Government of Tamil Eelam
-
அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்
எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை]. அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும். இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும். எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு] அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும். நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும். இவை ஒவ்வொரு நாட்டைப் பொறுத்ததுமே. _____ CAPital
-
கோவில்கள் அரசாங்க சொத்தாக்கப்பட வேண்டும்
என்னைப் பொறுத்த வரையில், எந்த மத கோவில்களும் அரசாங்கத்தின் கீழ் இயங்க வேண்டும். ஒரு தனி நபர் கோவிலாகவோ, (அ) ஒரு குழு கோவிலாகவோ இருக்கக் கூடாது. அரசாங்கம் அர்ச்சகர்களுக்கும், போதகர்களுக்கும் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். மத ஆலையங்கள் அனைத்தும் அரசாங்க சொத்தாகக்கப்பட வேண்டும். ஆலையத்திற்கு கிடைக்கும் பணம் முழுவதும் அரசாங்கத்திற்கே போய்ச்சேர வேண்டும். வேணுமென்றால், அந்தக் கோவில் நடத்துனருக்கு (அ) அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு விகிதமோ (அ) பத்து விகிதமோ குடுக்கப்படலாம். இதே விகிதம் தான் எல்லாக் கோவில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் [மத வித்தியாசம் இன்றி]. அர்ச்சகர் தட்டில் விழும் பணம் அர்ச்சகருக்கே போய்ச்சேரலாம். இப்படிச் செய்தால், பணக்கார ஆலையங்களில் வரும் பணம் கொண்டு ஏழை ஆலையங்களையும் சீராக நடத்தலாம். ஏழை அர்ச்சகர்களும் வாழ்க்கை செலவுக்கு கஷ்டப் பட வேண்டியதில்லை. பண வரவின்மையால் கோவில்கள் இழுத்து மூடப்படாமல் தடுக்கப்படும். நாட்டுக்கு ஆலையங்களும் உதவியதாகவும் இருக்கும். _____ CAPital சேர்க்கப்பட்டது I [GMT 2006/07/12…