Thamizh
-
“ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?
ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் அம்மா “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம். இப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை. ______ CAPitalZ
-
தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!
இந்த இடுகையானது மயூரன் அவர்களின் சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? என்னும் இடுகைக்கான எனது பதில் இடுகை. நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம். “வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம். இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடன் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி. சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே? இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை”…
-
WordPress செயலியை ஏற்கனே நிறுவி நடத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அன்பான வலைப்பதிவு நடத்துனர்களே, …தமிழர்களின் கலாச்சார, பொழுதுபோக்கு, மற்றும் பாரம்பரிய அம்சங்களை வெளிக்காட்டும் விதமாக WordPress Theme அமைத்துத் தரும்படி வேண்டிக்கொள்கிறேன். … மேலும் …
-
உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை!
அன்பான வலைப்பதிவாளர்களே. உங்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் _/|\_ என்னடா இவன் இப்படி தொடங்குறானே என்று பார்க்கிறீர்களா? உங்க உதவி வேணும் அது தான். அட அது ஒண்ணுமில்லீங்க. தமிழ் வலைய வரலாற்றில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன]. அப்படி நான் கேட்டு விட்டதிற்கு விழியன் ஒரு பரிந்துரை செய்திருந்தார் [ நன்றி விழியன்] “Adadaa.net”. அடக் க்டவுளே நான் எத்தனையோ இணையத் தள முகவரி தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றுமே கிடைக்கலைங்க. நிசமாலுமே என்ற இடுகையைப் பார்த்தா உங்களுக்கே தெரியும் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன]. அவர் சொன்ன adada.com உம் இல்லை. ஆனா adadaa.net இருந்திச்சு. மூன்றெழுத்தா இருந்திச்சா, Adadaa.net. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” என்று நானும் பாடலாமே என்று அதையே பதிவு செய்துவிட்டேன். அதாவது http://adadaa.net/ இப்ப அந்தத் தளத்தில் பெரிசா…
-
உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன்
ஒரு நல்ல கருத்துடைய இணைய தள முகவரி ஒன்று கூருங்களேன். நான் புதிதாக ஒரு இணையத்தளம் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன். எனது எல்லா பதிவுகளையும் ஒரு முகவரிக்குக் கீழ் கொண்டுவர உத்தேசம். அதாவது http://1paarvai.wordpress.com/ http://1kavithai.wordpress.com/ http://1paththiram.wordpress.com/ http://1about.wordpress.com/ http://1seythi.wordpress.com/ http://1letter.wordpress.com/ http://1padam.wordpress.com/ இதில் “wordpress” என்னும் சொல்லுக்குப் பதிலாக தான் எனக்கு சொல் தேவை. கட்டாயம் மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதாவது ஒரு தமிழ் சொல்லாக, சிறிய சொல்லாக, நல்ல பரந்த கருந்துடைய சொல்லாக இருந்தால் நலம். எனக்குத் தோன்றியவை, ஆனால் எனதாக்க முடியாதவை. aalam.com – ஆல மரம் naan.com – நான் naam.com – நாம் viidu.com – வீடு – ஆனால், இரண்டு ‘i’ மிக நெருக்கமாக இருப்பதால், முகவரியை பிழையாக விளங்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. veeli.com – வேலி _____ CAPital சேர்க்கப்பட்டது I: 2006/10/12 @ 3:28 PM [GMT -5] vaasal.com vaasam.com vaanam.com vanam.com naadu.com auvai.com –…
-
தமிழ் ஒருங்குறி ?! – 16
– ஒருங்குறியின் மேன்மை – பிற மொழிகள் இடம்பெற்ற முறை – தமிழ் மொழிக்கு உள்ள இடம் – தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல் – தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு – தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம் – தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள் – போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன். ஒருங்குறியும் தமிழும் மேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும். ______ CAPital பி.கு. :- பவர் பொய்ன்றில் தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் TSCu_Paranar.ttf எழுத்துருவை தரை இறக்கி நிறுவிப் பார்க்கவும். ஒருங்குறிக்கே இந்த நிலமையா! 🙁 TSCu_Paranar தரையிறக்கியவுடன் TSCu_Paranar.txt என்னும் கோப்பின் பெயரை TSCu_Paranar.ttf என்று மாற்றுக. பாகம் – 17 >> << பாகம் – 15
-
தமிழ்
தமிழுக்கு என்றொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஒரு சொல்லிலிருந்து அதன் செயற்பாட்டை கண்டறியலாம். உண் திருபடைந்து உணவு ஆக மாறினாலும், இப்பொதும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளையும் ஒரு சில விளக்கங்களோடு இன்றய மனிதனால் புரிந்து கொள்ளலாம். இச் சிறப்பம்சம் தமிழுக்கு மட்டுமே உள்ளது. இதே போல் ஆங்கிலத்தின் மூத்த நூல்களை இக்காலத்தில் வாசித்து புரிந்து கொள்ள முடியாது. அதற்கென மேலும் படித்தே உங்களால் புரிந்துகொள்ள முடியும். முக்கியமான விடையம் என்னவென்றால், ஆங்கிலம் என்று சொல்கிறோமே தவிர, அவை ஆங்கில எழுத்துக்களே அல்ல. அவை லத்தீன் எழுத்துக்கள். இவ்வாறே, பல ஐரோப்பிய மொழிகளும் தங்கள் எழுத்துக்களை விட்டு லத்தீன் எழுத்துக்கு தாவி பல காலம். அதனாலேயே செம்மொழி என்று வேறு பல மொழிகள் அறிவிக்கப்பட்டாலும் கூட அந்த மொழிகள் இப்போதைக்கு பாவனையில் இல்லை. அவைகள் முற்றுமுழுதாகவோ அல்லது கூடுதலானதாகவோ கைவிடப்பட்டு புதிய முறையில் இருக்கின்றன. இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட தமிழை எம் சந்ததி தான் குலைத்துவிட்டது என்ற அவச்சொல் எதிர்காலத்தில்…