இந்தியா ஐநா சபையில் வெளிநடப்பு!
இந்தியா தமிழின அழிப்பாளிகளில் ஒருவர் என்ற பட்டத்தை, 25,000 மக்களுக்கு மேல் கொன்றும், 30,000 ஆயிரம் மக்களை அங்கவீனராக்கியும், 3,00,000 மக்களுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இடப்பெயரவைத்தும் நிரூபித்திருக்கிறது.
எங்கள் தலைவரைக் கொல்லத் துணைபோனதிலிருந்து, இந்தியா தமிழனின் துரோகி என்பதை நெடுங்காலத்திற்கு உறுதியாக்கிவிட்டது. தமிழ் நாட்டுத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்களே என்று கூட கவலைப்படாமல், தமிழின அழிப்பிற்கு சிங்கள இராணுவத்துடன் துணை நிற்கிறது.
முன்பு இந்திய “அமைதிப் படை” யாய் வந்து செய்த கற்பழிப்புகள் போதாதென்று, இப்போது இந்தியா, இலங்கை அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக ஐநா வரை கைகோர்த்து நிற்கிறது. டென்மார்க் மற்றும் சுவிஸ் நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஆராய வேண்டும்; அதற்கு தனியாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்தது. விடுத்த கோரிக்கையை எதிர்த்து, அதற்கு என்று தனியாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக எதிர்த்த நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், மலேசியா. 17 நாடுகள் இல்லை, மனித உரிமை மீறல்கள் பற்றிய தனிப்பட்ட விவாவதம் வேண்டும் என்று கோரியதால், இவர்கள் எதிர்ப்பு முறியடிக்கப்பட்டது. இந்த முறியடிப்பை எதிர்த்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய நாடுகள் ஐநாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கின்றன. இன்று இந்த மனித உரிமை மீறல் தனிப்பட்ட விசாரணைக்கு வருகிறது. இன்றய தினத்தில் இலங்கைக்கு எதிராக, அல்லது ஆதரவாக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன என்பதைப் பொறுத்தே மனித உரிமை மீறல் குறித்த விசாரணை ஆரம்பிக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
தன் மானத் தமிழனே, பாருங்கள் உங்கள் இந்தியாவின் கொள்கைகளை. தமிழர் படையை அழிக்கத் துணை போய், எம் தமிழினத் தலைவரையும் கொல்லத் துணை போய் முடிந்துவிட்டது என்றாவது… இனிமேலாவது… தமிழன் பக்கம் நிற்கிறதா இந்த இந்தியா? எங்கே அந்த சில பேர்வளிகள், புலிகளைத் தான் இந்தியா எதிர்க்கிறது; பிரபாகரனைத் தான் இந்தியா எதிர்க்கிறது என்று ஐயோ கூயோ என்று கூச்சலிட்டவர்கள். இந்தியா தமிழனுக்கு அல்ல எதிர்ப்பு, புலிகளுக்குத் தான் என்று ஆணித்தரமாக வாதாடியவர்கள் எல்லாம் எங்கே? உங்கள் முகங்களை அங்கே இனப்படுகொலையில் இறந்துபோனவர்களுக்கும் இன்னும் ஏன் இறக்கவில்லை என்று நினைத்து வாடும் எம் தமிழினத்திற்குக் கொண்டு போய்க் காட்டுங்கள்.
எனக்கு என்ன வினோதம் என்றால், தமிழினத்திற்கு முற்றுமுழுதாக ஆதரவாக நிற்கவேண்டிய இந்தியா ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக எதிர்நடப்பு செய்திருக்கிறது. இதில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மேலைத்தேய நாடுகள், மனித நேயத்தைக் காப்பாற்றவேண்டி தமிழர்கள் சார்பாக போராடி வருகிறது.
அன்றுதொட்டு என் கருத்து, இந்தியா தமிழனுக்கு ஒருக்காலும் உதவப் போவதில்லை என்பது தான்; அது தமிழ் நாட்டுத் தமிழனாக இருந்தால் கூட. இன்றுவரை 400 இற்கும் மேற்பட்ட தமிழ் நாட்டுத் தமிழன் சிங்கள இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டுள்ளான். போதாதற்கு, பலரின் உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன [வள்ளம், வலை போன்றன]; பலர் பல நாட்களாக கைதுசெய்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். இவ்வளவிற்கும், இந்தியா ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக, தமிழ் நாட்டுத் தமிழனையும் கொன்றொழித்த சிங்களவனுடன் கைகோர்த்து ஐநா வரை போராடி வெளிநடப்பு வரை செய்கிறது.
“என்ன கொடுமை சார் இது” என்று சொல்லி அழவே தோன்றுகிறது.
2 Comments
சந்திரன்
அருமையான கருத்து! இந்தியா மட்டுமல்ல, தமிழர்களை எல்லா நாடுகளுமே கைவிட்டு விட்டன. மலேசியன் என்ற முறையில், மலேசிய நாட்டின் முடிவு மிக கேவலமானது; அசிங்கமானது!
மூர்த்தி
உன்மை