வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!
ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை.
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.
ஒருவர் சரியான சாமி பக்தனாம். அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம். அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம். ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம். அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம். சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம்.
மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார். இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று. அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.
இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வளியில் தான் உதவுவார். தலைவர் வே. பிரபாகரன் இறைவரனின் அவதாரம்!
2 Comments
rishanthan
வணக்கம் ,
தமிழீழ வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும் நோக்கில் இந்தத் தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது .
http://www.pageflakes.com/rishanthan
இங்கு தங்களின் வலைபூவானது இணைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் .
உங்களை வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முடியவில்லை ,
நன்றி !
சந்திரன்
இது உங்களுக்கே அதிகமாக்ப் படவில்லை! பிராபகரனின் போராட்டங்களில் எனக்கு இரு வேறான கருத்துக்கள் உண்டு. அவரை கடவுளின் அவடதாரம் என்று சொல்வது கேலிக்கூத்து!