Tamil Eelam
-
தமிழீழ அரசு நோக்கிய பயணம்
சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பலத்த நேயத்தைப் பிரிக்கும் விதமாக பல சந்தேக குதர்க்கங்களை கட்டுரையாக எழுதுகிறார்கள். இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் தலைவர் சொன்னால் தான் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் தமிழர்களைப் பிரிக்கிறார்கள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள். புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும். தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள். அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும். இதைத் தான் இலங்கை/ இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது. நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்கள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவராக இருக்கலாம்; அல்லது அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்று நம்புவராக இருக்கலாம். உங்கள் நம்பிக்கை எதுவாயினும் தற்போது தமிழீழம்…
-
இந்தியா ஐநா சபையில் வெளிநடப்பு!
இந்தியா தமிழின அழிப்பாளிகளில் ஒருவர் என்ற பட்டத்தை, 25,000 மக்களுக்கு மேல் கொன்றும், 30,000 ஆயிரம் மக்களை அங்கவீனராக்கியும், 3,00,000 மக்களுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இடப்பெயரவைத்தும் நிரூபித்திருக்கிறது. எங்கள் தலைவரைக் கொல்லத் துணைபோனதிலிருந்து, இந்தியா தமிழனின் துரோகி என்பதை நெடுங்காலத்திற்கு உறுதியாக்கிவிட்டது. தமிழ் நாட்டுத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்களே என்று கூட கவலைப்படாமல், தமிழின அழிப்பிற்கு சிங்கள இராணுவத்துடன் துணை நிற்கிறது. முன்பு இந்திய “அமைதிப் படை” யாய் வந்து செய்த கற்பழிப்புகள் போதாதென்று, இப்போது இந்தியா, இலங்கை அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக ஐநா வரை கைகோர்த்து நிற்கிறது. டென்மார்க் மற்றும் சுவிஸ் நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஆராய வேண்டும்; அதற்கு தனியாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்தது. விடுத்த கோரிக்கையை எதிர்த்து, அதற்கு என்று தனியாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக எதிர்த்த நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், மலேசியா. 17 நாடுகள் இல்லை, மனித உரிமை மீறல்கள் பற்றிய தனிப்பட்ட விவாவதம் வேண்டும்…
-
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது. அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது. இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது? புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.
-
தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?
என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா? அட பின்ன என்னங்க? தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது? என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க]. சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள். எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ? ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது. மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார். தனக்கு புலிகள் அந்தக்…
-
[தமிழ் நாடு பயணம்: 4] தமிழ் நாடும் கேரளாவும் 4 வித்தியாசங்கள்
தமிழ் நட்டில் தரையிறங்கி வெட்ப தட்ப நிலையையும் உணர்ந்த்தாச்சு. இனி என்ன கண்டேன் என்று பார்ப்போமா. முன் இடுகைகளில் இருந்து நான் பார்த்த தமிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். கனடாவில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இலங்கையில் இருந்து தமிழ் நாடு போகிறவரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்சயமாக வேறுபடும். எங்கள் வண்டி மேல்மருவத்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்றது. வாகனங்கள் மிக நெரிசல்களாக பயணித்தன. பயணத்தில் நவீன தமிழ் நாடும், ஏழ்மை தமிழ் நாடும் மாறி மாறி வந்தன. அது என்ன அது? சில கட்டிடங்கள்/ இடங்களைக் கடக்கும்போது நவீன மயமாக்கியதாக இருக்கும். வடிவாக, சுத்தமாக இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன கட்டிடங்கள் போல் கட்டிடங்களையும் காணக்கூடியதாக இருந்தது. நான் நினைத்தேன் இவை என்ன நம்ம ஊரில் உள்ள கட்டிடங்கள் போல் அல்லவா இருக்கிறது. பல சிறிய கோவில்கள் கூட தவிக்க விட்ட நிலையில் இருந்தன. கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.…
-
தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீடு
இது தாங்க தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீடு. இப்படித் தான் இறுதியாக வந்த சமாதான காலத்தில் இருந்தது. என்ன ஆச்சரியம், எத்தனை பேரின்ரை வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தாலும், தலைவரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்கள். [பெயின்ற் இப்போது அடித்தது, ஆனால், கட்டிடம் பழைய கட்டிடமே]. தலைவர் முதன் முதலில் சிங்கள இராணுவம் வீடு தேடி வந்தபோது ஒளிந்திருந்த மரமும் தெரிகிறது. எனது பெற்றோர் சமாதான காலத்தில் தமிழீழம் சென்றிருந்த போது அவர்கள் போய்ப் பார்த்தார்கள். இதில் இன்னும் விசேடம் என்ன தெரியுமா? சமாதான காலத்தில், சிங்கள ஊர்களில் இருந்து பேரூந்து சுற்றுலா வந்து எல்லாம் பார்த்தார்களாம். சிலர் போகும்போது ஒரு பிடி மண் எடுத்துக்கொண்டும் சென்றார்களாம். எதிர் காலத்தில் இந்த வீடு ஒரு பெரும் சுற்றுலா தலமாக வந்தாலும் வரும், தமிழீழம் கிடைத்த பின். தலைவரைப் போல் இந்த வீடும் என்றும் சாயாது இருக்க வேண்டும்.
-
மாவீரர்கள் தெய்வங்கள் என்று சொல்வது சரியா?
மாவீரர்களை நினைவுகூற வேண்டும் என்று மாவீரர் வாரமாக நவம்பர் 21 முதல் 27 வரை கடைப்பிடிக்கப் படும் என்று தலவர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் நேரத்தில் வெளியிட்டார். அப்போது நானும் தமிழீழத்தில் இருந்தேன். அது பற்றிய எனது பதிவை இங்கே படிக்கலாம். நேன்று நான் இருந்த தொடர் மாடிக் கட்டிட வளாகத்தில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது. ஒரு 75 பேர் அளவில் வந்திருந்தார்கள். 6:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 7 மணிக்கு கதவு பூட்டப்பட்டது. அதன் பின் வந்தவர்கள் எவரும் உள் அனுமதிக்கப்படவில்லை, மாவீரர் கல்லறைக்கு தீபங்கள் எல்லோரும் ஏற்றி முடியும் வரை. வழமை போல் எல்லாம் நடைபெற்றது. நான் இங்கு பதிவு போடக் காரணம் அது அல்ல. இந்த நிகழ்வை நடத்தியவர், மாவீரர்கள் தெய்வங்களாக வழிபட வேண்டியவர்கள் என்று அடிக்கடி உறுதி கொண்டார். இப்படி தலைவர் எதையும் சொன்னது இல்லை. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னது மட்டுமே. இன்னும் சொல்லப் போனால், சமயம் சம்பந்தமாக எதுவுமே இயக்க நடைமுறைக்குள்…
-
இந்தியாவின் உதவி
ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வருகிறேன். தமிழீழ உணர்வை உணராமல் “உதவி” என்பது உதவியல்ல. தமிழீழம் தான் வேண்டும். புலிகள் தான் எங்கள் அரசு. உணர்ந்து செய்வதே “உதவி” என நினைக்கப்படும். இல்லையேல் “துரோகம்” என [இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் நடந்தது போ] நினைக்கப்படும். என்ன தான் தலை கீழாக நின்றாலும், “தமிழீழம்” தான் முடிவாக இருக்க வேண்டும். இல்லையேல் யார் செய்வதும் “உதவி” என்று கணக்கில் எடுபடாது. இதுவே இப்படி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி தமிழீழத்தை தடுக்க எடுக்கும் எந்த சிறு செயலும் “துரோகம்” என்றே எண்ணப்படும். இது தான் அன்றும் நடந்தது. புலிகள் எங்களின் வலிமைமிக்க படை. பிரபாகரன் எங்கள் தலைவர். தமிழீழம் தருகிறோம் பிரபாகரனைத் தாருங்கள் என்று சொன்னால் கூட தாரை வார்க்கத் தயாரில்லை. ஏனென்றால், நாங்கள் பலமுறை ஏமாந்து போனோம். இலங்கையிடம் கணக்கிலடங்கா முறையும், இந்தியாவிடம் கூட ஏமாந்து போனோம். இனி தலைவரைத் தவிர வேறெவரையும் நம்பத் தயாரில்லை. சமாதான…
-
வடிவேல் அரசியலும், தமிழீழமும்
தமிழர்களுக்குத் தமிழீழம் வேண்டும். இதை எதிர்ப்பவர் எல்லோரும் எதிரிகளாகத் தான் பார்க்கப் படுவார்கள். சிங்களவர்கள் இலங்கையைப் பிரிக்க எத்தணிக்கும் எவரும் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இரண்டும் வேறு வேறு நாடுகளாகத் தான் இருந்தன என்பதை சிங்கள அரசு கணக்கிலெடுக்குதில்லை. இதனால் தான் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது, தமிழர்களும் எதிர்த்தார்கள், சிங்களவர்களும் எதிர்த்தார்கள். இறுதியில் எதிரியின் எதிரி நண்பன் என்ற சூட்சுமத்தைக் கையாண்டுவிட்டார்கள். என்னமோ ஏதோ, இந்தியா பொய்க் காரணங்களைச் சொல்லி தமிழீழம் அமைவதைத் தடுப்பதில் மூச்சாக இருக்கிறது. வங்காள தேசம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வரும் என்று எண்ணாத இந்தியா இப்போது மட்டும் ஏதோ கவலைப்படுவது போல் காட்டிக்கொள்கிறது. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவதற்கான பல காரணிகள் இருந்தன. புதிதாக உருவாகிய இந்தியா, நாட்டு அரசியல் எப்படி இருக்கும் என்று தெரியாத பல தேசங்கள். இந்து முசுலிம் கலவரம் நடந்து முடிந்த காலம். இலங்கை அரசின் வாக்குறுதிகளுக்கு மனம் ஆறுதலடைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைச் சொல்கிறது. 20 வருடங்களுக்கு மேலாக…
-
திருகோணமலையின் நிலை
கனடாவில் தமிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] நடைபெறுகிறது. நான் நேற்று எங்கள் அண்ணன் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நாள் முழுவதும் மழை. தமிழ் கார்னிவேல் வெட்ட வெளியில் நடப்பதால், மிகக் குறைந்த அளவிலான சனமே [வழமைக்கு மாறாக] வந்திருந்தார்கள். இன்றாவது மழை பெய்யாமல் நடத்துனர்களுக்கு நட்டம் வராமல் இயற்கை அன்னை வழிசமைப்பாளாக. சரி விசயத்திற்கு வருகிறேன். சாப்பிடலாம் என்று சாப்பாடு வாங்க ஒரு கடை [வெட்டவெளியில் தற்காலிகமாக போடப்பட்ட கடை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவருடன் உரையாடினேன். அவர் அரச வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோகம் இல்லைங்க , அரச பாதுகாப்பு படையுடனனான வேலை [ஆனால் இவர் போராளி அல்ல]. எனக்கு கொஞ்சம் தயக்கம், அரச சார்பான ஆளோ என்று. கனடா வந்து 2 கிழமைகள் தானாம். திருகோணமலையில் பிள்ளையான் குழுவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றார். அவர்கள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வருவார்களாம். உங்களோடு சும்ம வந்து கதைப்பார்களாம். அப்படி கதையோடு கதையாக இன்னொருவர் படம்…