Tamil Eelam
-
தமிழா நீ?
எனக்கும் என் சகோதரனுக்கும் பிரச்சினை. அடுபட்டுக்கொள்வோம். எனக்குத் தேவையான சொத்தை பிரித்துத் தா என்று பேசுவோம். பக்கத்து வீட்டுக்காரன் எனது சகோதரனை எங்கோ வீதியால் போகும்போது அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டான் என்றால் நானும் கசோதரனும் ஒன்று சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடுவோம். அயலூர்க் காரன் நம்ம ஊரில் நாட்டாமை செய்தால், பகைமையை தள்ளிப்போட்டு ஒன்றுசேர்ந்து அவனை எதிர்ப்போம். சரி பக்கத்து மாகாணக் காரன் எம்மை அடிமைப்படுத்த முயல்கிறான் என்றால், அயலூர்க் காரனையும் ஒன்று சேர்த்து பக்கத்து மாகாணக் காரனுடன் சண்டை போடுவோம். பக்கத்து நாட்டுக்காரன் போர் தொடுக்கிறான் என்றால், எங்கள் மாகாணப் பிரச்சினையை தள்ளிப்போட்டு விட்டு ஒன்று சேர்வோம். பிரித்தானியா கிட்லருடன் போர் தொடுக்கும்போது இந்தியாவும் பிரித்தானியாவிற்குத் தானே உதவியது. அன்று பிரித்தானியா அடிமைப்படுத்துகிறவன், அவனை கிட்லர் அழிக்கட்டும் என்று சும்மா இருந்திருந்தால் கிட்லர் இந்தியாவைப் பிடித்திருப்பான். வேண்டாம், ஒரு வேறு கிரக மனிதர்கள் [alien] எமது பூமி மேல் போர் தொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்கன் காரன் சண்டை பிடிக்கட்டும், அவன் சர்வாதிகாரி,…
- Government of Tamil Eelam, India, LTTE, Sri Lanka, Tamil Eelam, Tamil Nadu, Tamils, War of Tamil Eelam
புலி ஆதரவு ஏன்?
ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன? ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும். இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம். இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது. பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது. 1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது. சிங்களம் மட்டும்…
-
தமிழீழ தேசிய கீதம் எழுதும் கவிஞர்களுக்கு/ இசையமைப்பாளர்களுக்கு
தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது. இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது. எந்த ஊர்ப் பெயரோ, மாகாணப் பெயரோ வராமல் இருப்பது நலம். தலைநகர் பெயரும் வராமல் இருப்பது நலம். எதிர்காலத்தில் தலைநகர் பெயரை மாற்ற வேண்டி வந்தால் (அ) தலைநகரையே மாற்ற வேண்டி வந்தால், பிறகு தேசிய கீதத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். திசைகள் வரலாம். தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்களாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும். தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம். பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது. இது தேசிய கீதம். போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது. தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும். தமிழன்…
-
வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு தமிழீழம் எதிரியாக இருப்பது நல்லதா? – 01
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். அவர்கள் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அறிவுடையதாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தான் உண்மை. உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு…
-
பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்
சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை. சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை. பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை. மதம் கேட்கப்பட்டது. மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது] ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்: வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள். குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில். குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை. பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை.…