Tamil Unicode

தமிழ் ஒருங்குறி ?! -13

நான் இப்போது XP – ல் தமிழை புகுத்தி எழுதுகிறேன்.
அதில் தமிழ் என்று அடிக்க lcfBd என்று அடிக்க வேண்டும். (தலைசுற்றுகிறதா)
இதில் என்ன வசதி இருக்கப்போகிறது. மேலே படியுங்கள்!
ஆனால் மலயாளத்தில் அதே தமிழை அடிக்க அதே lcfBd என்று அடித்தால் போதும்.
lcfBd – തമിഴ് – தமிழ் – இந்த மூன்று சொற்களையும் அடிக்க நான் பயன்படுத்தியது
ஒரே கீகள்தான். மொழியைமட்டும் மாற்றினால் போதும். எவ்வளவு வசதி.

ஆமாம் நீங்கள் சொல்வது சரி. ஒரே கீகளைப் பயன்படுத்தி மற்றய இந்திய மொழிகளைப் பெறலாம். இந்த ஒரே ஒரு இலகுவான விடயத்திற்காக தமிழ் பலதை இழந்துள்ளது. அதிலும் பல வெற்றிடங்கள் உள்ளன. அதாவது, இந்தி மொழியில் உள்ள ஒரு எழுத்து தமிழ் மொழியில் இல்லையென்றால், நீங்கள் சொல்வது போல் செய்ய முடியாது. இப்படி உள்ள வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகத் தான் பல புதிய எழுத்துக்கள் தமிழில் சேர்க்கப்படுகின்றன. புதிதாக சேர்க்கப்பட்ட இன்னுமொரு “ச” எல்லாம் இதன் காரணமே. [ச, ஷ, ஸ, இவற்றை விட இன்னுமொரு ச, அது கிட்டத்தட்ட ஸ மாதிரி இருக்கும் அதே சத்தம் தான் கிட்டத்தட்ட]

இதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? எழுத்துக்கள் ஏற்றுகிறோம், விருப்பம் என்றால் உபயோகியுங்கள், இல்லையேல் உபயோகிக்காதீர்கள். இதே போல் தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் ஏற்றியிருக்கலாமே? விருப்பம் இருந்தால் பாவிப்போம், இல்லையேல் பாவிக்காமல் விட்டிருப்போம்! தப்பை ஏன் ஞாயப்படுத்த எத்தணிக்கிறார்கள் என்று தான் எனக்குக் கோபம்.

சரி என்ன தமிழ் இழந்தது என்று யோசிக்கிறீர்களா?

வேகம்: “போ” என்பது ஒரு குறியல்ல 3 (அ) 2 குறி [3: கொம்பு, பனா, அரவு/ 2: கொம்பு+அரவு, பனா]

இடம்: “போ” என்பதை சேமிக்க 3 (அ) 2 குறியையும் சேமிக்க வேண்டும்
ஒரு பேச்சுக்கு சொன்னால், 1 MB இடம் உள்ள ஒரு கட்டுரையை நீங்கள் எழுதினீர்கள் என்றால் அதை ஒருங்குறியில் சேமிக்க 3 MB இடம் தேவை. ஒரு ஃபுலொப்பியில் சேமிக்க வேண்டியதை மாற்று வழிகள் தேடவேண்டியுள்ளது. ஒரு சாதாரணம் மனிதனுக்கு இந்த பிழை தெரிய வராது. ஏனெனில் அவன் தான் எழுதியதை கணினியில் சேமிக்க 3 MB தான் தேவைப்படும் என்று மட்டும் தான் அறிந்திருப்பான்.
veedikkai ennavenRaal ezhuthiya thamizh kadduraiyai thamingkilishil seemippathaRku thamizhai vida kuRaivaana idangkaLee pidikkum! [வேடிக்கை என்னவென்றால் எழுதிய தமிழ் கட்டுரையை தமிங்கிலிஷில் சேமிப்பதற்கு தமிழை விட குறைவான இடங்களே பிடிக்கும்!]

கையாளும் தன்மை: “போ” என்பது 3 (அ) 2 குறியாக இருந்தாலும் அது ஒரு எழுத்து என்று கணினிக்கு எப்போதும் உணர்த்திகோண்டிருக்க வேண்டும். [ஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களை எண்ணும்போது, வரிசைப்படுத்தும் போது, ஒரு வசனத்தில் இடம் பற்றாமல் சொல்லைப் பிரிக்க வேண்டி வரும்போது]

தகவல் பரிமாற்ற நேரம்: “போ” என்பதை ஒரு கணினியில் இருந்து மற்றய கணினிக்கு அனுப்ப ஒரு குறி பத்தாது, 3 (அ) 2 குறிகளையும் அனுப்ப வேண்டும்.

இவற்றை விட தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றாததால், தமிழ் எந்த ஒரு மென்பொருளிலும் தெரிய அந்த மென்பொருளால் மேலதிக உதவி தேவை. எதற்கு? “போ” என்பது இப்படித் தானே இருக்கு 3: கொம்பு, பனா, அரவு/ 2: கொம்பு+அரவு, பனா. இதை சரியாக ஒழுங்குபடுத்தி கணினித் திரையில் சாதாரண மனிதன் விழங்கிக்கொள்ளக்கூடிய விதமாக தெரியவைக்க.

இப்படித்தானே இவ்வளவு காலமும் இருந்தது இப்ப ஏன் இவ்வளவு கத்துறீங்கள் என்று சிலர் கேட்கக்கூடும். இவ்வளவு காலமும் இருந்ததை விட தமிழ் முன்னேற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சில புத்திஜீவிகள் [ISCII] அதை அளிக்கவில்லை. ஏற்றியவர்கள் தான் பிழையாக ஏற்றிவிட்டார்கள் என்று பார்த்தால் மற்றயவர்களும் பத்தாததற்கு அது சரி என்று வேறு வாதிடுகிறார்கள்.

இந்த குறைபாடுகள் எதிர்காலத்தில், சாதாரண மனிதனுக்கு வித்தியாசம் தெரியாத வண்ணம் இருக்கும். இன்றைய நிஜ உதாரணம்: இப்போது கூட பலர் சொல்கிறார்கள். நான் தமிழில் தானே கணினியில் எழுதுகிறேன். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று [இது 3 MB பிரச்சினை போல் தான் – இப்போது இருப்பதை விட தமிழ் மேலும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை].

 

பாகம் – 14 >>

<<பாகம் – 12

_____
CAPital

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2024 - All Right Reserved. | Adadaa logo