வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு தமிழீழம் எதிரியாக இருப்பது நல்லதா? – 01
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள்.
ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள்.
அவர்கள் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அறிவுடையதாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தான் உண்மை.
உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா?
அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு எதிர்ப்பு என்பதற்காக தமிழினத்தை ஒழிக்க வழி கோலாதீர்கள்.
அமெரிக்காவின் உலக ஆட்சி குறைந்து கொண்டு வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனேகமாக எல்லோரும் அமெரிக்காவை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். ஆதலால், இனி யார் உலகை ஆழப்போவார் என்று யோசித்து அவரை கைக்குள் போடவேண்டும். எங்கள் பிராந்தியத்தைப் பொறுத்த வரையில் இந்தியா, சீனா தான் இருக்கிறது. இதில் எவர் பலம் வாய்ந்தவராக வருவார் என்று நீங்களே தீர்மானியுங்கள்.
இலங்கை அரசால் புலிகளை ஒழிக்க முடியவில்லை. இந்திய அரசாலும் ஒழிக்க முடியவில்லை. இந்திய இலங்கை கூட்டரசாலும் புலிகளை ஒழிக்க முடியவில்லை.
ஆகவே வல்லவனை எதிர்ப்பதை விட வளைத்துப் போடுவது தான் வல்லரசாக வர எத்தணிப்பவருக்கு நல்லது என்று நினைக்கிறேன். அதிலும் இந்தியாவின் அயல் நாடு தமிழீழம். சீனா வளைத்துப்போட்டால், இந்தியாவின் புற்றுநோயாகி விடும்!
அதன் பிறகு என்ன நடக்கும் என்று சீனாவின் கையில் தான் இருக்கும். இந்தியாவிற்குள் எல்லோரும் ஒற்றுமையாய் வாழவில்லை. அப்பப்போது குண்டு வெடிக்குது, அப்பப்போது மதக் கலவரம் என்று நடக்குது. போதாததற்கு மதத்திற்கு என்று ஒதுக்கீடுகள் வேறு. இது போதும் இந்தியாவை பிரிக்க. இப்போது பிரியாமல் இருப்பதற்கு காரணம் எந்த மாநிலமும் சுயேட்சையாக தன்னை பொருளாதாரத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியாமை. எப்போது ஒரு மாநிலம் தன்னை பொருளாதார ரீதியில் [நாடாக] தக்க வைத்துக் கொள்ள முடியுமோ, எப்போது அது இந்திய அரசுடன் முரண்படுகுதோ அப்போது அந்த மாநிலம் பிரிவினையைப் பரிந்துரைக்கும். அப்போ சீனா முழு உதவி கொடுக்கும். ஏன் பாகிஸ்தானும் கொடுக்கும். சீனா இராணுவ உதவி கொடுத்தால் மட்டுமே போதும் [வட கொரியாவிற்கு கொடுத்தது போல்]. அப்போது தமிழீழத்தின் நேச நாடாக இந்தியா இருக்காவிடில், தமிழீழம் வாயிலாக இந்திய பிரிவினைவாதிகளுக்கு சீனா உதவி செய்ய தமிழீழ மக்கள் அனுமதிப்பார்கள் [நாங்கள் கஷ்டப்படும்போது எங்களுக்கு சீனா தானே உதவியது, அதற்காக என்று]. இலங்கை ஏற்கனவே சீனாவின் நேச நாடுதான் [சிறீமாவோ பண்டார நாயக்கா காலத்திலிருந்து]. போதாததற்கு பாகிஸ்தானின் நேச நாடு கூட [சொல்லவா வேண்டும்?]. பிறகென்ன ரஷ்யா எப்படி பிரிந்ததோ அப்படி தான் இந்தியா பல கூறாகப் போய்விடும்.
இவற்றை எல்லாம் தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா சிந்திக்குமானால், இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும். உண்மையில் றோ [RAW] விற்கு புத்தி இருக்கா என்று வருங்காலம் பதில் சொல்லட்டும்.
விரைவில் பாகம் – 02 >>
பி.கு.: இந்தியாவிற்கு எதிராக எழுதியிருப்பதாக என்னைத் திட்டித் தீர்க்க வேண்டாம். எப்போது இந்தியா வல்லரசாக வரவேண்டும் என்று தீர்மானம் எடுத்ததோ அப்போதே இப்படியும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ரஷ்யாவிற்கு நடந்தது வரலாறு.
_____
CAPital
5 Comments
Nagesh
Hi,
I totally disagree with your points. You can’t threaten India like this. This kind of commanding tone cannot bring support to Tamileelam…India cannot be seperated, we beleive in “Unity in Diversity”..we may have many problems, people may fight…but we will never seperate and also we can’t tolerate this kind of arogant predictions.
I too personally want Tamileelam to be formed, but i din’t like the tone of your article.
– Nagesh
CAPitalZ
Can you name one strong ally of India?!
Can you name enemies of India? [Pakistan, China, and probably [if not enemy] Bangladesh and Nepal does not like India]
Can you name ally of China? [North Korea, Russia, and certainly not enemy is Japan]
Can you name ally of US? [Britain, Canada, and certainly Europe is not an enemy]
Well, ofcourse it could not be the way I said. It is a possible prediction. India has decided to step on its race to be a superpower, without even a single strong ally! Worst, all f its neighbours are enemies!
If its not for Pirabaharan, LTTE would have asked China’s help long time ago. LTTE would have got help from China when it was fighting against India, the toughest times of LTTE. It is his long term thinking that stopped him from getting help from China. He did not want to oppose Tamil Nadu people by shaking hands with India’s rival. He said it would put a non erasable mark in the minds of Tamil Nadu people that LTTE went against them by getting help from India’s rival.
Imagine if only LTTE asked help from China or Pakistan, during LTTE-Indian war, do you think they would say no?
People of Tamil Eelam has already tasted the bitter taste of India, when it raged war as IPKF. Now the Tamils is losing patience trying to not get help from India’s rivals.
– If Tamil Eelam is attained WITHOUT the help of India, Tamil Eelam people will hate India forever.
– If Tamil Eelam is attained WITH the help of another nation, be it China or something, Tamils will support and help the other nation when there is a war between India and the other nation. It is this that I wrote in my post. This is natural. You help whoever helped you. It does not mean we take part in the war, but we allow the other nation to use our nation, as Sri Lanka allowed Pakistan war planes to use Sri Lanka when Pakistan was fighing India before!
– If Tamil Eelam is NOT attained in the period of Pirabakaran, the next leader to come WILL ask for another nation’s help, be it China or something without any worries of India not being a friend, and the Tamils WILL definitely urge the new leader to ask help, since we would be force to think without another nation’s help it would be impossible. Many Tamils have already lost hope, that India would help. Already people wants another powerful nation’s help. It is Pirabakaran that is reluctant in doing this.
So it is safe for India that either Tamil Eelam is attained before Pirabakaran passes away, or India help Tamil Eelam to be recognized. If neither happens, India will have to add another bitter enemy on its south shore in its huge list of enemies!
Imagine China attacks India from the South and Pakistan attacks in the North. Multi Front Line Battles with all countries have nuclear bomb! It is pretty ugly isn’t it?
இவன்
நீங்கள் சொல்லுவது எம்மை யோசிக்க வைக்கிறது. இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவஉதவியை தர மறுத்ததும் இலங்கை பாக்கிஸ்தானின் ராணுவ உதவியை நாடியது. இன்நிகழ்வு கடந்த ஓர் ஆண்டுக்குள் நடந்தது.
என் எண்ணம் என்னவென்றால், இந்தியா உளவுத்துறை நீங்கள் மேற்கூறிய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் பொருட்டும், இலங்கை பாக்கிஸ்தானின் கூட்டை தவிர்க்கும் பொருட்டும், புலிகள் மீது கலங்கம் சுமத்தி இலங்கை அரசுக்கு உதவுவதன் மூலம் பாக்கிஸ்தானின் தலையீட்டை இலங்கையில் தவிர்கிறதோ என்னமோ?
அப்பனே முருகா என் உறவுகள் நிம்மதியுடன் வாழ வெகுவிரைவில் ஓர் வழி சொல்லப்பா…
capitalz
நீங்கள் சொல்வது தான் இத்தனை காலமாக நடக்கிறது என்பது என் எண்ணம். ஆனால், தமிழீழம் வென்றுகொண்டிருக்கிறது. இனிமேலும் இந்தியா இலங்கை அரசிற்கு சார்பாக இருந்தால், இந்தியா தோற்றவர் கூட்டணியில் இருக்கும்; தமிழீழத்தின் எதிரியாய்.
இராவணன்
நீங்கள் சொன்ன கருத்தை நான் ஆதரிக்கிறேன். இந்தியா விழித்துக் கொள்ளுமா என்ற வினாவிற்கு பதில் காலத்திற்கே வெளிச்சம்….