-
திருகோணமலையின் நிலை
கனடாவில் தமிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] நடைபெறுகிறது. நான் நேற்று எங்கள் அண்ணன் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நாள் முழுவதும் மழை. தமிழ் கார்னிவேல் வெட்ட வெளியில் நடப்பதால், மிகக் குறைந்த அளவிலான சனமே [வழமைக்கு மாறாக] வந்திருந்தார்கள். இன்றாவது மழை பெய்யாமல் நடத்துனர்களுக்கு நட்டம் வராமல் இயற்கை அன்னை வழிசமைப்பாளாக. சரி விசயத்திற்கு வருகிறேன். சாப்பிடலாம் என்று சாப்பாடு வாங்க ஒரு கடை [வெட்டவெளியில் தற்காலிகமாக போடப்பட்ட கடை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவருடன் உரையாடினேன். அவர் அரச வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோகம் இல்லைங்க , அரச பாதுகாப்பு படையுடனனான வேலை [ஆனால் இவர் போராளி அல்ல]. எனக்கு கொஞ்சம் தயக்கம், அரச சார்பான ஆளோ என்று. கனடா வந்து 2 கிழமைகள் தானாம். திருகோணமலையில் பிள்ளையான் குழுவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றார். அவர்கள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வருவார்களாம். உங்களோடு சும்ம வந்து கதைப்பார்களாம். அப்படி கதையோடு கதையாக இன்னொருவர் படம்…