Government

  • Canada,  Government,  Politics,  Tamils

    Is conservative government making Canada a racist state?

    I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995.  The whole class is full of immigrants.  I was really in shock.  I used to wonder, how could this be?  The country I’m from does not even handle another set of people – Tamils, while Canada accepts and most importantly welcomes people from all over the world.  We had to write journals everyday in our ESL class.  I remember, I always write about how Canada is a racism free country and how I truly feel the freedom and all. …

  • Government,  Government of Tamil Eelam,  Politics,  சீனா

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

  • Government,  India,  Sri Lanka,  Tamil Eelam

    மே தினத்தில் நம் தொழிலாளிகள் போராடினார்களா?!

    யாரோ தொழிலாளிகளுக்காக மேலைத்தேய நாட்டில் போராடியதற்காக ஏன் நாமும் [இந்தியா, இலங்கை] கொண்டாடுகின்றோம்? சொந்தமாக சிந்திக்கும் மூளை அடிமைக் குணத்தை மிஞ்சவில்லையா? வெள்ளைக்காரன் தன் நாட்டின் மக்களின் பங்களிப்பை நினைவூட்ட நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுகிறான். நாமோ அவன் கொண்டாட்டத்தில் நம் நாட்டு தொழிலாளிகளின் பங்களிப்பைக் கணக்கிலெடுக்கவில்லை. நம் நாட்டுத் தொழிலாளிகளின் பங்களிப்பை நினைவுபடுத்துமுகமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தானே? அப்படி நம் நாட்டுத் தொழிலாளிகள் பங்களைக்கவில்லையா? வெள்ளைக்காரன் செய்தால் அப்படியே பின்னாலே போகும் அடிமைக் குணம் என்று தான் தீருமோ? பாருங்கள் ஒவ்வொரு வெள்ளைக்கார நாடுகளும் வெவ்வேறு நாட்களை தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறார்கள். சில நாடுகள் மே 1ம் திகதி அவர்களுடைய கலாச்சார பண்டிகை நாளாக ஏற்கனவே இருப்பதால் கொண்டாடுகிறார்கள். http://en.wikipedia.org/wiki/Labour_Day http://en.wikipedia.org/wiki/May_Day

  • Government,  Government of Tamil Eelam,  Politics

    கனடாவின் வளர்ச்சி

    இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை. இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது. வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான். கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா? அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு…

  • Government,  Government of Tamil Eelam

    கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

    சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது. ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று…

  • Government

    லஞ்சம் ஒழிக்க ஒரு வழி

    லஞ்சத்தை ஒழித்தால், கடமை தன் செயலைச் செய்யும். நான் விஜகாந்திற்கு ஒரு ஐடியா கொடுக்கலாம் என்றிருந்தேன்.  லஞ்சத்தை ஒழிக்க.. [கி … கி.. கி…] ஒரு அறிவித்தல் விடவேண்டும்.  இன்றிலிருந்து ஒரு 30 நாட்களுக்குள் வாங்கும் லஞ்சம் அத்தனையயும் வாங்குங்கள்.  ஆனால், அந்த திகதிக்குப் பின் எவர் லஞ்சம் வாங்கினாலும் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.  இது தான் தண்டனை.  குறைந்த தண்டனை என்று எதுவுமில்லை.  இப்படிச் செய்தால், வேலையில்லா பட்டதாரிகள் சந்தோசப் படுவார்கள். சில நாட்களுக்குப் பின், மீண்டும் ஒரு அறிவித்தல், எவர் லஞ்சம் வாங்குகிறார் என்று ஆதரபூர்வமாக மக்கள் காட்டிக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு [மக்களுக்கு] லஞ்சத்தின் தொகை இரட்டிப்பாக்கி இலவசமாக அரசாங்கத்தால் கொடுக்கப்படும்.  இப்போ மக்களே முன்னுக்கு வருவாங்கள்.  [ஏன் சில நாட்களின் பின் என்று யோசிக்கிறது தெரிகிறது.  அதாவது ஒரு அறிவிப்பிலேயே மக்கள் அதை சீரியசாக எடுக்க மாட்டார்கள்] சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல்.  அந்த குறிப்பிட்ட திகதிக்கு முன் வாங்கிய/ சேர்த்த [இற்றைவரைக்கும்] சொத்துக்கள் பற்றியோ, லஞ்சம் பற்றியோ எந்தவித நடவடிக்கையும்…

© 2024 - All Right Reserved. | Adadaa logo