LTTE
-
நாதியற்ற தமிழர் நாம் – 4
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள். இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது. இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும். தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள்…
-
நாதியற்ற தமிழர் நாம் – 3
அ) இந்தியாவிலும், வட ஆபிரிக்காவிலும் நடந்தது பெரும்பான்மை இனத்தோர் சிறுபான்மை இனத்துக்கு எதிரானது. தமிழீழத்தில் மாறானது. ஆ) தமிழீழம் தனி நாடாக வேண்டுமா வேணாமா என்று மொண்டனீக்கிறோவில் நடந்தது போல் ஒரு தேர்தலை வைக்க சிங்கள அரசு என்றைக்கும் விட்டதில்லை. அப்படி ஒரு முறை ஏனும் தேர்தல், இப்போதில்லை, 10 வருடம் முன்பு வைத்திருந்து தோல்வியுற்றிருந்தாலும், நாங்கள் ஆயுதமேந்தி இருக்க மாட்டோம். இ) தாய், தந்தை, உற்றார், உறவினர் எல்லோரும் இறக்க தனியனாய் நிற்கும் சிறுவன் இராணுவத்தைக் கண்டால் கல்லால் எறிவான். வலிமை தேவையில்லை. தானாகவே வரும். சிறுவரை படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள், சிறுவர்கள் ஏன் படையில் சேர முயற்சிக்கிறார்கள் என்று சிந்திக்க தவறுகிறார்கள். ஈ) “உலகம் அடி வாங்குபனுக்கே அனுதாம் செலுத்தும்.” ஆமாம் அது சரி தான். தமிழீழம், எப்போது எத்தியோப்பியா, சோமாலியா போல் வருகிறதோ அப்போது தான் உலக நாடுகள் ஏதோ தாங்கள் பெரும் உதவி செய்வதாக வருவார்கள். UN படை சோமாலியாவிலிருந்து திருப்பி அனுப்பப் பட்டமை அந்நாட்டு மக்களுக்கு…
-
நாதியற்ற தமிழர் நாம் – 2
அனைவருக்கும் வணக்கம் _/|\_ உங்கள் யாரையும் குறை கூறுவதோ. புண்படுத்துவதோ என் நோக்கம் இல்லை அதைநீங்களும் அறிவீர்கள். என் தேசம் அங்கு இரத்ததில் குளிக்கும் போது என் இதயத்துடிப்புத்தான் இங்கு எழுத்துக்களாய் ஒலிக்கின்றது.. ஆனால், இந்திய ராணுவத்தினருடனான மனக் கசப்புகள் யாவும் அனுபவபூர்வமானவையே. இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரியும். இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும்…
-
நாதியற்ற தமிழர் நாம் – 1
ஒரு நாடாக தன்னை நாடி வரும் அகதிகளுக்கு மனிதாபிமான முறையில் தமிழ் நாடு/ இந்தியா உதவிகள் செய்திருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், ஒரு தமிழ் அரசாங்கம் என்னும் முறையில் இன்னொரு தமிழனுக்கு துன்பம், நிகழ்கிறதே அதற்காக மேலதிகமாக எதாவது செய்ததுண்டா? மனிதாபிமான முறையில், உலகிலுள்ள அனேகமான நாடுகள் ஈழத்தமிழனுக்கு உதவி செய்திருக்கிறார்கள். தமிழ் நாடு செய்ததற்கு குறைவில்லாமல் எல்லா ஐரோப்பிய நாடுகளும் செய்திருக்கின்றன. ஏன் கனடாவில் நாட்டின் பிரஜா உரிமை கூட கொடுக்கிறார்கள். அரசியலில் கூட பல தமிழர்கள் இப்போது துளிர்களாய் கால் எடுத்து வைக்கிறார்கள். நம்மவர்கள் பலர் வியாபாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். பல்கலைக் கழக பேராசிரியராய் இருக்கிறார்கள். இங்கு மாத்திரம் அல்ல. உலகில் எங்கெல்லாம் ஈழத்தமிழன் அகதியாய் சென்றானோ, அங்கெல்லம் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில், உலகிலுள்ள ஏனைய நாடுகளை விட [இந்தியா உட்பட] Norway இக்கு ஈழத்தமிழன் எவ்வளவோ நன்றிக்கடன் உள்ளவனாக இருக்க வேண்டும். அகதிகளுக்கும் இடம் கொடுத்து, எங்களுக்கு நேர்மையாகவும் மத்தியச்தம் செய்கிறார்கள். ஈழத்தமிழன் அரச…