இந்தியாவின் உதவி
ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வருகிறேன்.
தமிழீழ உணர்வை உணராமல் “உதவி” என்பது உதவியல்ல.
தமிழீழம் தான் வேண்டும். புலிகள் தான் எங்கள் அரசு. உணர்ந்து செய்வதே “உதவி” என நினைக்கப்படும். இல்லையேல் “துரோகம்” என [இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் நடந்தது போ] நினைக்கப்படும்.
என்ன தான் தலை கீழாக நின்றாலும், “தமிழீழம்” தான் முடிவாக இருக்க வேண்டும். இல்லையேல் யார் செய்வதும் “உதவி” என்று கணக்கில் எடுபடாது. இதுவே இப்படி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி தமிழீழத்தை தடுக்க எடுக்கும் எந்த சிறு செயலும் “துரோகம்” என்றே எண்ணப்படும்.
இது தான் அன்றும் நடந்தது.
புலிகள் எங்களின் வலிமைமிக்க படை. பிரபாகரன் எங்கள் தலைவர். தமிழீழம் தருகிறோம் பிரபாகரனைத் தாருங்கள் என்று சொன்னால் கூட தாரை வார்க்கத் தயாரில்லை. ஏனென்றால், நாங்கள் பலமுறை ஏமாந்து போனோம். இலங்கையிடம் கணக்கிலடங்கா முறையும், இந்தியாவிடம் கூட ஏமாந்து போனோம். இனி தலைவரைத் தவிர வேறெவரையும் நம்பத் தயாரில்லை.
சமாதான காலந்தொட்டு பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் [NGOs] தமிழீழ மக்களுக்கு உதவி வருகின்றன. பல நாடுகள் தமிழீழ மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து எவ்வளவோ வசதிகள் செய்து தருகின்றன. தமிழ் நாட்டு மக்களிடம் அதை விட மேலதிகமாக எதிர்பார்க்கிறோம். வேற்றான் உதவிய அளவே சகோதரனும் உதவி செய்வதென்றால், வேற்றானுக்கும் சகோதரனுக்கும் என்ன வித்தியாசம்?
எத்தனை வருடங்கள், எத்தனை இழப்புக்கள், எத்தனை வலிகளைக் கடந்து வந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து சாப்பிடுங்கள் என்றால் கோபம் வராமல் வேறு என்ன வரும்?
சீன கதை/ பழமொழி: ஒருவனுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவனுக்கு அன்று உண்வு. ஆனால், அதே நபருக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உணவு.
எத்தனை முறை இப்படியே சோறு தந்து “உதவப்” போறீங்கள். நாங்களாக சோறு செய்ய உதவுவது தான் வேண்டும்.
சாதாரணமாகவே ஒருவன் நெருங்கிய உறவினர்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பான் மற்றயவர்களை விட. அதே போல் தான் தமிழீழ மக்களும் தமிழ் நாட்டிடம் மற்றய உலக நடுகளை விட அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட இலங்கை” என்று சொல்லி எங்களுக்கு கோபத்தைத் தான் கூட்டுகிறது.
இவ்வளவு காலத்திற்கு பிறகாவது, தமிழீழம் கிடைக்கும் மட்டும் இவர்கள் ஓயமாட்டர்கள் என்பதை உணரவேண்டும். தமிழீழம் நிச்சயம். இந்தியாவின் சம்மதத்தோடோ (அ) இல்லாமலோ, தமிழீழம் மலரும். அது இந்தியாவால் மலர்ந்தால் எல்லோருக்கும் நல்லது.
உண்மையில் உதவ எண்ணினால், தமிழீழம் உருவாகுவதற்கு குரல் கொடுங்கள்.