வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்!
இன்று திலீபன் நினைவு நாள்.
கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் களவாக ஆரேஞ் ஜூஸ் குடிப்பது போல் இல்லாமல், உண்மையிலேயே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உயிரை மாய்த்துக்கொண்ட நெஞ்சழுத்தக் காரன். குளிக்கும் போது கூட வாயிற்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொண்டவன்.
ஒரு முறை தான் இருந்தான், மறுமுறை இருந்து விடுவானோ என்று பயத்தில், அனுப்பி விட்டார்கள். காந்தி எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது (அ) சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் சந்தித்து வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. அது வெள்ளைக்காரன். ஒரு முறை கூட, இவரை விட்டால் மீண்டும் மீண்டும் இருப்பார் என்று, சாக விடவில்லை. காந்தியை சாக விடக்கூடாது என்று தான் கட்டளையாகவே இருந்ததாம்.
அகிம்சையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காந்தி பிறந்த தேசம், அகிம்சாவாதிகள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள், அகிம்சையாக இருந்த திலீபனுடன் வந்து கதைக்கக் கூட இல்லை.
உயிர் பிரிந்த பின், வருத்தப்படுகிறோம், கவலைப்படுகிறோம்; அறிக்கைகள்.
என்ன இருந்தாலும், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்.
______
CAPital