லஞ்சம் ஒழிக்க ஒரு வழி
லஞ்சத்தை ஒழித்தால், கடமை தன் செயலைச் செய்யும்.
நான் விஜகாந்திற்கு ஒரு ஐடியா கொடுக்கலாம் என்றிருந்தேன். லஞ்சத்தை ஒழிக்க.. [கி … கி.. கி…]
ஒரு அறிவித்தல் விடவேண்டும். இன்றிலிருந்து ஒரு 30 நாட்களுக்குள் வாங்கும் லஞ்சம் அத்தனையயும் வாங்குங்கள். ஆனால், அந்த திகதிக்குப் பின் எவர் லஞ்சம் வாங்கினாலும் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார். இது தான் தண்டனை. குறைந்த தண்டனை என்று எதுவுமில்லை. இப்படிச் செய்தால், வேலையில்லா பட்டதாரிகள் சந்தோசப் படுவார்கள்.
சில நாட்களுக்குப் பின், மீண்டும் ஒரு அறிவித்தல், எவர் லஞ்சம் வாங்குகிறார் என்று ஆதரபூர்வமாக மக்கள் காட்டிக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு [மக்களுக்கு] லஞ்சத்தின் தொகை இரட்டிப்பாக்கி இலவசமாக அரசாங்கத்தால் கொடுக்கப்படும். இப்போ மக்களே முன்னுக்கு வருவாங்கள். [ஏன் சில நாட்களின் பின் என்று யோசிக்கிறது தெரிகிறது. அதாவது ஒரு அறிவிப்பிலேயே மக்கள் அதை சீரியசாக எடுக்க மாட்டார்கள்]
சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல். அந்த குறிப்பிட்ட திகதிக்கு முன் வாங்கிய/ சேர்த்த [இற்றைவரைக்கும்] சொத்துக்கள் பற்றியோ, லஞ்சம் பற்றியோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாடாது. இது லஞ்சம் வாங்கியவர்கள் ஏற்கனவே தப்பு செய்துவிட்டேன் இனிமே திருந்தினா மட்டும் என்ன விட்டு விடவா போகிறார்கள் என்று எல்லாத்தையும் சுருட்டிக் கட்டாமல் இருக்க உதவும்.
சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல். அந்த குறிப்பிட திகதிக்குப் பின் அரசாங்கத்தாலேயே மர்ம மனிதர்கள் லஞ்சம் கொடுக்க எத்தணிப்பார்கள். அப்போது லஞ்சம் வாங்கினாலும் அதுவும் அவர்களின் வேலை பறிபோவதற்கு ஆதரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். கனடாவில் கடைகளில் 18 வயதிற்கு கீழ்ப் பட்டவருக்கு கடைக்காரன் சிகரட் விக்கிறானா என்று சோதிப்பதற்கு ஒரு பொடியனை இதற்கென்றே செட்டப் பண்ணி அனுப்புவார்கள். அவன் அணிந்திருக்கும் சாதாரண தொப்பியில் மிகச் சிறிய கமரா இருக்கும் [மிcரொ cஅமெர]. இப்படி ஒரு போடு இந்தியாவில் போடவேண்டும்.
இப்படி அடுத்தடுத்து அறிக்கைகள் விட, மக்கள் ஒரு பரபரப்பிற்கு உள்ளாவார்கள். குறிப்பிட்ட திகதியின் பின் எவர் பிடிபடுகிறாரோ அவரை லஞ்சத்தால் வேலை இழந்தோர் என்று காட்ட வேண்டும். பரப்பான செய்தியாக இருக்க வேண்டும்.
எப்படி என்ற ஐடியா? 😀
யாராவது விஜயகாந்தின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் சொல்லுங்களேன்.
_____
CAPital