WordPress Tips
-
இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை
வலைப்பதிவில் இடுகைகள் இடும்போது, தமிழில் தலைப்பை வைப்பதினால் சில தொழில்நுட்ப சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள், நமது தமிழ் வலைப்பதிவாளர்கள். அவற்றை சரி செய்ய வழியை இங்கே தருகிறேன். ஒருங்குறித் தமிழ் கணினியில் வேலை செய்தாலும், எல்லா இடங்களிலும் ஒருங்குறித் தமிழ் வேலை செய்யாது. இதற்குக் காரணம் தமிழ் இரண்டாம் தர மொழியாக ஒருங்குறியில் ஏற்றப்பட்டதே. [மேலும் அறிய தமிழ் ஒருங்குறி?!] உங்கள் இடுகைகளை தமிழ் தலைப்பில் சேமிக்கும்போது வலைப்பதிவு மென்பொருள் அந்த தலைப்பை இணைய முகவரியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், “போ” என்பது இணைய முகவரி இடும் இடத்தில் அப்படி சரியாகத் தெரியாது. அது இணைய முகவரிகளை சேமிக்கும் முறையில் மாற்றியே தெரியும். அது மட்டுமல்லாமல் “போ” என்பது தமிழ் ஒருங்குறியில் 2 குறிகள். ஒரு குறி அல்ல. அப்படித் தான் தமிழ் ஒருங்குறி அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நீங்கள் உங்கள் இடுகைக்கு “நான்” என்று தலைப்பைக் கொடுத்தால் அது உண்மையில் 4 குறிகள். இணைய முகவரிக்கு 255 எழுத்துக்களை தாண்டக் கூடாது என்பது விதியாகும். இப்போது நீங்கள்…