மே தினத்தில் நம் தொழிலாளிகள் போராடினார்களா?!
யாரோ தொழிலாளிகளுக்காக மேலைத்தேய நாட்டில் போராடியதற்காக ஏன் நாமும் [இந்தியா, இலங்கை] கொண்டாடுகின்றோம்?
சொந்தமாக சிந்திக்கும் மூளை அடிமைக் குணத்தை மிஞ்சவில்லையா?
வெள்ளைக்காரன் தன் நாட்டின் மக்களின் பங்களிப்பை நினைவூட்ட நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுகிறான். நாமோ அவன் கொண்டாட்டத்தில் நம் நாட்டு தொழிலாளிகளின் பங்களிப்பைக் கணக்கிலெடுக்கவில்லை.
நம் நாட்டுத் தொழிலாளிகளின் பங்களிப்பை நினைவுபடுத்துமுகமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தானே? அப்படி நம் நாட்டுத் தொழிலாளிகள் பங்களைக்கவில்லையா?
வெள்ளைக்காரன் செய்தால் அப்படியே பின்னாலே போகும் அடிமைக் குணம் என்று தான் தீருமோ?
பாருங்கள் ஒவ்வொரு வெள்ளைக்கார நாடுகளும் வெவ்வேறு நாட்களை தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறார்கள். சில நாடுகள் மே 1ம் திகதி அவர்களுடைய கலாச்சார பண்டிகை நாளாக ஏற்கனவே இருப்பதால் கொண்டாடுகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Labour_Day
http://en.wikipedia.org/wiki/May_Day