பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்
- சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை.
- சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை.
- சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை.
- பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை.
- மதம் கேட்கப்பட்டது.
- மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது]
- ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்:
- வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள்.
- குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில்.
- குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை.
- பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை. அவர்கள் தமக்கென்று ஒரு பாதையை வகுக்கவும் எத்தணித்தது கிடையாது.
- சாதிகளிலே வெள்ளாளர் சாதி [விவசாயம் செய்பவர்கள்] தான் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இந்தச் சாதிக்கும் மற்றய சாதிகளுக்கும் தான் இடைவெளி இருந்தது. [தலைவர் கீழ் சாதிக்காரர் என்பதாலேயே பல வெள்ளாளர்களுக்கு அவர் மீது வெறுப்பு.]
- கோவிலில் தமிழில் பாட தடை இருக்கவில்லை.
- இலஞ்சம் இருக்கவில்லை.
- அதாவது நேர்மையாக எதைப் பெறுவதற்கும் இலஞ்சம் தேவையில்லை. ஏதாவது ஓர் ஆவணம் இல்லை ஆதலால் குறுக்கு வழி உபயோகிக்க இலஞ்சம் தேவைப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், கழவு செய்ய இலஞ்சம் உபயோகிக்கப்பட்டது.
- மத அடிப்படையில் சண்டை பிடித்தது இல்லை.
- விளையாட்டுக் கழகங்கள் சண்டை பிடித்தவை தான்.
- பல்கலைக்கழங்களில் ராக்கிங் இருந்தது/ இருக்கிறது.
- கிறிஸ்தவ சேர்ச் ஐயும் நாங்கள் கோவில் என்று தான் சொல்லி வந்தோம்.
- முஸ்லிம் என்று இல்லாமல், சோனகர் என்று தான் இருந்தார்கள்.
- இந்து என்று இல்லாமல் சைவம் என்று தான் இருந்தது.
- மகாபாரதம், இராமாயணத்தை விட 63 நாயன்மார்களின் கதைகள், பாட்டுக்கள் தான் பாடசாலையில் பயிற்றப்பட்டது.
- கீதையைப் பற்றி நான் கேள்விப்பட்டதே உயர் வகுப்பு படிக்கும்போது தான்.
- தமிழ் நூல்களான மணிமேலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
- ஆங்கிலச் சொற்களின் உபயோகம் மிக மிக அரிது.
- வைத்தியர்கள் தான் பாவித்தார்கள்.
- பிச்சைக்காரனைக் காண்பது மிக மிக அரிது.
- பிச்சக்கரனை சிறுவர்கள் துன்புறுத்தினார்கள் (அ) நக்கல் அடித்தார்கள்.
- வெள்ளைக்காரனைக் கண்டால் நம்மை விட உசர்ந்தவனைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.
- பெண் வீட்டார்கள் தான் மாப்பிள்ளை கேட்கவேண்டும்.
- தாயின் சகோதரனை [தாய்மாமன்] ஒருபோதும் திருமணம் செய்வதில்லை.
- மச்சான், மச்சாள் என்று திருமணம் செய்தார்கள்.
- மாற்றுத் திருமணம் இருந்தது [பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்றார்கள்].
சைவப் பாடமும், தமிழ்ப் பாடமும் தமிழ் நாட்டைப் பற்றியே அனேகமாக இருந்ததால் தமிழ் நாட்டின் மீது ஒரு மதிப்பு. தமிழ் நாட்டுக்கும் நமக்கும் ஏதோ இரட்டைக் குழந்தைகளின் ஒற்றுமை போலும் என்று இருந்தேன். இந்தியாவிற்குள் தான் தமிழ் நாடு இருக்கிறதென்பது பல காலம் கழித்துத் தான் எனக்கு விளங்கியது . காரணம், தமிழ் நாட்டுக்கு ஒரு முதல்வர், இந்தியாவிற்கு ஒரு முதல்வர். இப்படி நம்ம நாட்டில் இருக்கவில்லை தானே.
- எனது ஐயா சொன்னது:
- வடமராட்சியில் [தமிழீழத்தின் வடகோடியில் உள்ள கிராமங்கள்] இருந்து கப்பல்கள் தமிழ் நாட்டுக்கு போய் தங்கம், தமிழ் பத்திரிகை, புத்தகங்கள், புடவை, சறம் என்று கொண்டுவந்தார்களாம். இங்கிருந்து தேங்காய், பாக்கு, கோப்பிக் கொட்டை, ஈயம் ஏற்றுமதி செய்யப்பட்டதாம். [தமிழ்ப் பத்திரிகை, புத்தகங்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கொஞ்சக் காலம் தடை விதித்திருந்தது. அந்தக் கால கட்டத்தில் தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது].
_____
CAPital
One Comment
மூர்த்தி
எளிமையான வார்தைகளில் நிஜம்…!
– மூர்த்தி