தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீடு
இது தாங்க தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீடு. இப்படித் தான் இறுதியாக வந்த சமாதான காலத்தில் இருந்தது.
என்ன ஆச்சரியம், எத்தனை பேரின்ரை வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தாலும், தலைவரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்கள். [பெயின்ற் இப்போது அடித்தது, ஆனால், கட்டிடம் பழைய கட்டிடமே].
தலைவர் முதன் முதலில் சிங்கள இராணுவம் வீடு தேடி வந்தபோது ஒளிந்திருந்த மரமும் தெரிகிறது.
எனது பெற்றோர் சமாதான காலத்தில் தமிழீழம் சென்றிருந்த போது அவர்கள் போய்ப் பார்த்தார்கள்.
இதில் இன்னும் விசேடம் என்ன தெரியுமா? சமாதான காலத்தில், சிங்கள ஊர்களில் இருந்து பேரூந்து சுற்றுலா வந்து எல்லாம் பார்த்தார்களாம். சிலர் போகும்போது ஒரு பிடி மண் எடுத்துக்கொண்டும் சென்றார்களாம்.
எதிர் காலத்தில் இந்த வீடு ஒரு பெரும் சுற்றுலா தலமாக வந்தாலும் வரும், தமிழீழம் கிடைத்த பின்.
தலைவரைப் போல் இந்த வீடும் என்றும் சாயாது இருக்க வேண்டும்.
2 Comments
kumaran
இதை 1 மாதத்திற்கு முன் சிங்கள படை இடித்ததாக செய்தி வந்ததே.. அது சரியான தகவலா??
capitalz
சரியானதே குமரன்.
ஆனால், சேதப்படித்தியதாகத் தான் செய்தி. முற்றுமுழுதாக இடுத்தார்களா இல்லையா என்பது தெரியாது.
நன்றி குமரன், உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.