சீனா

  • Government,  Government of Tamil Eelam,  Politics,  சீனா

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

  • சீனா,  பொருளாதாரம்

    சீன ஜீன்ஸ்

    நேற்று WNED தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு documentary காட்டினார்கள். அதன் தலைப்பு “China blue”. Independent Lens என்பவர்கள் இதை எடுத்திருந்தார்கள். lifeng என்னும் ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளியைச் சுற்றி எடுக்கப்பட்டது. அந்தப் பெண் கிராமத்தில் இருந்து வேலைக்கு வருகிறா. 17 வயது நிரம்பிய அவ காலை 8 மணியிலிருந்து இரவு 7 மணிவரை வேலைசெய்ய வேண்டும். ஆனால், அனேகமாக “overtime” செய்யவேண்டும் என்று பலகையில் எழுதிவிடுவார்கள். அப்போது தொடர்ந்து இரவிரவாக வேலை செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் காட்டுகிறார்கள். 13 மணித்தியாலம், 15 மணித்தியாலம், 17 மணித்தியாம் என்றெல்லாம் வேலை செய்கிறா. அவ மட்டுமல்ல அந்த தொழிற்சாலையே வேலைசெய்கிறது. overtime வேலையை நிராகரிக்க எல்லோருக்கும் பயம். நிராகரித்தால் வேலை போய்விடும். இதில் என்ன கொடுமை என்றால், எவருக்கும் overtime என்பதற்காக அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. நித்திரை வந்தாலும், சுகமில்லை என்றாலும், கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். செய்யவேண்டிய கட்டாயம். கனடா தொழிற்சாலைகள் போல் punch card system. அதாவது…

© 2023 - All Right Reserved. | Adadaa logo