Politics

  • Politics,  Terrorism

    Arar and Canadian Security

    The Arar report, terrorism and Canadian security When Justice Dennis O’Connor released his report on the Arar Commission, the Canadian government censored 1,500 words, pitting the commission against the Attorney-General at Federal Court hearings this spring. In July, Mr. Justice Simon Noel ruled that some previously secret findings of the commission could be revealed without imperilling national security. Those sections were released Thursday. They reveal: • The Canadian Security Intelligence Service was aware of the U.S. practice of “rendering” terrorism suspects to third countries for interrogation and torture, and that CSIS suspected early on that such a fate had befallen Mr. Arar. • The Royal Canadian Mounted Police was in…

  • Government,  Government of Tamil Eelam,  Politics,  சீனா

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam

    வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு தமிழீழம் எதிரியாக இருப்பது நல்லதா? – 01

    சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய‌ வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். அவர்கள் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அறிவுடையதாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தான் உண்மை. உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு…

  • India,  Politics

    இந்தியாவில் புரட்சி?! – 02

    முத்தமிழ் குழுமத்தின் இழையில்,  ஒப்பாரி வைக்காதீர்கள் கம்யூனிஸ்டுகளே, நடக்கும் கருத்து விவாதத்திற்கு என் கருத்து சரி, எனக்கு கம்யூனிசமோ சோசலிசமோ சனநாயகமோ இந்தியாவிற்கு நல்லது என்று தெரியாது. ஆனால், இன்று இந்தியா மிக மிக ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது. இதை சரிக்கட்ட ஏதாவது தடாலடியாக செய்தாக வேண்டும். அது தான் என் விருப்பம். அதற்காக கம்யூனிசத்திற்கு மாறினால் ஊழல் நின்று போய் விடும் என்று சொல்ல முடியுமா? ஆகவே, ஊழல் செய்யாமல் இருக்குமுகமாக ஒரு சிறந்த கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் காவல் சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் ஒழிய வேண்டும். இன்றய சூழலில், இந்திய இளைஞர்களுக்கு வேலை தேவை. அது தான் முக்கிய பிரச்சினை. பல்கலைக்கழக பட்டதாரி ஆட்டோ ஓட்டிகொண்டிருக்கிறான். அதை வெளிநாட்டு நிறுவனங்கள் நிவர்த்தி செய்கிறதென்றால் அதை அரசு அனுமதிப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா அப்படி அனுமதிக்காவிட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாட்டுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து…

  • Government,  Government of Tamil Eelam,  Politics

    கனடாவின் வளர்ச்சி

    இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை. இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது. வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான். கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா? அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு…

  • India,  Politics

    இந்தியாவில் புரட்சி?!

    என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கு இன்னுமொரு சுதந்திரம் தேவையில்லை. சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்/ விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கு தேவை புரட்சி. எதாவது ஒரு நற் சிந்தனையோடு ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அவரின் வழிகாட்டலில் நாட்டின் கட்டமைப்பை புரட்டிப் போட வேண்டும். கட்டுக்கோப்பான செயல்முறையால் பல புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சற்று கடினமான செயற்பாடுகளால் தான் நிறுவ முடியும். ஃபிரஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதைப் போல். ஆனால், புரட்சி வெடிக்க நாட்டின் நிலமை மிக மோசமாக (அ) பலரின் வெறுப்பிற்கு பின் தான் நடக்கும். இன்றய இந்திய நிலமை மிக நல்ல நாடாகவும் இல்லை, கெட்ட நாடாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலமை. ஆகவே இப்போதைக்கு புரட்சி இல்லை. சரி புரட்சி அமைப்பு ஒன்று இல்லை என்று சொன்னால் சரியாகுமா? புரட்சி அமைப்பு என்பது ஒரு சட்ட பூர்வமாக உருவாவது இல்லை. புரட்சி அமைப்பை வெளியில் இருப்பவர்கள் உருவாக்க இயலாது. அது உள்ளிருந்து [இந்தியாவில்]…

  • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  War of Tamil Eelam

    வரலாறு மீண்டும் வரலாறாகுமா?

    இலங்கை அரசாங்கம் சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அடிகோலுகிறார்கள். இலங்கை அரசாங்கம் சிங்கள இராணுவ வீரர்களுக்கு வீரத்தைப் புகட்டுகிறது. புத்த பிக்குகள் கூட போர் தேவை என்கிறார்கள். சகல போர்களிலும் இலங்கை அரசாங்கமே வெற்றி, புலிகளை துரத்தி அடித்துவிட்டோம் என்று அறிக்கைகள். புலிகளுடனான போரில் நம்பமுடியாத அளவிற்கு புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு சாதகமான கருத்துக்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரிக்கின்றன. ஈழத்தமிழர் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத விற்பனையை குறைத்துள்ளது. பாகிஸ்தானுடனான, இலங்கை அரசாங்கத்தின் தொடர்பு அதிகரிக்கிறது. யாழ் குடாநாட்டுக்கான தரமார்க்க பாதை பல நாட்களாக மூடப்படுகிறது. 5,00,000 யாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரலாமென்னும் செய்தி அறிக்கைகள். மீண்டும் இந்திய இராணுவம் தமிழீழம் வருமா? புலிகள் இந்தியாவில் முக்கிய புள்ளியை கொல்வார்களா? அடுத்த ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை புலிகள் அறிவிப்பார்களா?   _____ CAPital

© 2023 - All Right Reserved. | Adadaa logo