கதைகள்
-
வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!
ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை. ஆண்டவனைப் பிரார்த்திப்போம். எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. ஒருவர் சரியான சாமி பக்தனாம். அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம். அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம். ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம். அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம். சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம். மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார். இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை…
-
“சிங்கம்ல…” சொல்லலாமா
ஒரு பேரூந்தில் [பஸ்] மெலிவான உடலுடைய ஒரு பையன் ஏறி முன்னுக்குள்ள ஒரு இருக்கையில் இருந்தான். பேரூந்து வெளிக்கிடும் தறுவாயில் ஒரு கட்டுமஸ்தான ஆம்பிளை வந்து அவன் முன் நின்று “எழும்புடா..” என்றார். ஆவன் கேட்காதது போல் இருக்க, மீண்டும் அதட்டிய குரலில் “டேய் எழும்புடா” என்று சொல்ல பொடியனும் எழும்பி இடம் கொடுக்க அந்த ஆசாமி உட்கார்ந்தார். அவர் சிரித்துக்கொண்டே “சிங்கம்ல…” என்றார். பொடியனைப் பார்த்து “நான் சிங்மல…” என்று மீசையை முறுக்கிவிட்டு ஏழனமாகச் சிரித்தார். பேரூந்து சில நேரத்தின் பின் பொடியனின் இடம் வந்தது. பொடியனும் இறங்கினான். பேரூந்து மீண்டும் வெளிக்கிடும் தறுவாயில், பொடியன் அந்த கட்டுமஸ்தான ஆள் இருந்த யன்னல் ஓரமாக எட்டி பலமாக “உன் அம்மா காட்டுக்குப் போனாவா, அல்லது சிங்கம் வீட்டுக்கு வந்திச்சா” என்று கேட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடீட்டான். பேரூந்தில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். [இனிமே யாரவது சிங்கம்ல?]
-
“ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?
ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் அம்மா “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம். இப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை. ______ CAPitalZ