“சிங்கம்ல…” சொல்லலாமா
ஒரு பேரூந்தில் [பஸ்] மெலிவான உடலுடைய ஒரு பையன் ஏறி முன்னுக்குள்ள ஒரு இருக்கையில் இருந்தான். பேரூந்து வெளிக்கிடும் தறுவாயில் ஒரு கட்டுமஸ்தான ஆம்பிளை வந்து அவன் முன் நின்று “எழும்புடா..” என்றார். ஆவன் கேட்காதது போல் இருக்க, மீண்டும் அதட்டிய குரலில் “டேய் எழும்புடா” என்று சொல்ல பொடியனும் எழும்பி இடம் கொடுக்க அந்த ஆசாமி உட்கார்ந்தார். அவர் சிரித்துக்கொண்டே “சிங்கம்ல…” என்றார். பொடியனைப் பார்த்து “நான் சிங்மல…” என்று மீசையை முறுக்கிவிட்டு ஏழனமாகச் சிரித்தார்.
பேரூந்து சில நேரத்தின் பின் பொடியனின் இடம் வந்தது. பொடியனும் இறங்கினான். பேரூந்து மீண்டும் வெளிக்கிடும் தறுவாயில், பொடியன் அந்த கட்டுமஸ்தான ஆள் இருந்த யன்னல் ஓரமாக எட்டி பலமாக “உன் அம்மா காட்டுக்குப் போனாவா, அல்லது சிங்கம் வீட்டுக்கு வந்திச்சா” என்று கேட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடீட்டான்.
பேரூந்தில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
[இனிமே யாரவது சிங்கம்ல?]
5 Comments
cheenஅ(சீனா)
எவனும் இனி வாயெத் தொறந்து சிங்கம்லே ன்னு சொல்லக் கூடாது.
cheena(சீனா)
எவனும் இனி வாயெத் தொறந்து சிங்கம்லே ன்னு சொல்லக் கூடாது. – பய ஒல்லியா இருந்தாலும் கில்லாடி தான்
karthikeyan@ Purasai
இனி யவனும் இப்படி சொல்ல மட்டான்னு இருந்தலும் நான் சொல்ல மாட்டேன்
சத்யா
நானும் வாய் விட்டு சிரித்தேன்….:)
சாஜு
யவனாவது இனி சீங்கம் என சொல்வானா.