேர்ந்தால் அந்தக் குடும்பம் மீண்டும் தழைக்காமல் போய்விடக்கூடும் என்றும் சிந்திக்கவும் செய்கிறது. இப்படி பல நிகழ்வுகள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியா மிக முக்கியமாக இருந்தாலும், எம்மை எதிர்த்தால், அது எவராக இருந்தாலும், பாய்வோம். அமெரிக்கா வியற்நாமில் தோற்றது போல், இந்தியா தமிழீழத்தில் தோற்றது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு உதவி இருப்பான். நீ புலியா (அ) தமிழனா என்று கேட்பதற்கே அங்கு இடமில்லை. புலி என்றால் தமிழன், தமிழன் என்றால் புலி என்று வரலாறாகிவிட்டது. இனி இதை அகராதியில் ஏற்றுவது தான் மிச்சம்.

இந்தியத் தமிழர்களை தமிழர்களாகவே எண்ணவே தோன்றவில்லை ஐயா. இந்திய அரசாங்கம் தமிழர்களை கொன்றொழிக்க அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தானே. அவர்களும் இந்தியர்களே; தமிழர்கள் அல்ல.

<< பாகம் – 03

_____
CAPital

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image