Government of Tamil Eelam

  • Government of Tamil Eelam,  LTTE,  Tamils

    The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு

    த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம். இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம். ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார் ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத்…

  • Government of Tamil Eelam,  LTTE,  Tamil Eelam,  Tamils,  War of Tamil Eelam

    வித்தாகிப்போன 19,539 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது. 27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு…

  • Government,  Government of Tamil Eelam,  Politics,  சீனா

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

  • Government of Tamil Eelam,  India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    புலி ஆத‌ர‌வு ஏன்?

    ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன? ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும். இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம். இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது. பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது. 1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது. சிங்களம் மட்டும்…

  • Government of Tamil Eelam,  Tamil Eelam

    தமிழீழ தேசிய கீதம் எழுதும் கவிஞர்களுக்கு/ இசையமைப்பாளர்களுக்கு

    தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது. இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய‌ வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது. எந்த‌ ஊர்ப் பெய‌ரோ, மாகாண‌ப் பெய‌ரோ வராமல் இருப்பது நலம்.  தலைநகர் பெயரும் வராமல் இருப்பது நலம்.  எதிர்காலத்தில் தலைநகர் பெயரை மாற்ற வேண்டி வந்தால் (அ) தலைநகரையே மாற்ற வேண்டி வந்தால், பிறகு தேசிய கீதத்தையும் மாற்ற வேண்டியிருக்கும்.  திசைக‌ள் வ‌ர‌லாம். தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்க‌ளாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும். தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம். பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது. இது தேசிய கீதம்.  போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது. தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும். தமிழன்…

  • Government,  Government of Tamil Eelam,  Politics

    கனடாவின் வளர்ச்சி

    இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை. இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது. வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான். கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா? அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு…

  • Government,  Government of Tamil Eelam

    கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

    சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது. ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று…

  • Government of Tamil Eelam

    Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

    Roundabout ===நன்மை=== ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும். தேவையற்ற காத்திருப்பு இருக்காது. சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை. சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும். ===தீமை=== சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும். Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும். சமிஞ்சை சந்திப்பு ===நன்மை=== சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு…

  • Government of Tamil Eelam,  LTTE,  Tamil Nadu,  War of Tamil Eelam

    புலி பற்றிய தமிழ் நாட்டுத் தமிழர் நிலைப்பாடு

    இது ஒரு மிகவும் சிக்கலான விடயம். இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது. ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும், பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது] எல்லா செய்தி ஊடகங்களும் செய்துவிட்டன. இதனால், ஈழத்தமிழர்கள் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சொன்னால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாங்கள் ஏதோ வேண்டுமென்று இந்தியா மீது பழி போடுவதாக எண்ணுகிறார்கள். எங்களுக்கு ஈழத்தின் மேல் உள்ள பாசம் போல் அவர்களுக்கு இந்தியா மேல். தமிழ் நாட்டு தமிழனையையும் கோபிக்கக் கூடாது இந்தியாவையும் நண்பனாக நம்பக் கூடாது. இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது. இதற்காக தமிழ் நாட்டு தமிழனுடன் தர்க்கம் செய்து அவர்கள் மனதை புண்படுத்தினால், அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும். இந்தியா அயலவரான தமிழீழத்தைப் பகைத்துக்கொண்டது போல் தமிழீழம் அயலவரான தமிழ் நாட்டை எக்காலத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தலைவர் சிங்களவர்களையே எதிரியாக நினைக்காமல் சிங்கள அரசை…

  • Government of Tamil Eelam

    முன்னேறு வேகமாக

    பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking] நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா. _____ CAPital

© 2024 - All Right Reserved. | Adadaa logo