தமிழ் ஒருங்குறி ?! -9
எத்தனை பேருக்கு உண்மையிலேயே ஒருங்குறி பிழையால் தான் தமிழ் இவ்வளவு பின்னடைவு என்று தெரியும்? உண்மையாக உரைக்கவும். இந்தப் பின்னடைவுக்கு காரணம் உணராமலே பலர் உள்ளர்.
கூகிள் இவ்வளவு பெரிதாக வருவதற்கு முன்னரே நான் ஒருங்குறி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். தமிழ் பிரச்சினை ஒருங்குறியில் தீரும் என்று பெரும் நம்பிக்கை. ஒருங்குறி என்பது வெறும் font மட்டும் அல்ல. அதற்கு மேலே ஒரு கணினியின் அடித்தள தகுதரம். அத்திவரத்திலேயே தமிழில் குளருபடியென்றால், சுவர்கள் எழுப்ப முடியாதென்றில்லை; ஆனால் weak ஆக இருக்கும்.
இப்படிப் பட்ட ஒருங்குறியிலேயே தமிழ் தெரியவில்லை சில மென்பொருளில். மற்றய மொழிகள் தெரியும் போது ஏன் தமிழ் தெரியவில்லை. நான் நினைத்தேன், தமிழ் உண்மையிலேயே ஒரு கடின மொழி. உயிர், மெய், நெடுங்கணக்கு என்று ஏதோ எதோ இருப்பதால், தமிழ் இவ்வாறு பிரச்சினையாய் இருக்கிறது என்று.
எனக்கு மட்டும் அல்ல, எனக்கு தெரிந்த வரையில் ஒருவருக்கும், தமிழின் கணினித் துரோகம் தெரிந்திருக்க வில்லை. உங்களுக்கும் தெரிந்திருந்ததோ தெரியவில்லை. பலர், தமிழை கணினியில் சும்மா ஒரு அருங்காட்சிப் பொருளாகத் தான் பார்த்தார்கள். நீங்களே கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள், எத்தனை இடங்களில் [ஒருங்குறியில்] தமிழ் பிழையாக தெரியும். எதேதோ வித்தியாசமான் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுக்கு இடையே தெரியும். சில மென்பொருளில் முழுதாகத் தெரியாது. சில மென்பொருளில், தெரியும், ஆனால் எல்லா இடங்களிலும் தெரியாது. [கவனிக்கவும் – இவை திருத்தப்பட முடியாதென்று நான் சொல்லவில்லை]
ஐயா இவ்வளவு காலமும், நானே நினைத்திருந்தேன் தமிழ் மொழி கணினியில் ஒரு கடின மொழி என்றே. சின்னத்துறை சிறீவாஸ், இவர் ஒரு தமிழாராய்ச்சியாளர் tamil_araichchi, tamil-ulagam யாகூ குழுமங்களில் இவருடன் உரையாடலாம்். அவருடைய மின்வலைய முகவரி: http://www.araichchi.net/
இவர் ஒருமடலில் எழுதி இருந்தார், தமிழ் மிகவும் விஞ்ஞான பூர்வமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. சமஸ்கிருதமும் விஞ்ஞான பூர்வமே, ஆனால் அதையும் விட தமிழ் மேலும் விஞ்ஞான பூர்வமானது என்று. அவர் சொல்லியே தொல்காப்பியம் தான் உலக மொழிகளிலிலேயே மிகவும் பழைமாயன இலக்கண நூல் என்று தெரியவந்தது [ http://en.wikipedia.org/wiki/Tolkappiyam ]. அவர் சொன்னது உண்மையானால், தொல்காப்பியத்திலேயே உள்ளது, ஆய்தம், புள்ளி என்னும் சொற் பதங்களும் அவற்றுக்கான பாவனைகளும். அப்படியானால், “அனுஸ்வரா”, “விசர்க்கம்” எல்லாம் பிழை தானே. இதைப் பிழை என்று ஒத்துக் கொள்ளாமல், அதற்கு காரணம் கண்டுபிடிப்பதால் தான் எனக்கு கோபம் வருகிறது. இப்படித் தான், ஒருங்குறியிலும் பிழை உள்ளதை ஒத்துக் கொள்ளாமல், அதற்கு காரணம் கூறுகிறார்கள், இந்திய மொழிகளுக்குள்ளே “பண்ட மாற்று” [transiliteration] செய்யலாம் என்று. பண்ட மாற்று [transiliteration] செய்வதற்கு இந்தியாவிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தான் துரோகம் செய்தார்கள் என்றால் ஏன் நீங்களும் அத் துரோகத்தை மூடி மறைக்கப் பார்கிறீர்கள்? உள் நோக்கம் என்ன? நீங்கள் என்ன ஃகிந்தி மொழி பிரதிநிதியோ (அ) பாதுகாவலனோ?
ஐயா பொய், சொன்னால் குற்றம்; உண்மை, சொல்லாவிட்டால் குற்றம்.
சின்னத்துறை சிறீவாஸ் சொன்னார், ஒருங்குறி வந்தால் தமிழின் அருமை தெரியும் என்று.
ஒருங்குறியை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரிகிறதே, அதற்குள்ளும் ஒர் துரோகம். [இதை தமிழே தெரியாதென்று நான் சொல்வதாக பிழையாக எடுக்க வேண்டாம்]
ஒரு பேச்சுக்கு, தமிழ் மொழியும் வேறொரு மொழியும் [OOM] ஒரே கட்டமைப்பு கொண்டவை என்று வைத்துக் கொள்வோம். ஒருங்குறியில், OOM சரியாக ஏற்றப்பட்டிருந்தால், OOM தமிழை விட எப்பொழுதும் efficiency கூடினதாகவே இருக்கும், கணினியைப் பொறுத்த வரையில். ஐயா அடித்தளம் பிழை என்றால், நீங்கள் என்ன தான் செய்தாலும் ஒரு மேலதிக மென்பொருளின் சேவை எல்லா செயற்பாட்டிலும் தேவையாக இருக்கும் அந்த அடித்தள பிரச்சினையை திருத்தி மற்ற செயற்பாட்டிற்கு கொண்டு சொல்ல.
தமிழுக்கும் கணினிக்கும் உள்ள வெகு தூரம் இத் துரோகச் செயலாலேயே என்ற செய்தி போய்ச் சேரவில்லை. ஏன்?
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக வைத்திருப்பது வெறும் அரசியல் நோக்கத்துக்காகவே என்று தான் சிந்திக்கத் தோன்றுகிறது. vote இக்கு தமிழ், மற்றய எல்லாம் எது இந்திய அரசாங்கம் கொடுக்கிறதோ அதை வாங்குவது. ஆனால் துரோகத்தை மூடி மறைக்க முற்படுபவர்களும் தமிழர்களே என்னும் போது தான் நெஞ்சு பொறுக்குதில்லை!
_____
CAPital