[தமிழ் நாடு பயணம்: 2] இந்தியா போகும்போது எடுத்துச்செல்ல வேண்டியவை
ஒரு வழியாக இந்திய விசா திக்கித் திணறி கடைசி நேரத்தில் எடுத்தாச்சு.
இந்தியா முதல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவது வருத்தங்கள் வந்துவிட்டால். உடனே வைத்தியரிடன் போனேன். டெங்கு காச்சலுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க மருத்துவர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வருடங்களுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிறகு Travel Clinic இற்குப் போகும்படி சொன்னார். சரி முதன் முதலில் போகிறேனே அதையும் செய்வமே. அவருக்கு fees $85. அவர் சொன்னது இவை தான். தண்ணீர் போத்தலை வாங்கிக் குடி. நன்றாகக் காய்ச்சாத எதையும் சாப்பிடாதே. அப்பவே யோசித்தேன், அப்படியாயின் “கையேந்தி பவனில்” சாப்பிடலாம். அது நல்லா சமைச்சது தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க, நண்டு, றால், மட்டி இப்படி. எனக்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட இதல்லாம் சாப்பிடக்கூடாதா. ஆ, டாக்டர் கிடந்தார், மனதுக்குள் யோசிச்சுக் கொண்டேன். கனடாவில் நல்ல உணவின்றி நா வறண்டு போய்க் கிடக்குது. தமிழ் நாடு போய் எங்கள் ஊரில் போல் எல்லாம் இருக்கும் அதை ஒரு வழி பாக்காவிட்டால் பிறகேன் தமிழ் நாடு போய்?
அவர் சொன்ன ஒரே நல்ல விசயம், அந்த நுளம்பு வலை வேண்டிக் கொண்டு போகச் சொன்னது. இதை விட, நுளம்புக்கு தோலில் அடிக்க, துணிக்கு அடிக்க, வயிற்றுப் போக்கிற்கு என்று விதம் விதமா என்கிட்ட spray/ குழுசை எல்லாம் வித்தாரப்பா. மலேரியா காச்சலுக்கு என்று குழுசையும் வாங்கச் சொல்லி அதுவும் ஒரு $100 மேல் வாங்கிப் போனனான்.
இந்தியா போகிறவங்க, நுளம்பு வலையைத் தவிர வேறு ஏதையும் வாங்கிக்காதீர்கள். ஓ, மற்றது வயிற்றுப் போக்கிற்காக Gastric trouble இற்கு என்று ஒரு குழுசை box விற்குது [Imodium Advantage – Rapid Relief of Diarrhea]. அதை மறக்காமல் வாங்கிப் போங்கோ. இந்தியாவில், வெகு தூரம் பயணிக்க வேண்டி வந்தால், இந்தக் குழுசை ஒன்றை காலையிலேயே போட்டுவிட்டால், அன்று பூராவும் மலம் கழிக்க வேண்டி வராது. இதைத் தான் நாங்கள் பயன்படுத்தினோம். இந்தியாவில் உங்கள் வீட்டையும், விலை அதிகமான Hotel ஐயும் தவிர வேறு எங்கும் மல சலம் கழிக்க ஆண்களுக்கே கொஞ்சம் அருவருப்பாகத் தான் இருக்கும். பெண்களுக்குச் சொல்லவே தேவையில்லை. இடையில் வாகனத்தை நிறுத்தி உணவு உண்ணும் Restaurant களில் மல சலம் கழிப்பது என்பது மிகவும் அருவருப்பான வேலை. Contact Lens பாவிப்பவர்கள், Contact Lens liquid வாங்கிக் கொண்டு போங்கள்.அங்கு அதை வாங்கலாம். ஆனால், போய் இறங்கியே கடைக்கு போவதைத் தவிர்க்கலாம் இல்லையா. இந்திய காசும் கொஞ்சம் மாற்றிக் கொண்டு போங்கள். போய் இறங்கி, விமான நிலயத்தில் மாற்றினீர்கள் என்றால், மிகக் கூடிய கழிவு கொடுத்தே மாற்ற வேண்டி இருக்கும். வயது போனவர்களுடன் போகிறீர்கள் என்றால், விமான சீட்டை பதிவு செய்யும்போதே wheelchair assistance தேவை என்று மறக்காமல் பதிவு செய்து விடுங்கள். அவரைச் சாட்டி நீங்களும் எதிலும் முதலுரிமை எடுத்துக்கொள்ளலாம். மிகப் பெரிய வரிசைகளில் எல்லாம் நீங்கள் நிற்கத் தேவையில்லை. customs checking கூட உங்களுக்கு என்று தனியாக இருக்கும், இலகுவாகக் கூட இருக்கும்.
என் மனைவி என்னைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று யோசித்தார். அவ ஒரு 6 தடவை இந்தியா போய் வந்துவிட்டார். அவ ஒரு குழுசையையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. நான் கிலோ கணக்கில் குழுசையுடன்.
Jet Airways இல் இந்தியா போகப் புறப்பட்டோம். நெடுந்தூரப் பயணம். இடையில் பெல்ஜியத்தில் சிறிது நேரம் [2 மணித்தியாலங்கள்] நின்றது. கன நேரமாகவே தெரியவில்லை. விமானத்தில் உபசரிப்புகளும் நன்றாகவே இருந்தது. Singapore Airline குப்பை என்று எனது மாமா மாமி சொன்னார்கள். அட இந்தியாவிற்குப் போகும் விமானத்தில் இந்தியர்கள் குடித்துவிட்டு பெண்களுடன் சேட்டையும் கிண்டலுமாகத் தான் இருக்குமாம்.
விமானத்தில் பயணிக்கும்போதே, நான் தமிழ் நாட்டு நேரத்தைக் கணக்கிட்டு அங்கு எப்போது இரவாகுமோ, அப்போது தான் நித்திரை கொண்டேன். மற்றவர்கள் எல்லோரும் கனடா நேரத்திற்கு நித்திரை கொண்டிருந்த வேளையிலும் நான் படத்தைப் பார்த்துக்கொண்டு முட்ட முட்ட முளித்திருந்தேன்.
2 Comments
Pingback:
Pingback: