தமிழா நீ?
எனக்கும் என் சகோதரனுக்கும் பிரச்சினை. அடுபட்டுக்கொள்வோம். எனக்குத் தேவையான சொத்தை பிரித்துத் தா என்று பேசுவோம்.
பக்கத்து வீட்டுக்காரன் எனது சகோதரனை எங்கோ வீதியால் போகும்போது அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டான் என்றால் நானும் கசோதரனும் ஒன்று சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடுவோம்.
அயலூர்க் காரன் நம்ம ஊரில் நாட்டாமை செய்தால், பகைமையை தள்ளிப்போட்டு ஒன்றுசேர்ந்து அவனை எதிர்ப்போம்.
சரி பக்கத்து மாகாணக் காரன் எம்மை அடிமைப்படுத்த முயல்கிறான் என்றால், அயலூர்க் காரனையும் ஒன்று சேர்த்து பக்கத்து மாகாணக் காரனுடன் சண்டை போடுவோம்.
பக்கத்து நாட்டுக்காரன் போர் தொடுக்கிறான் என்றால், எங்கள் மாகாணப் பிரச்சினையை தள்ளிப்போட்டு விட்டு ஒன்று சேர்வோம்.
பிரித்தானியா கிட்லருடன் போர் தொடுக்கும்போது இந்தியாவும் பிரித்தானியாவிற்குத் தானே உதவியது. அன்று பிரித்தானியா அடிமைப்படுத்துகிறவன், அவனை கிட்லர் அழிக்கட்டும் என்று சும்மா இருந்திருந்தால் கிட்லர் இந்தியாவைப் பிடித்திருப்பான்.
வேண்டாம், ஒரு வேறு கிரக மனிதர்கள் [alien] எமது பூமி மேல் போர் தொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்கன் காரன் சண்டை பிடிக்கட்டும், அவன் சர்வாதிகாரி, அழிந்து போகட்டும் என்று நாங்கள் இருந்தால் என்ன நடக்கும்? வேற்று கிரக மனிதன் அமெரிக்காவை வென்றுவிட்டால், அடுத்து மற்றய நாடுகளைத் தானே குறி வைப்பான்? ஆகவே நம் வேற்றுமை மறந்து அமெரிக்கனுடன் கைகோர்த்து அவனை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வளவு ஒற்றுமை சேர்ந்தாலும், எனக்கும் என் சகோதரனுக்கும் உள்ள பிரச்சினை இன்னும் தீராதது தான். அதை விட பெரிய பிரச்சினை வந்ததால், எதிராளி பகையாளி எல்லாம் வேறோர் காரணுத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோமே தவிர, அந்தப் பெரிய பிரச்சினை தீர்ந்தால் பிறகு சின்னப் பிரச்சினைகள் தலை தூக்கும். அவற்றையெல்லாம், மூல காரணங்கண்டு தீர்க்க வேண்டும். அதற்காக நானும் சகோதரனும் இன்னமும் அடிபட்டுக்கொண்டிருந்தால் நட்டமடைவது சகோதரன் மட்டுமல்ல நானும் தான். எதிராளி பலமற்று பிரிந்து நிற்கும் இருவரையும் ஏறி உளக்கி விட்டுப் போய்விடுவான். எங்களுக்குள் பிரச்சினை வரலாம். சகோதரத்துவ சண்டை. அண்ணா தம்பியை அடிக்கலாம், அம்மா அண்ணனை அடிக்கலாம்; தப்பில்லை. ஆனால், அன்னியன் சகோதரனைக் கொல்கிறான் என்று தெரிந்தும் நீ சும்மா இருந்தால், சகோதரனைக் கொன்ற பின் அன்னியன் அடுத்த குறி உன்மேல் தான் வைப்பான்.
அடித்துக்கொள்வதும் பின் ஒரு common interest இன் பேரில் ஒன்று சேர்வதும் இயற்கையே. இந்த common interests தான் சாதி, மதம், நிறம், மொழி, நாடு என்பன போன்றவை.
நாம் தமிழர் என்ற ரீதியில் ஒன்று சேர்வோமா?