புராணக் கதைகள்
-
“ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?
ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் அம்மா “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம். இப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை. ______ CAPitalZ